செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சுட்டது தேனியில்

 கேபி துரோகியா யதார்த்தவாதியா  
(பகுதி-2)
-மேதகு பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் (தாயகம்)
KumaranPathmanathanஇதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால். தங்கள் மீது விமர்சனம் வைக்கும் எவரையும் வெளிநாட்டு உளவுநிறுவனங்களின் கைக்கூலிகள் என்று துரோகி பட்டம் சூட்ட தயங்காத புலி ஆதரவாளர்கள். கேபி சர்வதேச உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்பட்டதை பெருமையாகக் கருதிக் கொண்டது தான் ஏகாதிபத்திய எதிர்ப்பையே தங்களின் அரசியல் மூச்சாகக் கொண்ட இடதுசாரிகளும் புலிகளுடன் ஒட்டிக்கொண்ட போது. இது பற்றி வாயே திறக்கவில்லை இந்த உளவு நிறுவனம் எது என்று சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.
இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் சில ஊகங்களுக்கு நாங்கள் வர முடியும். செப்டம்பர் 11 தாக்குதலின் பின் பயங்கரவாதம் பற்றிய அமெரிக்கக் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமான புலிகள் பற்றிய சர்வதேசக் கருத்தும் கதிர்காமர் கொலையின் பின்னால் முற்றாகவே மாறி விட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க புலிகளைக் கருவியாகப் பயன்படுத்த அமெரிக்கா முனைந்தாலும். பிந்திய சூழலில் புலிகள் கட்டுக்கடங்காத அடங்காப்பிடாரியாக மாறிய நிலையில். இந்தியா சோவியத் அணியின் சார்பு நாடு என்பதை விட அமெரிக்க முதலீட்டுக்கான சந்தை என்ற நிலை தோன்ற. புலிகள் என்ற அமைப்பு இந்தப் பிராந்தியத்தில் இருப்பதற்கான தேவை இல்லாமல் போய் விட்டது. எனவே புலிகளை பூண்டோடு அழிப்பதற்கான முயற்சியில் கே.பியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முயன்றிருக்கக் கூடும். கே.பி கைது என்ற செய்தியின் பின்னால் நீண்ட காலம் கே.பி பற்றிய தகவல்கள் வெளியில் வரவே இல்லை.
காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக. கே.பி கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்ததன் பின்னால் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாக புலிகளின் ஆயுதக்கப்பல்கள் கடலில் வைத்து அழிக்கப்பட்டன. கேபி இயக்கத்திலிருந்து தொடர்புகள் அற்ற டிசம்பர் 2002 இலிருந்து 2006 வரையுமான காலப் பகுதியில் சமாதான முயற்சிகளுக்குள்ளும் புலிகள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டிருந்தது பரகசியம். அப்போது ஒப்பந்தத்தை மீறி புலிகள் ஆயுதம் கொண்டு வரும் விபரங்கள் அரசுக்கு தெரிந்திருந்தால். அதை அரசு அழிக்கத் தயங்கியிருக்காது. ஆனால் இந்த இடைவெளியில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் பெரிதாக மூழ்கடிக்கப்படவில்லை. 

கே.பி கைது செய்யப்பட்ட ஆண்டான 2007க்குப் பின்னர். ஒரு பனடோல் கூட வரவில்லை என்று சூசை கூறியதாக தற்போது கே.பி குறிப்பிடுகிறார. இலங்கைக் கடற்பிராந்தியத்திற்குள் நுழையும் வரை காத்திருக்காமல் நடுவழியில் வைத்தே இலங்கைக் கடற்படை புலிகளின் கப்பல்களைத் தகர்க்கும் அளவுக்கு புலனாய்வுத் தகவல்கள் இந்தியா செய்மதி உளவு மூலம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் கிடைத்தன என்றே ஆய்வாளர்கள் பலரும் ஆய்ந்தார்கள். இதில் இந்தியாவின் உதவி கணிசமானது எனினும் உளவுத்தகவல்கள் என்பன ஏதோ வானத்திலிருந்து பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் விடயங்கள் இல்லை. புலிகள் அகதிகளை ஏற்றி வரும் கப்பல் கனடா நோக்கி வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்தி வெளிவந்தது போல. சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகத் தான் தகவல்கள் கசிகின்றன.
உளவு நிறுவனத்தின் பாதுகாப்பு பெற்ற கேபி தன்னை புறந்தள்ளிய கோபத்தினாலோ. அல்லது தன்னை பாதுகாத்த நிறுவனத்தின் அழுத்தம் காரணமாயோ. வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கப்பல்களின் நடமாட்டத்தை இலங்கைக் கடற்படை அறிந்திருக்கவும் சாத்தியங்கள் உண்டு தான் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் இது பற்றிய தொடர்புகள் விடுபட்டுப் போனதாகவும். இயக்க அமைப்பின் பிரகாரம் தெரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே விபரங்கள் வெளியிடப்படுவதால் தனக்கு இந்த ஆயுதக் கப்பல் வினியோகம் பற்றி தெரிந்திருக்க முடியாது என்று கேபி வாதிடுகிறார் அத்துடன் இது குறித்து தான் விசாரிக்க நேர்ந்தால் பின்னர் ஏதாவது நடந்தால் தன்னில் சந்தேகம் ஏற்படும் என்பதால் தானும் அக்கறைப்படவில்லை என்று கேபி மேலும் கூறுகிறார்.
ஆனால். உளவுநிறுவனங்களைப் பொறுத்தவரை அந்த தகவல்களை கேபியிடம் தான் கேட்டுப் பெற வேண்டும் என்பதில்லை. தன்னுடைய செயற்பாடுகளை யாரிடம் ஒப்படைத்தார். தற்போது அந்தச் செயற்பாடுகளில் யார் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களை மட்டும் தெரிவித்தாலே போதும் தொலைபேசி. செய்மதி தொடர்புகளை வைத்து இந்த நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஊசிமுனையால் குத்தி எடுக்கும் அளவுக்கான தொழில்நுட்பங்கள் அந்த அமைப்புகளிடம் உண்டு
கேபியின் விசுவாசிகளும் தங்கள் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில். என்ன நடந்தாலும் தலைவருக்கு விசுவாசமாக இருப்போம் என்று விரதம் பிடித்தும் இருக்கப் போவதில்லை அவர்களும் கறுவிக் கொண்டு பழி வாங்குவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்திருந்திருக்கக் கூடும் அதிலும் தங்களின் பதவிகளை அபகரித்தவர்களுக்கு ஆயுதங்களை வன்னிக்கு கொண்டு சென்ற பெருமை சேரக்கூடாது என்பதில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்கும் அவர்களின் உதவியை கேபி பெறுவதில் எந்தச் சிரமமும் இருந்திருக்க முடியாது இந்தக் கூட்டத்தினரைத் தான். டிபிஎஸ். கேபிக்கு நெருங்கிய வட்டாரங்கள் என்று வர்ணிக்கிறார். இவர்களுக்கு இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேபியுடன் தொடர்புகள் இருந்திருக்கின்றன
டிபிஎஸ் எழுதிய செய்தியை கேபி உறுதியாக மறுக்கும் வரைக்கும் எங்கள் ஊகங்கள் நியாயமானவையே.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இப்படி புலிகளுக்கான ஆயுத வினியோகக் கழுத்தை இறுக்கி மூச்சுத்திணற வைத்தது புலிகளி;ன் அழிவுக்கு ஒரு காரணம்
நாடகத்தில் மீண்டும் கேபி
இதன் பின்னால் தான் திடீரென்று கேபி மீண்டும் நாடகத்தின் பங்கேற்கிறார் தலைவரால் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்படுகிறார் இதில் மீண்டும் சில விடயங்களை நாங்கள் கருத்துக்கெடுக்க வேண்டியுள்ளது இயக்கத்திலிருந்து விலக்கியவர்களை பிரபாகரன் மீண்டும் சேர்த்தது கிடையாது இராணுவம் கைது செய்து பின்னால் விடுவிக்கப்பட்டவர்களைக் கூட. இலங்கைப் புலனாய்வுத் துறை தன்னைக் கொல்வதற்கு அனுப்பியிருக்கலாம் என்ற பயத்தில் தனக்கு கிட்ட அண்டுவதில்லை. கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் விடுவிக்கப்பட்ட அருணாவுக்கு தலைவர் மீண்டும் இயக்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கவில்லை என்பதும் அதனால் விரக்தியடைந்து மனநோய் வாய்ப்பட்ட அருணா. கிட்டு மீது மாத்தயா குழுவினர் நடத்திய தாக்குதலின் பின்னால். கந்தன் கருணைப் படுகொலை செய்ததும் நினைவூட்டப்பட வேண்டியது.
வன்னிக்கு வருமாறு அழைத்தும் தன் பாதுகாப்பு காரணமாக தான் பயணங்களைத் தவிர்த்ததாகவும். பின்னர் தன்னை பிரபாகரன் உனது சேவை எனக்குத் தேவை இல்லை என்றே ஓய்வூதியம் இல்லாத கட்டாய ஓய்வில் அனுப்பியதாக தற்போது கேபி குறிப்பிடுகிறார். இந்தப் பின்னணியும் சந்தேகத்தை வருவிக்கிறது. தமிழ்;ச்செல்வன் போன்றோரின் தகடு கொடுப்பு காரணமாக பிரபாகரன் கேபியின் கற்பில் சந்தேகம் கொள்கிறார். அதன் அடிப்படையில் வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் கருணாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது விசாரணை என்ற பெயரில் பொட்டம்மானின் சித்திரவதையில் எவ்வாறு உண்மை வரவழைக்கப்படும் என்பதற்கு மாத்தயாவின் விசாரணை முன் உதாரணமாக இருந்த நிலையில் கருணா அதைக் காய் வெட்டி தன்னைப் பலப்படுத்திக் கொண்டார் இது போலவே தன்னையும் வன்னியில் விசாரணை என்ற பெயரில் அழைத்து என்ன நடக்கும் என்பது கேபிக்கு தெரியாமல் இருந்திருக்காது இதனால் தான் இவர் வன்னி செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். பிரபாகரனின் மனதில் சந்தேக விதை விழுந்து முளை விட்டால். கற்பை நிருபிக்க எந்த தீக்குளிப்பும் பயன்படாது என்பது தெரிந்ததாலேயே கேபி வன்னி விஜயத்தை தவிர்த்திருக்கக் கூடும்.
தன்னை மீண்டும் இயக்கத்தில் சேர்த்தது பற்றி கேபி கூட ஆச்சரியம் தெரிவிக்கும் அளவுக்கு பிரபாகரனின் கடந்த கால நடவடிக்கைகள் இருக்கின்றன அதிலும் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளிவந்த கேபியை மற்ற சக்திகள் தனக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற பயம் பிரபாகரனுக்கு இருந்திருக்க வேண்டும் அதிலும் கிளிநொச்சியும் விழுவதற்கு சமீபமாகத் தான் கேபியை மீண்டும் சேர்க்கும் அளவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் ஒன்று கையறு நிலையில் மூச்சுத் திணறி எந்த துரும்பையும் பிடிக்கும் நிலைக்கு வந்த பின்னர். ஆபந்பாந்தவனாக கேபி தெரிந்து. தங்களை காவாந்து பண்ணக்கூடியது கேபி மட்டும் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். தங்கள் உயிரைக் காப்பாற்ற யாருடைய காலையும் பிடிக்கத் தயங்காத புலிகளின் பாரம்பரியம் அது அல்லது கேபியை மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற அந்த ஆலோசனையை தனது மற்றக் கையாட்கள் மூலமாக ஷஅந்த உளவு நிறுவனமே வழங்கியிருக்கக் கூடும் என்பதை நாங்கள் ஏன் நம்பக்கூடாது?
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர். ஐரோப்பிய சமூகம் முதல் ஐநா வரைக்கும். எரிக் சொல்கெயம் முதல் ஹிலறி கிளின்டன் வரைக்கும். இண்டர்போலினால் தேடப்பட்டுக் கொண்டிருந்;த கேபியுடன் தொடர்பு கொள்வதில் எந்த தயக்கமோ. இரகசியமோ காட்டவில்லை. முன்னையைப் போல வன்னிக்கு இராணுவ கெலிகொப்டரில் போய் சொல்கெய்ம் போன்றவர்கள் புலிகளுடன் தொடர்பு கொண்ட நிலை தடுக்கப்பட்ட நிலையில். பாலசிங்கமும் இல்லாத நிலையில் வெளிநாட்டில் புலிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவுக்கு தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்று யாரும் இல்லாததால். இறுதி நேரத் தொடர்புகளுக்கு கேபியைப் பயன்படுத்துவதற்காக பிரபாகரனுக்கு ஆலோசனை அல்லது அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கலாம்.
புலிகள் ஆயுதங்களை பூட்டு வைத்துப் பூட்டி யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தால் முக்கிய புலிகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற அமெரிக்கா தயாராக இருந்ததாக தற்போது கேபி தெரிவிக்கிறார். இது பற்றிய விபரங்கள் அடங்கிய 16 பக்க ஆவணத்திற்கு பதிலாக பிரபாகரன் இதை ஏற்க முடியாது என்று பதிலளித்ததால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை என்கிறார். ஹிலறி கிளின்டன் வரைக்கும் புலிகளுக்கும். முக்கியமாக கேபிக்கும் தொடர்பு இருந்தது என்பது இறுதியில் வெளிவந்த விடயம் கேபியின் இந்த புரிந்துணர்வு எந்த அடிப்படையிலானது என்பதை கேபி கைது விவகாரத்தை வைத்தே ஊகிக்க முடியும். அடிக்கடி எங்களுக்கு பூச்சாண்டி காட்டுகிற அமெரிக்காவின் காலைப் பிடித்தாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள இந்தக் கொள்கைச் செம்மல்கள் முன்வந்தது இவர்களின் கொள்கைப்பிடிப்பையும் உயிர் மீதான ஆசையையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.
நேபாளத்தில் நோர்வே முயற்சியில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஐநா மத்தியஸ்தத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பூட்டி வைத்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த விவகாரத்தை பிரபாகரனுக்கு யாராவது மதியுரைத்து. பிரபாகரன் அதற்கு சம்மதித்திருந்தால். சில நேரம் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்க முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல். மக்கள் ஆதரவு என்ற சக்தியின் மீதும் நம்பிக்கை இல்லாமல். ஆயுதத்தில் மட்;டும் நம்பிக்கை வைத்திருந்ததால். ஆயுதம் இல்லாமல் பிரபாகரனுக்கு ஆளுமை இல்லாத காரணத்தினால். இதை ஏற்க முடியாது என்று மூன்று வார்த்தைகளில் தன் மரணசாசனத்தை எழுதிக் கொண்டார்.
ஆயுதத்தை பூட்டி வைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார் தட்டினாலும். அமெரிக்கா வரும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு கடைசி வரைக்கும் இருந்தது என்பது உண்மை. இறுதியாக மீட்கப்பட்ட மக்கள். தங்களிடம் புலிகள் அமெரிக்க கப்பல் வந்து எல்லாரையும் ஏத்திக் கொண்டு போகும் என்று கூறியதாகத் தெரிவி;க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பில் மண் விழுந்த பின்னால் தான் இவர்கள் வெள்ளைக் கொடி தூக்க முடிவு செய்திருக்க வேண்டும்.
இதில் சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே அமெரிக்கா பிரபாகரனையும் மற்றவர்களையும் காப்பாற்ற தன் கடற்படைக் கப்பல்களை அனுப்பியிருக்குமா? முதலாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இவ்வாறான நடவடிக்கைக்கு இந்தியாவின் சம்மதம் தேவைப்படும். இந்திய கடல் எல்லைக்கும் அப்பால் சர்வதேசக் கடற்பிராந்தியத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும். இந்தியாவின் பிரதமரைக் கொன்றதற்காக தேடப்படும் ஒருவரை அமெரிக்கா தன் ராஜதந்திர உறவுகளையும் வர்த்தக நலன்களையும் பணயம் வைத்து காப்பாற்ற முன்வருமா? இல்லை. இந்தியா கண்டும் காணாமல் விட்டு விட்டால் இந்திய ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சும்மா இருக்குமா? இதையும் மீறி. அமெரிக்கா தன் நாட்டில் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்து அதற்கு நிதி உதவி செய்தவர்கள். ஆயுதம் வாங்க உதவியவர்கள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையில். அந்த அமைப்பின் தலைவர்களுக்கு உயிர் காக்க உதவுமா? அவ்வாறு உதவினால். எந்த முகத்துடன் பின்லாடனை பயங்கரவாதி என்று தேடிக் கொல்லப் போவதாக மார் தட்ட முடியும்?
இந்த சர்வதேச அரசியலின் நியதிகளும் விதிமுறைகளும் யதார்த்தங்களும் விளங்காத புலன் பெயர்ந்த கூட்டமும் அதற்கு தீனி போடும் ஆய்வாளர்களும். தொடர்ந்தும் நீண்டு கொண்டே செல்லும் துரோகிகள் பட்டியலில் கே.பி. பான் கி முன். சொல்கெய்ம். நோர்வே. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு வரிசையில். அமெரிக்கா துரோகம் இழைத்து விட்டது என்று அமெரிக்காவையும் துரோகியாக்கி விட்டு. அடுத்த துரோகிக்கான தேடலில் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்
அமெரிக்கா வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழி மக்கள் அழிவு ஏற்படாத வகையில் புலிகளை யுத்த நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கான வெறும் வாக்குறுதிகளாக இருக்க முடியுமே தவிர. புலிகளைக் காப்பாற்றுவதற்கு அல்ல. புலிகளின் தலைமையை அழிப்பதற்கான முடிவு எங்கோ எப்போதோ எடுக்கப்பட்டு விட்டதையே காட்டுகிறது அதிலும் இறுதி வரைக்கும் காட்டுக்கு தப்பியோடாமல். கரையோரமாய் காத்திருந்து. முற்றுகைக்குள்ளாகிய பின்னால் மட்டுமே தப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்படியாயின். கேபி கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிரபாகரன் காத்திருந்திருக்க முடியும். தப்பியோடாமல் வளைத்துப் பிடிப்பதற்காகக் கூட இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்
ஆனால். சமீபத்தில் நாடு கடந்த அரசின் தற்போதைய தலைவரான நியூ யோர்க் சட்டத்தரணி தான் அமெரிக்க கப்பல் வரும் என்று பிரபாகரனுக்கு நம்பிக்கை ஊட்டவில்லை என்று மறுத்திருந்தார். நெடியவன் சார்பு இணையத்தளம் ஒன்று விடுத்த குற்றச்சாட்டுகள் குறித்த பதிலிலேயே அவ்வாறு தெரிவித்திருந்தார். தற்போது கேபி சொல்வதைப் பார்க்கும் போது. நியூ யோர்க்கில் செனட்டராக இருந்து ஒபாமா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் ஹிலறி கிளின்டனுடன் இவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதே தெளிவாகிறது.
மற்றும்படி. புலிகளைக் காப்பாற்றுவதற்கு. அமெரிக்காவுக்கு புலிகள் மாமனா மச்சானா மானங்காக்க
இந்த வெளிநாட்டு அமைப்பின் திட்டங்களின் அடிப்படையில். நாடு கடந்த ஈழமுயற்சியும். பிரபாகரனுக்குப் பின்னான அரசியலில் புலன் பெயர்ந்த கூட்டத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அணை போட்டு. அதற்கு கடிவாளம் போட்டு தேவைக்குப் பயன்படுத்துவதற்காக. அந்த உளவு நிறுவனத்தின் ஆசீர்வாதத்துடன். வெள்ளைப்புலிகளின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடும்
சில சந்தேகங்கள்
2003 உடன் தான் கட்டாய ஓய்வு பெற்றதாகக் கூறும் கேபி 2007 ல் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது தற்போது தான் கைது செய்யப்படவில்லை. தன்னை கைது செய்வதற்காக வீட்டை சுற்றி வளைத்தபோது தான் அங்கிருக்கவில்லை என்று கேபி கூறுகிறார். தாய்லாந்தில் அரசியல். இராணுவ உயர்மட்டங்களுடன் தொடர்பு வைத்திருந்த கே.பி இயக்கத்துடன் தொடர்புகள் இல்லாதவர் என்று இந்த உளவு நிறுவனங்களுக்கு தெரியவில்லையா அல்லது கைது செய்து பின்னர் விடுவித்து தங்கள் திட்டப்படி செயற்பட வைக்க முற்பட்டனவா
இதில் சில ஊகங்களை முன்வைக்க முடிகிறது. கொழும்பில் கேபியை வந்து சந்தித்ததாகக் கூறப்படும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் 2006ல் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுகிறார். கே.பி 2007ல் எரித்திரியாவிலிருந்து வரும்போது விமானநிலையத்தில் கைது செய்யப்படுகிறார். தக்சினுடன் வர்த்தக் தொடர்புகளைக் கொண்டிருந்து விருந்தினருக்கான சலுகைகளும் பாதுகாப்பும் கொண்டிருந்த கேபி. தக்சினின் பதவிநீக்கத்துடன் வெளியேறி எரித்திரியாவில் பாதுகாப்பு பெற்று இருந்திருக்கக் கூடும்.  கேபிக்கு பின்னான புலிகள் தாய்லாந்தின் தற்போதைய மேலிடத்துடன் நெருக்கமாகியதாலோ. தக்சினுடனான தொடர்பு காரணமாக தற்போதைய அரசு அதிருப்தி கொண்டதாலோ. கேபிக்கான பாதுகாப்பும் அந்தஸ்தும் நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கலாம்.
அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் உள்ள எரித்திரியாவின் இசையாஸ் அபேவர்க்கியுடன் கேபிக்கு இருந்த தொடர்புகளையும் அறிந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த அந்த பலம் வாய்ந்த உளவுநிறுவனம் முற்பட்டு கேபியை வலைக்குள் சிக்க வைத்திருக்கலாம்.
தான் மற்ற தமிழர்கள் தன்னை வந்து சந்திக்கக் கூடியதாக கோலாலம்பூரைத் தெரிவு செய்து அங்கு ஜாகை அமைத்ததாக கேபி கூறினாலும். மலேசியா போன்று இஸ்லாமிய சம்பிரதாயக் கெடுபிடிகள் இல்லாமல் உல்லாசப் பயணிகளின் வருகையில் தங்கியிருந்து. பிரச்சனையின்றி விசா வழங்கும் தாய்லாந்தை தவிர்த்ததற்கான காரணம் அதுவாக இருக்காது கைது நாடகத்தின் பின்னால். தாய்லாந்தில் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற அச்சத்திலேயே கேபி கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்திருக்க முடியும்
இந்த ஊகங்களுக்கும் சந்;தேகங்களுக்கும். மர்மங்களுக்குமான பதில் கேபியிடம் மட்டுமே இருந்தாலும். கேபி உண்மையைச் சொன்னால் கூட நம்ப முடியாதபடிக்கு கேபியின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய் விட்டது
இந்த முன்கதைச் சுருக்கத்துடன் நடந்து முடிந்த நாடகத்திற்கு வருவோம்
நடந்து முடிந்த நாடகம்
நடேசனின் மகன். சகோதரனுடன் பேசிக்கொண்டிருந்த கேபிக்கு கனடிய வானலை நாயகன் தொலைபேசியில் அழைக்க வெளியில் வரும் கேபி காணாமல் போகிறார். கிட்டத்தட்ட கேபியின் தொலைபேசி இலக்கம் இப்போது பலரின் கையில்? இவ்வாறு பகிரங்கமான தொடர்புகளுடன் இருக்கும் ஒருவர் பற்றி வேண்டியவர்களுக்கு தகவல் தர நினைப்பவர்களுக்கு என்ன கஸ்;டம்?
கேபி இலங்கை அரசினால் மலேசிய அரசின் உதவியுடன் நாடு கடத்தப்பட்ட விடயம் வெளியில் வருகிறது
இங்கே தான் எங்கள் புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டத்தின் மணியான மூளை வெளிப்படுகிறது. தங்களுடைய கனவான நாடு கடந்த ஈழத்தின் தலைவர் நாடு கடத்தப்படுகிறார். உடனே இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். உடனடியாகவே தெருவில் இறங்கி. இவர் ஒரு மனச்சாட்சியின் கைதி என்று இவரை ஒரு மண்டேலா ஆக ஆக்கியிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவரை மையமாக வைத்து. தங்கள் ஈழக்கனவுக்கு அங்கீகாரம் தேடியிருக்க முடியும். ஆனானப்பட்ட பாலகுமார். பேபி சுப்பிரமணியம். புதுவை என்று தாங்கள் இதுவரை தூக்கிப் பிடித்தவர்கள் கைது விவகாரம் பற்றியே வாய் திறக்காதவர்கள். வழமை போல கேபியையும் கைவிட்டார்கள். நெடியவன் கூட்டம் கேபி துரோகி என்று பரப்பிய கதையும் இவர்களுக்கு வசதியாகி விட. கேபி இப்போது அரசியல் அனாதையாகிறார்
இந்தச் சூழ்நிலையில் கேபி என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள? தலைவரே அடையாள அட்டையையும் குப்பியையும் கையளித்த நிலையில் கேபி குப்பி கடிச்சு கரும்புலியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பொபி சாண்ட்ஸ் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா இல்லை தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று கட்டப்பொம்மன் சினிமா வசனம் பேச வேண்டுமா இல்லை. வாய்க்குள் துப்பாக்கி வைத்த வாஞ்சிநாதன் போல தற்கொலை செய்ய வேண்டுமா தனக்கு ஆதரவு தர வேண்டியவர்களே கை விட்ட பின்னால். சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் பார்க்க. சண்டைக்காரனின் காலில் விழுவது தான் கேபிக்கு இருந்த ஒரே தெரிவு. இவர்கள் கூச்சல் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் முரண்டு பிடிக்கலாம் புலன் பெயர்ந்த கூட்டத்தை குசிப்படுத்த உணர்ச்சி அரசியல் நடத்தி வேசங்கள். கோசங்கள் போடலாம் புலன் பெயர்ந்த புலிக்கூட்டமும் கேபிக்கு அஞ்சலி செலுத்தி. வருடா வருடம் பணம் சேர்க்கலாம் ஆனால் அதற்கு கேபி செலுத்தப் போகும் விலை என்ன?
இந்த நிலையில் யார் இருந்தாலும் செய்யக் கூடிய ஒரு முடிவைத் தான் கேபி எடுத்தார். புத்தருக்கு போதி மரத்தின் கீழ் நிர்வாணம் கிடைத்தது போல. கே.பிக்கும் கோத்தபாயா வீட்டு வாசல் புத்தர் சிலையடியில் ஞானம் பிறக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அது தவறு. அது மக்களுக்கு அழிவையே கொண்டு வந்து சேர்த்தது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்துத் தான் காரியங்களைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கே.பியின் சிந்தனைப் போக்கு மாறுகிறது.
இருந்தாலும் கேபியின் ஆளுமையையும் வசீகரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை புலிகளை அழிப்பதன் மூலம் தான் இலங்கையில் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்பி அதைச் சாதித்த கோத்தபாயாவுக்கு நம்பத்தகுந்த ஒருவராக மாறுவது என்பது சாதாரண விடயமும் இல்லை. இப்படி எதிராளியை தன் புத்திசாதுர்யத்தால் வசப்படுத்தி. தன் பக்கம் இழுக்கும் திறமை வாய்ந்த ஒருவரை. பிரபாகரன் தனக்குப் புத்தி இருந்திருந்தால். பேச்சுவார்த்தைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழ்ச்செல்வனை ஆயுதக் கொள்வனவுக்கும் கேபியை பேச்சுவார்த்தைக்கும் அனுப்பியிருந்தால் சில நேரம் தமிழர்களுக்கு சமஷ்டி கிடைத்திருக்கக் கூடும். தமிழ்ச்செல்வனும் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவை விட்டு. கனடாவில் உள்ள தன் குடும்பத்தினரின் வியாபாரத்திற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து நிலவிரிப்பு கொள்வனவு செய்து அனுப்பிக் கொண்டிருந்திருக்கக் கூடும். தற்போது தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் தப்பியிருப்பதுடன். தமிழ்ச்செல்வனும் ரொறன்ரோ தமிழர்களின் வீடுகளுக்கு சல்ய++ட் அடிக்கும் வேலையை செய்திருந்திருக்கக் கூடும். கேபியை பிரபாகரன் கழுதை என்று செல்லமாக அழைப்பதாக டிபிஎஸ் அடிக்கடி குறிப்பிடுவதைப் பார்த்தால். நாய் பார்க்கிற வேலையைக் கழுதை பார்த்திருக்கக் கூடாது என்றே கியூறியஸ்க்குப் படுகிறது
கேபி மூன்று தடவைகள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ரவுப் கக்கீம் குற்றம் சாட்டுகிறார். கே.பியின் கையில் இருந்த சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்று யூஎன்பி கேள்வி கேட்கிறது தாய்லாந்தின் பதவி நீக்கப்பட்ட பிரதமர் இலங்கைக்கு இரகசிய விஜயம். அவருக்கும் கேபிக்கும் வியாபாரத் தொடர்புகள் இருக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் வெளிவருகின்றன. கேபியின் கைகளில் எக்கச்சக்கமான சொத்துகள் இருக்கின்றன என்ற கதை மாறி. கேபி இலங்கை அரசுக்கு கிடைத்த சொத்து என்று கதை மாறுகிறது. கே.பி வடக்கு மாகாண முதல்வராகலாம். பொதுமன்னிப்பு வழங்கப்படலாம். யுத்தக் குற்ற விசாரணையில் அரசு சார்பில் பயன்படுத்தப்படலாம். என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றனஇராஜீவ் கொலை தொடர்பாக சிபிஐ வந்து விசாரணை செய்தது என்று கூட தகவல் வருகிறது
தொடரும்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக