சனி, 31 ஜூலை, 2010

இலங்கைச் செய்திகள்
2ஆம் இணைப்பு‐ எங்களுக்கு உங்கள் உதவி தேவை. உடனடியாகத் தேவை – மின் அஞ்சல் கடிதமூலம் கேபீ புலம்பெயர் சமூகத்திடம் கோரிக்கை – NERDOவின் கடிதத்தலைப்பிலான கே.பீயின் கடிதம் இணைப்பு‐ ஜீரீஎன்னின் கனேடியச் செய்தியாளர்‐
31 July 10 01:49 pm (BST)

 

எங்களுக்கு உங்கள் உதவி தேவை. உடனடியாகத் தேவை. அந்த உதவி உளப்பு}ர்வமானதாகவும, அறிவுபு}ர்வமானதாகவும், பொருளாதாரரீதியானதாகவும் உடல் உழைப்பாகவும் வழங்கப்படுவதனை நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்ற வாறாக இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலைகளைச் சுட்டிக் காட்டி கனேடிய வர்த்தக சமூகத்தினரின் மின் அஞ்சலுக்கு கே.பீயின் கடிதத் தலைப்பில்  2 பக்கங்களிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

North East Rehabilititon & Development Organaization Or NERDO நீடோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு பனரமைப்பு கழகம் என்ற அமைப்பின் கடிதத் தலைப்பில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ஜீரீஎன்னின் கனேடியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 10:30.26 AM GMT +05:30 ]
கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார்.
இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர்.
பெண் மற்றும் ஆண் புலிப் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்களை சித்திரவதை செய்து கொன்றவர்கள் ஆகியோரும் இந்தப் போர்க்குற்றம் செய்த படையினரில் அடங்குவர்.
யுத்தம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பை பேணியும் வந்துள்ளனராம். இதனால் சந்தேகமுற்ற கோத்தபாய ராஜபக்ச தனது இரகசிய படைகள் மூலம் இவர்களை கொலை செய்ததாக இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
குறிப்பாக இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிகப்பட்ட அதிகாரி இந்த ஊடகவியலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்பதும் பின்னர் அவர் வெடிவிபத்தில் மரணமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இரசாயன குண்டுகளை பாவித்தமை குறித்த சில அதிகாரிகளுக்கே தெரியும் எனவும் இந்த குண்டுகள் ஏனைய குண்டுகளுடன் களமுனைக்கு அனுப்பபட்டதாகவும் ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை விட நூற்றிற்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்னமும் விசாரணையென அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.இவர்கள் போர்க்குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.
இவர்கள் மீது பொன்சேகாவின் வழக்கு தொடர்பாகவோ  அல்லது விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்றோ குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படலாம் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
சில அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளையும் வசதிகளையும் கொடுத்து அங்கேயே குடியமர்த்தும் திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.

எது எப்படி இருப்பினும் என்றோ ஒரு நாள் இவர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவருவார்கள் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.
இந்த ஊடகவியளார் தம்மிடம் கிடைத்த போர்குற்ற மீறல்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த அமைப்புக்களுக்கும் முக்கிய நாடு ஒன்றிற்கும் வழங்கியுள்ளார்.
இந்த ஊடகவியலாளருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதனால் பெயரை குறிப்பிடவில்லை.

கட்டுரை
ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும்: தமிழர் அமைப்புக்கள் கவனம் எடுப்பார்களா? - இரா.துரைரத்தினம்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 08:40.38 AM GMT +05:30 ]
முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமல்ல நந்திக்கடல் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான வே.பாலகுமாரன், யோகரத்தினம் யோகி உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்திருக்கிறது.
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்படும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தங்களிடம் யோகி பாலகுமாரன் ஆகியோர் இப்போது இல்லை (he did not have them.)  என தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலகுமாரன், யோகி ஆகியோர் இப்போது அவர்களிடம் எப்படி இல்லாமல் போனார்கள் என்பதை பிரிகேடியர் ரணசிங்க தெரிவிக்கவில்லை. இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என கேட்பதற்கும் இப்போது யாரும் இல்லை.
தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது உள்ளுரில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஊடகவியலாளர்களோ சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை இருந்த இடம்தெரியாமல் செய்யும் அரசபயங்கரவாதமே இலங்கையில் நிலவுகிறது.
பாலகுமாரன், யோகி ஆகியோர் பற்றி தமக்கு தெரியாது, அவர்கள் தங்களிடம் சரணடையவில்லை, போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் விளக்கமும் கொடுக்கலாம்.
ஆனால் இப்போது தம்வசம் இல்லை என கூறும் யோகி, மற்றும் பாலகுமாரன் உட்பட முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள், இராணுவத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் உள்ளன. அதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்க முடியாது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமின, Lankafirst.com, ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையும் பாலகுமாரன், யோகி ஆகியோர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
Lankafirst.com என்ற இணையத்தளம் 2009 மே 31ஆம் திகதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தை ஆதாரமாக கொண்டு வெளியிட்ட செய்தியில் பின்வருவோர் இரட்டைவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் வைத்து 53ஆவது இராணுவ படையணியிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் பொருண்மியப் பொறுப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, ஈரோஸ் தலைவரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினருமான வே.பாலகுமாரன், முன்னாள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலகர், விடுதலைப்புலிகளின் துணை அரசியல் பொறுப்பாளர் தங்கன், யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி, திருமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துறை பொறுப்பாளர் பூவண்ணன், பிரதி சர்வதேச பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் 53ஆவது படையணியிடம் சரணடைந்துள்ளனர் என்றும் இவர்கள் தற்போது இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தை ஆதாரம் காட்சி Lankafirst.com  என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதேபோன்று 2009 யூன் 11ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமின முன்பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து பாலகுமாரன் விசாரணைக்காக இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியிட்டிருந்தது.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 2009 டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் பாலகுமாரனும் அவரது மகன் சூரியதீபனும் இரட்டைவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 16ஆம் திகதி 53ஆவது படையணியிடம் சரணடைந்ததாக தெரிவித்திருந்தது.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் யோகி, கரிகாலன், திலகர், தங்கன், இளம்பரிதி, எழிலன், பூவன்னன், தமிழினி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக தெரிவித்திருந்தது.
பாலகுமாரன் கைது செய்யப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் ஒன்றும் இராணுவத்தினரின் இணையத்தளத்தில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. அது சில நாட்களில் அந்த இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களே யோகி, பாலகுமாரன் ஆகியோர் சரணடைந்ததையும் அதன் பின் அவர்கள் இராணுவ விசாரணைக்காக முகாமிலிருந்து கொண்டு சென்றதையும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது அவர்கள் தங்களிடம் இல்லை என விடுதலைப்புலிகளை தடுத்து வைத்திருக்கும் முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரி கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் இராணுவபிரிவு தளபதிகளில் ஒருவரான பிரபா, இராணுவப்பேச்சாளர் மார்ஷல் என்று அழைக்கப்படும் இராசையா இளந்திரையன், சரணடைந்த 400க்கும் மேற்பட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்த நிலையிலிருந்த இளந்திரையனை அவரது மனைவி அழைத்து சென்று இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததார். இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட இளந்திரையனுக்கு அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று ரொபின்சன் என்ற முக்கிய போராளி ஒருவர் 2009ஆம் ஆண்டு டிசம்பர் வரை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டவர் தற்போது தங்களிடம் அவர் இல்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
2009 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் 15ஆயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. இச்செய்தியை அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. ஆனால் தற்போது 11686பேர் மட்டுமே தங்களிடம் சரணடைந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்திருகிறார்.
அவ்வாறானால் மிகுதி 3500பேருக்கும் என்ன நடந்தது என பிரிகேடியர் ரணசிங்கவிடம் கேள்வி கேட்தற்கு யாரும் இல்லாத சூழலே இலங்கையில் காணப்படுகிறது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த, இராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த யோகி, பாலகுமாரன் , கரிகாலன், தங்கன், திலகர், உட்பட சரணடைந்த போராளிகள் தங்களிடம் இல்லை என இலகுவாக அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது.
சரணடைந்தவர்களை படுகொலை செய்வது சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை மீறும் செயல் மட்டுமல்ல மிகப்பெரிய போர்க்குற்றமும் ஆகும். இலங்கையின் போர் குற்றம் பற்றி பேசுபவர்கள் இந்த விடயங்களை ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
யோகி, பாலகுமாரன், கரிகாலன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்பதையும் பின்னர் விசாரணைக்காக முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதையும் அரசாங்கம் மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பதாக இருந்தால் சரணடைந்ததாக செய்தி வந்தபோது அல்லது விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வந்தபோது அரசாங்கம் அதை மறுத்திருக்க வேண்டும். இராணுவ அதிகாரிகளையும் தகவல் திணைக்கள அதிகாரிகளையும் ஆதாரம் காட்டியே அரசாங்க பத்திரிகையான தினமின உட்பட இலங்கையில் உள்ள பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இலங்கையில் உள்ளவர்கள் இந்த விடயங்கள் பற்றி பேச முடியாவிட்டாலும் இலங்கைக்கு வெளியில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளியாக்குவதற்கு சரியான ஒரு ஆயுதமாக இந்த விடயத்தை கையில் எடுக்க வேண்டும்.
தினமின மற்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை என்பனவற்றை ஆதாரமாக வைத்து சரணடைந்தபின்னரே விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற போர்க்குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.
தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்காமல் இன்னொருவர் பெயர்களில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளியாக்குவதற்கான ஆதாரங்களை சர்வதேசத்தின் முன் சமர்ப்பிப்பதற்கான உருப்படியான வேலைகளை செய்ய வேண்டும்.
போரினால் அழிந்து போன மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் இலங்கை அரசு ஒரு போர்க்குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட வேண்டும். எனவே இதுபோன்ற ஆதாரங்களுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உலகநாடுகளின் இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உயர்மட்டங்களை சரியாக அணுக வேண்டும்.
அந்த உருப்படியான காரியங்களை மேற்குலக நாடுகளில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்பவர்கள் செய்வார்களா?
thurair@hotmail.com

TamilWin.Com

TamilWin.Com
போர்குற்றத்தில் ஈடுபட்ட சில அதிகாரிகளை கோத்தபாய அணி கொன்றுவிட்டனர். - தப்பி வந்த ஊடகவியலாளர் தகவல்
திகதி: 30.07.2010
கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை படுகொலை செய்துவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார்.
இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர்.
பெண் மற்றும் ஆண் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்களை சித்திரவதை செய்து கொன்றவர்கள் ஆகியோரும் அடங்குவர்.
யுத்தம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பை பேணியும் வந்துள்ளனராம்.
இதனால் சந்தேகமுற்ற கோத்தபாய தனது இரகசிய படைகள் மூலம் இவர்களை கொலை செய்ததாக இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார். குறிப்பாக இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிகப்பட்ட அதிகாரி இந்த ஊடகவியலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்பதும் பின்னர் அவர் வெடிவிபத்தில் மரணமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இரசாயன குண்டுகளை பாவித்தமை குறித்த சில அதிகாரிகளுக்கே தெரியும் எனவும் இந்த குண்டுகள் ஏனைய குண்டுகளுடன் களமுனைக்கு அனுப்பபட்டதாகவும் ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை விட நூற்றிற்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்னமும் விசாரணையென அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.இவர்கள் போர்க்குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.
இவர்கள் மீது பொன்சேகாவின் வழக்கினை சாட்டியோ அல்லது விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்றோ குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படலாம் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
சில அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளையும் வசதிகளையும் கொடுத்து அங்கேயே குடியமர்த்தும் திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.
எது எப்படி இருப்பினும் என்றோ ஒரு நாள் இவர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவருவார்கள் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறினார். இந்த ஊடகவியளார் தம்மிடம் கிடைத்த போர்குற்ற மீறல்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த அமைப்புக்களுக்கும் முக்கிய நாடு ஒன்றிற்கும்ம் வழங்கியுள்ளார். இந்த ஊடகவியலாளருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதனால் பெயரை குறிப்பிடவில்லை.

மனித உரிமை

Jul 30, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன்

போர்க் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி!

போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாசிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாசிர் மீதான குற்றச சாட்டானது தனது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேசியன் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்தக் கருத்து விசனத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆச்சரியம் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் கருத்தையா கிரேசியன் கொண்டிருக்கிறார் என்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைஸிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.

இல்லை, சூடான் தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைக்கு அமெரிக்கா மிகத் தெளிவான முறையில் ஒன்றுபட்டு ஆதரவளித்துள்ளது என்று சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் சூடான் தொடர்பாக ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக பூசல் எழுந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். விடுமுறையின்றி சமூகமளிக்காத போராட்டம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

இது தொடர்பாக ஐ.நா. விலுள்ள அமெரிக்க தூதரகத்தின் குறிப்பேடு வருமாறு:

இன்னர்சிற்றி பிரஸ்: நீங்கள் ஒரு செய்தியைக் கூறுவதாகவும் ஸ்கொட் கிரேசியன் மற்றொரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஓமர்அல் பாசில் மீதான குற்றச்சாட்டானது அதாவது இனப்படுகொலைக்காக ஜனாதிபதி பாசிர் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது தனது பணியை மேலும் கடினமானதாக மாற்றியுள்ளதாக ஸ்கொட் கிரேசியன் அண்மையில் தெரிவித்திருந்தமை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. விடுமுறையின்றி சமூகமளிக்காமை நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நான் ஊகிக்கிறேன். சூடான் தொடர்பான கொள்கையை நிர்வாகம் இழந்து வருவதை விடுமுறையின்றி சமூகமளிக்காமை விடயம் வெளிப்படுத்துவதாக ஊகிக்கிறேன். இந்த விமர்சனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? டார்பர் மற்றும் தென் சூடான் தொடர்பாக ஜனாதிபதி பாசிர் மீது அழுத்தம் கொடுக்கும் விடயத்தில் ஒரேநிலைப்பாட்டில் நிர்வாகம் முன்னகர்வை மேற்கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது சிலர் கூறுவதுபோன்று இரு வேறுபட்ட செய்திகளா?

தூதுவர் ரைஸ்: இல்லை, சூடான் தொடர்பாக அமெரிக்காவானது ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைக்கு உறுதியான ஆதரவாகவுள்ளது. இந்தக் கொள்கையானது வெளிவிவகார அமைச்சர் கிளின்டன்,மரான் மற்றும் கிரேஸியன் உட்பட ஏனையோரால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டதாகும். விரிவான சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அழுத்தியுரைத்திருக்கிறோம். அதேவேளை, டார்பூரின் பாதுகாப்பு நிலைவரம் மோசமடைவது தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறோம்.

இன்னர்சிற்றி பிரஸ்: இனப்படுகொலைக் குற்றச்சாட்டு உங்கள் பணியை கடினமானதாக்குகிறதா? உங்கள் கொள்கையைப் பின்பற்றுபவர் ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார். உண்மையாக அவர் அவ்வாறு கூறினாரா?

சூசன்ரைஸ்: ஏனையோர் என்ன கூறியுள்ளனர் என்பது பற்றிக் கூறுவதற்கான நிலைமையில் நான் இல்லை. சுருக்கமாகக் கூறினால் டார்பரிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெறும் போர்க் குற்றங்கள்,இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு என்பன தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

army

வாஹி கால்லகே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக நியமனம்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 04:33.08 AM GMT +05:30 ]
மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக வாஹி கால்லகே கடயைமாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாஹி கால்லகே இராணுவப் பயிற்சி முகாமின் பொறுப்பாளராகவும் கடயைமாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக கடயைமாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பயிற்சி நெறி ஒன்றுக்காக சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜகத் அல்விஸின் பதவி வெற்றிடத்திற்காக வாஹி கால்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் வாஹி கால்லகே முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilWin.Com

TamilWin.Com

வெள்ளி, 30 ஜூலை, 2010

உலக செய்தி

ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:28.14 பி.ப GMT ]
கம்போடியாவில் 1975 - 1979 காலப்பகுதியில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணையில் அந்நாட்டின் அப்போதைய சிறை அதிகாரிக்கு ஐ.நா. நிபுணர்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட போர்க்குற்றவியல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இதேவேளை, அந்நாட்டில் அக்காலப்பகுதியில் இடம்பெற்ற மனித பேரவலத்துக்கு காரணமான - தற்போது சிறையிலுள்ள - நான்கு தலைவர்களுக்கு எதிரான விசாரணைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கம்போடிய சிறை அதிகாரி, சிறையில் சுமார் 15 ஆயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டினியால் சாவதற்கு காரணமாகியிருந்தார் என்றும் அப்போதைய அரச படைகளால் சிறைக்கு கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சி ஆதரவு மக்கள் பலர் சிறையிலிருந்து வெளிப்புறமாக கொண்டுசெல்லப்பட்டு திறந்தவெளி ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கும் துணைபோயிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டிருந்தார்.
இவருக்கு அதிக பட்சம் 35 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்று சட்டத்தரணிகளால் கோரப்பட்டிருந்தபோதும் ஏற்கனவே பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 11 வருட சிறைவாசத்தை அனுபவித்த காரணத்தினால் தீர்ப்பு 30 வருடங்களாக குறைக்கப்பட்டது.
67 வயதுடைய முன்னாள் கணித ஆசிரியராகிய டச் எனப்படும் இந்த சிறை அதிகாரிக்கு தீர்ப்பு வழங்கிய போர்க்குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழுவினால் அமைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

World News

World News

TamilWin.Com

TamilWin.Com

TamilWin.Com

TamilWin.Com

TamilWin.Com

TamilWin.Com

போர் குற்றம்

இங்கே போர் குற்றம் சம்மந்தமான படங்கள் ஆவணங்கள் சாட்சியங்கள் இருந்தால வலைப்பதிவுக்கு அனுப்பி வையுங்கள் ,இது ஒரு சிறு முயற்சி நாங்கள் இதனை சேமித்து ஆவணமாக்க முயற்சி செய்வோம்

WAR CRAIM

போர் குற்றம் தான் தமிழனுக்கு உள்ள முக்கிய ஆவணம் .
இது தான் இப்போதுள்ள ஆயுதம் ,நாங்கள் ஒற்றுமையாக ஒன்றாக நின்று
வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் ,போரின்பால் மரணித்த மக்களுக்கும் ,எமது விடுதலையினை காணிக்கை செய்வோம் .
நாம் யாருக்கும் தலை வணங்கும் நிலை அகற்ற முயல்வோம் ,
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க முயல்வோம் ,
ஒன்றாகுவோம் ,வெல்வோம் விடுதலை கிடைக்கும் வரை .