வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஒட்டுமாட்டு



அனைத்துலக தொடர்பகத்துக்கு யார் பொறுப்பு ?

கீழ உள்ள செய்தி பதிவு இணையத்தில் வந்துள்ளது .அனைத்துலகத்துக்கு யார் பொறுப்பு ?அவர் கையோப்பமிடவேண்டியதில்லையா ????? இந்த கடிதத்தில் திகதி பழையது .இரண்டாவது பந்தி முடிய மற்றைய இரண்டு பந்திகளும் சேர்க்கப்பட்டுள்ளது .
சரி உந்த உலகத்தில என்ன நடக்குது?........



தேசிய ஊடகங்களை சிறீலங்கா குறிவைத்து செயற்படுகின்றது

01/08/2010

கோ.இல: 12-082010

அன்பிற்குரிய புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே!

ஊடகங்கள் தொடர்பான விளக்கம்

பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கொடூர கரங்களினால் எம் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் அதிகம். காலகாலமாக வாழ்ந்து வந்த மண்ணில் இருந்து எம் மக்களை வேரறுத்து அழித்துவிடத் துடிக்கின்றது சிங்கள பேரினவாதம்.
தமிழீழத்தில் ஆழக்கால் பதித்து இருக்கும் சிங்களம் தனது திட்டத்தை ஆயுதமுனையில் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பலத்த முயற்சிகளை திரைமறைவில் எடுத்து வருகின்றன. புலம்பெயர் தமிழ் மக்களை குழப்பி அதில் தனது இலக்கை அடைந்துவிடத் துடிக்கின்றது.
அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தேசிய ஊடகங்களை சிறீலங்கா குறிவைத்து செயற்படுகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் போது உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததும் இந்த ஊடகங்களே.
சிறீலங்கா புலம்பெயர் மக்களை தம்வசப்படுத்த முதலில் தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய வேண்டும். எனவே தான், தேவையற்ற பிரச்சாரங்களை அவ் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
இந்த விசமப்பிரச்சாரங்களில் எதுவித உண்மைகளும் இல்லை. இந்த வகையில் சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களும் பத்திரிகைகளும் ஏனைய தேசியம் சார்பான ஊடகங்களும் வழமை போலவே தேசியத்தின் பக்கம் துணை நிற்பதை எல்லோரும் நன் கறிவார்கள்.
அண்மையில் சங்கதி இணையத்தின் முகவரியை, முகவரியின் பதிவாளர் தன்னுரிமையாக்கியமையால் மக்கள் குழப்பங்களுக்குள் தள்ளப்பட்டார்கள். இருந்தும் மீளவும் புது முகவரியில் சங்கதி (www.sangathie.com) இயங்குகின்றது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இப்படியான செயற்பாடுகள் நடைபெறும் பட்ச்சத்தில் அவற்றை நாம் அடையாளப்படுத்துவோம்.
சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக புலம்பெயர் நாடுகளில் தனிநபர்களும் பல குழுக்களும் ஊடகங்களுக்குள் புகுந்து நாசகார வேலைகளை புரிந்து வருகின்றனர். இச்செயற்பாட்டுக்கு மக்கள் அறிந்தோ அறியாமலோ துணைபோக வேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு  இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே, ஊடகங்களில் பணிபுரியும் பணியாளார்கள் மற்றும் மக்களும் எச்சரிக்கை உணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக