திங்கள், 31 ஜனவரி, 2011

http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=714


தமிழருக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள், ஊடகர் எக்னெலிகொடவின் கண்டுபிடிப்பு! January 30, 2011, 10:45 AM Share
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை அரசு வட மாகாண தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமையாலேயே ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பிரதானமாக கடத்தப்பட்டு உள்ளார் என்று இவரின் மனைவி தெரிவித்து உள்ளார்.

வட மாகாண தமிழர்களுக்கு எதிராக அரசினால் இரசாயன் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து எக்னெலிகொட புலனாய்வு நடத்தினார் என்றும் கண்டுபிடித்த உண்மைகளை பத்திரிகையில் பிரசுரித்து வந்தார் என்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு இந்த இரசாயன ஆயுதங்களின் பாவனை குறித்து வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.

வட மாகாண தமிழர்களுக்கு எதிராக அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு எக்னெலிகொட எழுத்துமூலம் 2008 ஆம் ஆண்டு தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டார். எக்னெலிகொட கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பெரிதும் ஆதரித்தமையாலும் கணவர் கடத்தப்பட்டிருக்கின்றார் என்றும் சொன்னார்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நன்றி மறு ஆய்வு


எங்கே பிழைத்தது எமது அரசியல் அடித்தளம்

ஏன்? – -
தமிழரின் அரசியல் வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருந்தும்.மண் தோன்றா கல் தோன்றிய காலத்து மூத்த குடிகள் நாமென வீர வசனம் பேசி ஒரு அரசியல் மாயையை தோற்றுவித்ததும் தமிழரின் இந்த நிலைக்கு காரணம்.
இன்று எல்லாத் தமிழர்களின் மனங்களிலும் ஒரு கேள்வி எழுந்து நிற்கின்றது.’ஏன் எம்மினத்தின் நிலை இப்படியானது?’ என்பதே.
ஏன் என்ற இந்த கேள்வி தாயகத்தில் வாழுகின்ற எம்மவர்களின் மனங்களின் முட்டி மோதி, ஆவல்களும் உணர்வுகளும் சொற்களும் தொண்டைக்குழி வரை வந்து கருத்துச் சுதந்திரம் அற்ற நிலையில் உணர்வுகள் உருக்குலைந்து பெருமூச்சுகளாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஏன்….ஏன்..ஏன் கேள்விகள் சரமாரியாக எழுகின்றன.
ஏன்? ……ஏன்? ….என்?..
எம்மினத்தின் இந்த நிலைக்கு யார் காரணம்?. அவர் இவர் என்று எமது விரல்கள் எமக்கு விருப்பமில்லாதவர்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றன.
எம்மினத்தை இந்நிலைக்கு கொண்டு வந்தமைக்கு நாமெல்லோருந்தான் காரணம்.எங்கே பிழைத்தது எமது அரசியல் அடித்தளம்.இலங்கையரசு எமது இனத்தின் மீது கொண்ட அத்தனை அடக்குமுறைக்கும் எமது எதிர்ப்புகள் இராஜதந்திரமற்ற முறையில் நேரிடையான எதிர்ப்பாகவிருந்தன அவைதான் காரணமா?.அரசியலில் அளவுக்கு மீறிய சத்தியத்தையும் நீதியையும் கடைப்பிடித்தோமே அதுதான் எமது தோல்விக்கு அல்லது பின்னடைவுக்கு காரணமா?.
நாங்கள் நிறையவே புத்திசாலிகள் மோட்டுச் சிங்களவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற  எமது அகங்காரமும் எம்மைப் பற்றிய அதீதமான நம்பிக்கையுந்தான் காரணமா?.
நாம் எமது அரசியலில் சாண் ஏற சிங்கள அரசியல்வாதிகள் முழமேறி எமது அரசியலை நாசூக்காக மழுங்கடித்தமையை உணர்ச்சிப் பிழம்பாக மேடைகளில் விட்டேனா பார் என்று முழங்கினோமே அந்த வெற்று முழக்கங்கள்தான் இந்த நிலைக்கு எம்மை கொண்டு வந்தவனவா?
நாம் எந்த இடத்திற்குப் போக வேண்டுமோ அந்த அரசியல் இலக்கை அடைவதற்கு சாணக்கிய அறிவைப் பயன்படுத்தினோமா?இல்லையே.
நாம் எப்பொழுது எமது அரசியலை நகர்த்துவதற்காக எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் ஒற்றுமையானோமா?. ஒரு அரசியல் அணி உரிமைக்காக போராடுகையில் இன்னொரு அரசியல் அணி தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்தவிட்டதே இவர்கள் எதற்காக இப்படித் தேவையில்லாத விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என அரசிடமே சொன்னார்களே!.
அரசையே புரட்டிப் போடும் ஆற்றலும் அறிவுமுள்ள நமது அரசியல்வாதிகள் தமது ஒற்றுமையின்மையால் தமிழரின் உரிமைப் போரை நீண்ட காலத்திற்கு கொண்டு சென்றார்கள்;.
அடங்காத் தமிழன் என்ற பழுத்த அரசியல்வாதியான அமரர் சி.சுந்தரலிங்கம்  தனது அறிவை தீண்டத்தகாதவர் என வேலி போட்டு ஆலயப் போராட்டம் நடத்தினார். நான் இதனை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் பார்த்தேன்.இதுதானா தமிழரின் அரசியல்.
தமிழரின் அரசியல் வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருந்தும்.மண் தோன்றா கல் தோன்றிய காலத்து மூத்த குடிகள் நாமென வீர வசனம் பேசி ஒரு அரசியல் மாயையை தோற்றுவித்ததும் தமிழரின் இந்த நிலைக்கு காரணம்.
தமிழரின் சரித்திரம் வேறு சமகாலத்தில் நகர்த்த வேண்டிய அரசியல் வேறு என்பதை நாங்கள் ஏன் உணரவில்லை.அரசியல் அணுகுமுறைகள் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவம் பெற்றதை பெற்று வந்ததை நாம் உணர்ந்திருக்கிறோமா?.
இன்றும் பலரிடம் பேசும் போது அவர்கள் மாயஜால கதைகளையே கதைக்கிறார்கள்.விசயம் இருக்குது எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறார்கள். ஒரு காலத்தில் உசுப்பேத்தல் அரசியல் இருந்தது, இப்பொழுது விசயம் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறார்கள்.
கேட்பவர்கள் என்ன விசயமப்பா என பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்.இப்ப நாங்கள் செய்ய வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி உதிரிக்கட்சி அரசியல்வாதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து ஒரு பலமான சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதே. உடனே அரசுடன் ஒட்டுறவாடுகிறார்களே என்று துரோகிப்பட்டம் சூட்ட முயற்சிக்கிறார்கள்.
எங்களுடைய வாயிலிருந்து ஒரு சொல் வேகமாக வந்துவிடும்.அது துரோகி என்ற சொல்தான்.எந்த அரசியல்வாதியையும் விமர்சிக்கலாம் ஆனால் துரோகி என்று சொல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
எல்லாம் எங்களுடைய பார்வைக்குள் எங்கள் கைகளுக்குள் இருக்க வேண்டும் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஆக மிகப் பெரிய தவறாகும்.தாயகத்தில் அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு அரசியலை நகர்த்துகின்றது.அதனை வரவேற்போம்.
அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் செய்ய வேண்டியதைச் செய்கின்றன.செய்யட்டும்.
சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு உரிமை கொடுக்கக்கூடாதென்பதில் எவ்வளவு ஒற்றுமையாகவிருக்கின்றார்கள். ஏன் எம்மால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை?.தடையாயிருப்பது என்ன?.
எம்மினம் என்பதற்கப்பால் தனிமனித வரட்டுக் கௌரவம் பார்ப்பது.
விட்டுக் கொடுக்காமை,சகிப்புத்தன்மையுடன் நடக்காமை.
ஏன் நாங்கள் இப்படி இருக்கின்றோம்?
-ஜெயதாஸன்

சனி, 29 ஜனவரி, 2011

http://thenee.com/html/270111-1.html

ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை: கோத்தபாய சாட்சியம் _
Gotabhaya_Rajapaksaஇராணுவத்தளபதி மட்டுமல்ல கடற்படை மற்றும் விமானப்படையின் ஒவ்வொரு தளபதியும் நல்ல திட்டங்களை வகுத்துள்ளனர். அந்த பதவியில் வேறு யாராவது இருந்திருந்தாலும் அதனை செய்திருப்பார்கள்.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் இருந்த நிலையிலேயே அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் மாஸ்டர், தயாமாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.

படையில் 30 வருடகால அனுபவத்தை பெற்றவர் இந்த காரணத்தை செய்யவேண்டும் நான் அங்கு இராணுவ தளபதியை பற்றியே பேசியிருந்தேன். நபர் தொடர்பில் அல்ல. எனினும் இங்கு நீதிமன்றத்தை திசைதிருப்பும் விடயங்கள் கூறப்படுகின்றன என்றும் அவர் சொன்னார். 

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

சாட்சியத்தை பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியத்தை நெறியப்படுத்தியதன் பின்னர் பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி குறுக்கு விசாரணையை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். 

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் வெளியானது எல்லாமே பொய்? பதில்: என்னால் அப்படி கூறமுடியாது. 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயமும் பொய்யானதாகும். 

பதில்: பொய்.

கேள்வி: சில விடயங்கள் சரியானவை, பல விடயங்கள் பொய்யானவை?

பதில்: பல பத்திரிகைகளிலும் அவ்வாறே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திதொடர்பில் நீதிமன்றத்திகு சென்றுள்ளீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி:உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது என்றுதானே நீதிமன்றத்திற்கு சென்றிருந்தீர்கள்?

பதில்:ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் செய்திக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பெற்றிருக்கின்றீர்களா?

பதில்: ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் தொடர்பில் வெளியாகின்ற செய்தி அவ்வப்போது பொய்யானது என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கின்றீர்களா?

பதில்: ஆம். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் இடைக்கால தடையுத்தரவு பெற்றமை உண்மையா? 

பதில்: இது முற்றிலும் மாறுபட்ட விடயமாகும். 

சாட்சி அந்த கேள்விக்கு பதிலளித்ததன் பின்னர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி இந்த கேள்விக்கு சாட்சி எதிர்ப்பு தெரிவித்தமை தவறானதாகும். 

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இல்லை என்றால் கேள்வியை எதிர்ப்பதில் பிரச்சினையில்லை. வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரிடம் ஏற்கனவே இது தொடர்பில் கேள்விகளை கேட்டிருக்கின்றேன். நீதிமன்றத்தின் குறுக்கு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அப்போதிருந்த பிரதிசொலிசிட்டர் ஜெனரல் அதனை எதிர்க்கவில்லை என்பதனால் மேற்படி கேள்வி தொடர்பில் இரண்டு பொதுக் காரணங்கள் இருக்கின்றன. 

சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கல்கிசை நீதிமன்றத்திலும் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் இரண்டு வழக்குகள் இருக்கின்றன. அதன் பிரதான சாட்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இருக்கின்றார். இந்த காரணங்களினால் உண்மையில்லாத விடயங்களை சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரிக்கவேண்டிய நிலைமை இருந்ததா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும். 

சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொடர்பில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்ட பல விடயங்கள் தவறானது என்றால். இதுமட்டும் உண்மையானது எவ்வாறு என நீதிமன்றத்திடம் கேட்டார். 

இதனிடையே கருத்து தெரிவித்த சாட்சியான கோத்தபாய ராஜபக்ஷ எனக்கு எதிரான வழக்கு ஒரு காரணத்துடன் சம்பந்தப்பட்டவை இந்த செய்தி தொடர்பில் தொலைக்காட்சியிலும் கூறியிருக்கின்றார் என்பதனால் நான் இங்கு தெளிவுப்படுத்தினேன் என்றார். 

இதனிடையே எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியின் காரணம் ஒன்றானதாகும். கேட்ட கேள்விக்கு சாட்சி எதிர்ப்பு தெரிவித்தாரே தவிர சாட்சியினால் எதிர்க்கப்படவில்லை. வழக்கு தொடர்பிலான காரணத்தை கேட்க வேண்டும் என்றார். சாட்சி எதிர்ப்பு தெரிவித்தமை காரணமல்ல சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் முடியாது என்றார். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: வேறு பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றீர்களா? பதில்: இல்லை எனது காலத்தை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை. எனக்கு நேரம் முக்கியமானது. நீதிமன்றத்தில் காலம் கடந்துகொண்டிருக்கின்றது. இந்த வழக்கு (வெள்ளைக்கொடிவிவகார) விரைவில் நிறைவடைந்தால் வழக்குகளை தாக்கல் செய்யலாம். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? 

பதில்: ஏனைய பத்திரிகைகளை அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

கேள்வி: இரண்டு வழக்கில் ஒரு வழக்கு விசாரணை கேட்டு விலக்கிக்கொள்ளப்பட்டதா? 

பதில்:இல்லை. 

கேள்வி: இடைக்கால தடையுத்தரவு பெற்றதன் பின்னரா இந்த செய்தி வெளியானது? 

பதில்: எனக்கு கேள்வி விளங்கவில்லை. 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி:இடைக்கால தடையுத்தரவு இருக்கின்ற நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது? 

பதில்: அது தவறானது. முன்னர் வெளியான செய்தி தொடர்பிலேயே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. அதுஒரு வழக்காகும். அங்கு எனக்கெதிராக இரண்டு வழக்குகள் இல்லை. 

கேள்வி: ஒரு வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு பெற்றிருக்கின்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: இடைக்கால தடையுத்தரவு 2009 டிசம்பர் 13 ஆம் திகதி இருக்கும் போதே இந்த செய்தி வெளியாகியுள்ளது? 

பதில்: ஆம். 

கேள்வி: இராணுவத்தளபதி நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியில் இருந்தவேளையில் நியமிக்கப்பட்டார்? 

பதில்: ஆம். 

கேள்வி: யுத்த இறுதிக்காலத்தில் மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் படையில் சேவையில் ஈடுபட்டிருந்தாரா?

பதில்: ஆம். 

கேள்வி:2009 ஆம் ஆண்டு மே மாத யுத்தத்தின் போது பிரதிவாதி(சரத்பொன்சேகா) கூடுதலான அர்ப்பணிப்பை செய்திருந்தாரா?

பதில்: என்னால் கூறமுடியாது. 

கேள்வி:பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் அர்ப்பணிப்பை கூறமுடியாதா? பதில்: இராணுவத்தளபதி மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப்படைகளின் தளபதிகளும் அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் பதவிகளின் பிரகாரம் அர்ப்பணிக்கவேண்டும். 

கேள்வி:யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரதிவாதியின் சேவையை பாராட்டியிருக்கின்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: பிரதிவாதியின் திறமையும் யுத்தவெற்றிக்கு காரணமாக இருந்தது என்று எங்காவது கூறினீர்களா? 

பதில்:நான் கூறவில்லை. ஆனால் யாராவது அப்படி நினைத்திருக்கலாம். 

கேள்வி:2009 ஜூன் மாத பிஸ்னஸ் டுடேயிக்கு நேர்முகம் கொடுத்திருக்கின்றீர்களா? 

பதில்:ஆம். பத்திரிகை ஆசிரியரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே நான் பதிலளித்தேன். அதிலும் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. 

கேள்வி: நல்லதோ கெட்டதோ பதிலையும் வாசித்து காட்டுங்கள்? 

பதில்: இராணுவத்தளபதி நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். கடற்படை மற்றும் விமானப்படையின் ஒவ்வொரு தளபதிகளும் இதனைசெய்துள்ளனர். வேறு யாராவது அந்த பதவியில் இருந்திருந்தால் அதனை செய்திருப்பார்கள். இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் இருந்த நிலையிலேயே அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். படையில் 30 வருடகால அனுபவத்தை பெற்றவர் இந்த காரணத்தை செய்யவேண்டும் நான் அங்கு இராணுவ தளபதியை பற்றியே பேசியிருந்தேன். நபர் தொடர்பில் அல்ல. எனினும் இங்கு நீதிமன்றத்தை திசைதிருப்பும் விடயங்கள் கூறப்படுகின்றன. 

கேள்வி:இராணுவத்தளபதி தொடர்பில் நீங்கள் கூறியது பொய்யானதா?

பதில்: இராணுவத்தளபதி தொடர்பில் கூறியிருந்தேன். படையினரின் தைரியத்தையும் அதிகரித்திருந்தேன் அந்த காலத்திற்குள் செய்து முடித்தேன். அதுவே எனது செயற்பாடாகும். 

கேள்வி: கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதிலளித்து பின்னர் தெளிவுப்படுத்தலாம்? 

பதில்: ஆம்,இல்லை, முடியாது என தர்க்கத்தை முன்வைக்க முடியாது. இது முக்கியமான பிரச்சினையாகும். 

கேள்வி:சரத்பொன்சேகா தொடர்பில் பிஸ்னஸ் டுடேயிக்கு நீங்கள் கூறியது பொய்யா? 

பதில்: இராணுவத்தை பற்றியும் பேசியிருக்கின்றேன். 

கேள்வி: 2009 ஜூன் மாதம் நீங்கள் கூறியது உண்மையா? 

பதில்: ஆமாம் நான் பொய் கூறமாட்டேன். 

கேள்வி: நேர்காணலில் கூறப்பட்ட விடயம் உண்மையானதா? 

பதில்: நேர்காணலில் முழுவிபரங்களையும் கூறமுடியாது. இராணுவ தளபதியை முப்படைகளின் தளபதியே நியமிப்பார். அதற்கான பணிப்புரைகளை நான் வழங்குவேன். 

கேள்வி: அனுபவசாலி, நுண்ணறிவாளனாக அவர் இருந்ததை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:ஆம், அவரை ஜனாதிபதி நியமித்தார் நல்லது என்று தெரிந்தே அவரை நியமித்தோம். ஆனால் அந்த நியமனம் பிழையானது என பல சந்தர்ப்பங்களில் தெரிந்து கொண்டோம். 

கேள்வி: திகதியை குறிப்பிடமுடியுமா? 

பதில்: முடியாது. ஆனால் மக்கள் தீர்மானித்து விட்டனர். அதனை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்த முடியாது. 

கேள்வி: பிஸ்னஸ் டுடேயில் கடற்படை, இராணுவப்படைகளின் தளபதிகள் தொடர்பிலும் கூறப்பட்டிருக்கின்றதா? 

பதில்: ஆம். 

கேள்வி:அதுவும் நீங்கள் கூறியது போல கடற்படை, விமானப்படை தொடர்பிலா? அல்லது நபர்கள் தொடர்பிலா? 

பதில்: அவர்கள் தொடர்பில். 

கேள்வி:பிலிப் அல்ஸ்டனுக்கு கடிதமொன்று எழுதப்பட்டது தெரியுமா? எப்போது?

பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி. 

கேள்வி: இலங்கை அரசாங்கம் கடிதத்திற்கு பதிலளித்ததா? இல்லையா? என தெரியுமா? 

பதில்:தெரியாது. 

கேள்வி: டிசம்பர் 13 ஆம் திகதி கடிதம் பிரசுரிக்கப்பட்டதா?

பதில்:ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையிலிருந்து உங்களிடம் ஏதாவது வினவினார்களா?

பதில்: என்னிடம் கேட்கவில்லை. 

கேள்வி: 11 ஆம் திகதி பின்னர் கதைப்பதாக கூறினாரா? 

பதில்: எனக்கு அவ்வாறானதொரு அழைப்பு கிடைக்கவில்லை. நான் கையடக்க தொலைபேசியே பயன்படுத்துகின்றறேன். அதற்கு அழைப்பு வரவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சில் நிறைய தொலைபேசிகள் இருக்கின்றன. 

கேள்வி:சரணடைந்த 11968 பேரில் புலிகளின் பிரபலமான தலைவர்களும் இருந்தனரா? 

பதில்:ஆம். 

கேள்வி: புனர்வாழ்வளித்து சமுகமயப்படுத்தப்பட்டுள்ளனர்?

பதில்:ஆம். 

கேள்வி:சிலர் அரசியல் நடவடிக்கைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனரா?

பதில்: ஆம். 

கேள்வி:கருணா,பிள்ளையானும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனரா? பதில்: இல்லை, யுத்தகாலத்தில் சரணடைந்தவர்களுக்கே புனர்வாழ்வளித்தோம். இவர்கள் இருவரும் இந்த அரசாங்கத்திற்கு முன்னரே புலிகளிலிருந்து விலகிய நபர்களாவர். 

கேள்வி: ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர்?

பதில்: ஆம். 

கேள்வி: குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டாரா? 

பதில்: ஆம். 

கேள்வி: ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக எவ்விதமான குற்றஞ்செயல்களிலும் ஈடுபடவில்லையா?

பதில்:எனக்கு தெரிந்த வகையில் குற்றஞ்செய்யவில்லை. 

கேள்வி:பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான உங்களுக்கு தெரியாது?

பதில்: ஆம். 

கேள்வி: குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களுக்கு தெளிவுப்படுத்தப்படுமா?

பதில்: ஆம். வேறு நிறுவனங்களும் தெளிவுப்படுத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நாவும் எங்களும் தெரிவித்திருக்கின்றது.

கேள்வி: பிரதிவாதியை சிறந்த இராணுவத்தளபதி என்று கூறியிருக்கின்றீர்களா? பதில்: நீதிமன்றத்தில் தவறு ஏற்பட்டிருக்கின்றது. வேறு யாராவது கூறியிருக்கலாம். 

கேள்வி: அவர் யாரொன்று கூறமுடியுமா?

பதில்: முடியாது. 

கேள்வி:இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றீர்கள்? பதில்: ஆம். 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். 

கேள்வி: பிரதிவாதியுடன் ஏக காலத்தில் சேவையாற்றிருக்கின்றீர்கள்?

பதில்: சேவையாற்றியிருக்கின்றேன். 

கேள்வி:1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றமைக்கு விசேட காரணம் இருக்கின்றதா?

பதில்: தனிப்பட்ட காரணத்திற்காக ஓய்வு பெற்றேன். அந்த கேள்வியுடன் பிரதிவாதியின் சட்டத்தரணி தனது குறுக்கு விசாரணையை நிறைவு செய்துகொண்டார். இதனையடுத்து எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹாரை மீள் விசாரணையை மேற்கொண்டார். 

கேள்வி:செய்தி தவறு என்பதனை ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தினீர்கள்? 

பதில்: ஆம். நேர்காணல் செய்தனர். அப்போது பொய் குற்றச்சாட்டு என்று கூறி தெளிவுப்படுத்தினேன். அக்கேள்வியுடன் மீள் விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதனால் மேற்படிவழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது





 தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! – ஒரு திறந்த மடல்

Post by maniajith007 Today at 9:56 am
வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது!

நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும்.

தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் திமுக அல்ல. அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள். இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள்.

இது எப்படி இருக்கிறதென்றால் தாடிக்கொரு சீயாக்காய் தலைக்கு ஒரு சீயாக்காய் வைத்துக் கொள்ளலாம் என்பது போல இருக்கிறது

காங்கிரஸ் இந்திய தேசியம் பேசும் கட்சி. அந்தக் கட்சி அப்படித்தான் நடந்து கொள்ளும். ஆனால் திமுக அப்படியல்லவே?

எங்களுக்கு அயலார் உதவி செய்யவில்லை என்றால் கோபித்துப் பயனில்லை. ஆனால் உற்றார் உறவினர் உதவிசெய்யவில்லை
என்றால் அவர்கள் மீது கோபம் வரத்தானே செய்யும்?

திராவிட தேசியம் பேசிய திமுக உதவி செய்யும் நிலையில் இருந்தும் உதவி செய்யாது விட்டதுதான் பெரிய இரண்டகம். வரலாற்றுத் தவறு. அதற்கு மன்னிப்பே கிடையாது.

முள்ளிவாய்க்காலில் குருதி வாடை வீசிக் கொண்டிருக்கும் போது தில்லி சென்று கூடாரம் அடித்து தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதற்கு காங்கிரசிடம் கருணாநிதியிடம் வரம் கிடந்தாரே இதைவிடவா செல்வி ஜெயலலிதா மோசமாக நடந்து கொள்வார்? அமைச்சர் பதவிகள் இல்லை என்றால் கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார்.

மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன. ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. “மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகிறது” என்றுதானே முகாரி பாடினார்? தமிழகத்தில் முத்துக்குமாரன் தீக்குளித்த போது அவருக்கு வீட்டுச் சிக்கல். அதனால்தான் தீமூட்டி இறந்தார்” என்று கருணாநிதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்!

இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றித் தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் குருதி சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன? அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைத்தாலும் வியப்பில்லை!

ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் நாற்காலியில் கருணாநிதியைத் தவிர யார் இருந்திருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

சென்னை மரீனா கடற்கரையில் காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே உண்ணா நோன்பு இருந்து பின் மதிய உணவுக்கு நோன்பை முடித்துக் கொண்ட நடிப்பை அல்லது கோமாளித்தனத்தை வேறுயாராவது மிஞ்ச முடியுமா? இதை வைத்துத்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் அமைச்சர் கோத்தபாயா “தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல கோமாளிகள்” என்று சொன்னான். அதையிட்டு கருணாநிதி வாய் திறக்கவில்லை. அதன் பொருள் “ஆமாம் நாங்கள் அரசியல் கோமாளிகள்தான்” என்று மறைமுகமாகச் சொன்ன மாதிரி இருந்தது.

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். அப்போதும் கருணாநிதி என்ன சொன்னார்? அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது என்று சொன்னார்!

‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்’ ‘ ‘தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்’ என்ற பல்லக்குப் பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. ஆனால் சிங்கள இராணுவம் தமிழீழ மக்கள்மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் ‘மானாட மயிலாட’ வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றிய ஒரே மனிதர் கருணாநிதிதான்.

தொடக்கத்தில் ஜெயலலிதா பிரபாகரனுக்கு ஒன்று நடந்தால் தமிழகம் கிளம்பி எழும் என்று பேசினார். பின் அவரது பாப்பாத்தி உணர்வு திராவிட பேசிய உணர்வை மழுங்கடித்து விட்டது. “அப்போது நான் கட்சிக்குப் புதிது. கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைப் படி அப்படிப் பேசினேன். இப்போது நிலைமை அப்படியில்லை” என்று தனது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பித்தார். அதாவது சோ இராமசாமி, இந்து இராம், அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது வழிகாட்டல் படி புலி எதிர்ப்பாளனாக மாறினார்.

ஜெயலலிதா தமிழீழம் பற்றி சொல்லியதை பட்டியல் இட்டுள்ளீர்கள். மெத்த நல்லது. அம்மா சொன்னதை பட்டியல் போட்ட நீங்கள் அய்யா சொல்லியதை ஏன் பட்டியல் போடவில்லை? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் தங்கம் என்பதா?

கருணாநிதி தொடக்க முதல் தலைவர் பிரபாகரனை தனது “தமிழினத் தலைவர்” பட்டத்துக்கு ஆபத்தான மனிதர் என்றே பார்த்தார். அதுதான் “அந்தப் பயல் (சொல்லாட்சியைக் கவனியுங்கள்) தன்னை என்ன தமிழினத் தலைவன் என்றா நினைக்கிறான்” என்று கேட்டிருக்கிறார்.

தமிழீழ கோரிக்கை பற்றி கருணாநிதி எத்தனை குத்துக்கரணங்கள் அடித்தார் என்பதற்கு பட்டியல் போட்டால் அது எத்தனை பக்கம் நீளும்?

நான் வன்முறையை ஆதரிக்கமாட்டேன். அதாவது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன்.
இது சகோதர யுத்தம். புலிகள் அதைத்தான் செய்கிறார்கள். அதாவது எனது அன்புக்குரிய ரெலோ தலைவர் சபாரத்தினத்தை கொன்றவர்கள் புலிகள். ரெலோ தலைவர் றோவின் ஆணைப்படி புலிகளைக் கொல்ல அணியமாகிக் கொண்டிருந்தார்கள். அதனை அறிந்த புலிகள் முந்திக் கொண்டார்கள். அதுதான் நடந்தது.
ஈழம் விடுதலை அடைந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான். அதாவது பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன். ஆனால் பேரன் பிறந்தால் உச்சி மோந்து கொஞ்சி மகிழ்வேன்!
ஸ்ரீலங்கா அரசு இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கு கூடிய உரிமைகள் வழங்க வேண்டும் இல்லையேல் செக்சிலோவக்கிய குடியரசுகள் அமைதியாகப் பிரிந்து தனிவழி போனதுபோல சிங்களவரும் தமிழரும் பிரிந்து தனிநாடு காண்பதே சரியான வழி என்று சொன்னவரும் கருணாநிதிதான். இதைத்தான் இரட்டை நாக்குடையாய் போற்றி என்று பேரறிஞர் அண்ணர் வருணித்தார்!

ஜெயலலிதா தடா சட்டத்தின் கீழ் வைகோ, நெடுமாறன், சுப.வீ போன்றோரை அடைத்தவர் என நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். உண்மை. அதை யாரும் மறைக்கவில்லை. எட்டிப் பழம் இனிக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் கருணாநிதியின் யோக்கியதை என்ன? எழுபது போராளிகளை ஆண்டுக்கணக்காக சிறப்பு முகாம் என்ற அலங்காரச் சிறைகளில் வைத்து உள்ளாரே? எவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டும் இல்லை வழக்கும் இல்லை? இதுதான் தமிழினத்தலைவரின் இலக்கணமா?

எங்களை விடுங்கள். தமிழக மீனவர்கள் 550 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்களே? என்ன செய்தார் கருணாநிதி? பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று முழங்கிக் கொண்டு தில்லியோடு சண்டைக்குப் போனாரா? இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த இனத்தவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?

மகாராஷ்ட்ராவில் கார் ஓட்டிப் பிழைக்க வேண்டுமானால் மராத்தியனாகத் தான் இருக்கவேண்டும். மராத்தி மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் தான் வண்டி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று இந்தியாவின் தேசிய பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர் போட்ட சட்டம் இயற்றியது. மும்பையில், பல்வேறு மையங்களில் புகைவண்டி வேலைக்கான தேர்வு நடைபெற்ற போது ஏராளமான பீகார் மாநில இளைஞர்கள் கலந்துகொண்டனர். தேர்வு மையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் வடஇந்திய இளைஞர்களின் விடைத்தாள்களை கிழித்தெறிந்தனர். அவர்கள் தேர்வு மையத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அதை எதிர்த்து நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் எப்படிக் கொதித்து எழுந்தார்கள்? மும்பை போவதற்கு விசா வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள். அவர்களோடு கருணாநிதியை ஒப்பிட முடியுமா? கருணாநிதிக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை கொஞ்சமும் இல்லாது இருக்கிறதே? பதவி தோளில் போடும் துண்டு கொள்கை கட்டிக் கொள்ளும் வேட்டி என்றெல்லாம் பேசிய வாயல்லவா கருணாநிதியின் வாய்? இன்று ஏன் அது அடைபட்டுப் போயிற்று?

இந்திரா காந்தியைக் கொன்றவர்களை மாவீரர்களாக்கி சீக்கிய பொற்கோவிலில் படமாகத் தொங்கவிட்டுள்ளார்கள் சீக்கியர்கள். சீக்கிய பொற் கோயிலுக்குப் போகிறவர்கள் அவர்களையும் வணங்கி விட்டுத்தான் போகிறார்கள். அந்தத் துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? அவர் உடலில் ஓடுவது குருதியா? சாக்கடை நீரா?

கவிஞர் தாமரை அவர்களே! பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருப்பீர்களே? அதில் ஒரு காட்சி.

சகுனியின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு சூதாட்டத்தில் தோற்ற தருமன் தம்பியரைப் பணயம் வைத்து, அவர்களையும் இழந்த பின் தன்னையே பணயமென வைத்து அதிலும் தோற்றுப் போனான்.

“மன்னவர், தம்மை மறந்து போய் – வெறி
வாய்ந்த திருடரை யத்தனர் – அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் – இன்னும்
“செப்புக பந்தயம் வேறொன்றான் – இவன்
தன்னை மறந்தவ னாதலால் – தன்னைத்
தான் பணயமென வைத்தனன் – பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? அந்த
மோசச் சகுனி கெலித்தனன்”

அடுத்து பணயமாகத் தருமன் தன் மனைவி பாஞ்சாலியையே வைக்கத் துணிந்தபோது அவள் அழகையும் சிறப்பையும் பாரதியார் வர்ணிக்கும் பாங்கே பரவசமூட்டக் கூடியது எனினும் பரிதாபத்திற்குரியதுமாகும்.

“பாவியர் சபைதனிலே – புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் – தவப்பயனை,
ஆவியி லினியவளை – உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவிய நிகர்த்தவளை – அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத் திருவை – எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை,
படிமிசை யிசையுறவே – நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை – ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை – இன்ப
வளத்தினைச் சூதினிற் பணயமென்றே
கொடியவ ரவைக்களத்தில் – அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்”

என் செய்வது? தருமன் தான் முன்பே தடம் மாறி, தன் மனைவியாம் பாஞ்சாலியையும் பணயம் வைத்துப் பகடை உருட்டச் சம்மதித்துவிட்டானே!
இந்தச் செய்தி, பாஞ்சாலிக்குக் கிடைத்தவுடன் அவள் எப்படிச் சினந்தாள்; சீறினாள் என்பதை பாரதியார் பாடுகிற பாங்கு அந்தப் பெண்ணின் உள்ளத்தில் எத்தகைய பெருந்தீ எழுந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ பாஞ்சாலி பேசியதாகப் பாரதி பேசுகிறார் கேளுங்கள்!

“நாயகர் தாந்தம்மைத் தோற்றபின்-என்னை
நல்கு முரிமை அவர்க்கில்லை – புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் – என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர் – புவி
தாங்குந் துருபதன் கன்னிநான் – நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் – பின்பு
தார முடைமை யவர்க்குண்டோ!”

கணவன் விலை போய் விட்டான். அவனே விலை போன பிறகு; என்னைப் பந்தயத்தில் பணயம் வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கிறாள் பாஞ்சாலி!
பரிதாபத்திற்குரிய பாஞ்சாலி போன்ற ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாலும் தனக்காகப் போராடக் கூடிய தகுதியுடைவன் தனக்கு முன்பே விலை போய் விட்டானே என்று பாஞ்சாலி குமுறித் துடிப்பதுதான் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதப் பாடல் வரிகளிலேயே சூடு பறக்கும் சுவையான வரிகளாகும். சுயமரியாதை உணர்வு கொண்ட ஒரு பெண்ணின் உரிமை முழக்கமும் ஆகும். பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது தருமன், வீமன், அருச்சுனன் என்ன செய்தார்கள்?

நெட்மை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

பாஞ்சாலியின் சபதம் இது:

தேவி திரெளபதி சொல்வாள்-ஓ
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டும் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் –இது
செய்யுமுன்னே முடியேன் என்று உரைத்தாள்!

நாமும் ஒரு சூளுரை எடுத்துக் கொள்வோம். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அந்த இனத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ற கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில்
இருந்து அகற்றுவோம். அதுவரை விழி மூடோம்! கண் துஞ்சோம் கருமமே கண்ணாய் இருப்போம். வருகிற தேர்தல் நல்ல வாய்ப்பு. அதனை நழுவ விடுவோமா?

நான்கு எதிரிகள் இருக்கும் போது மூன்று எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து முதலாவது எதிரியை முறியடிப்பதுதான் இராசதந்திரம். மூன்று எதிரிகளோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை
வீழ்த்துவோம். இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை தோற்கடிப்போம். நான்காவது எதிரியை நாமே தோற்கடிப்போம். தோற்கடிக்க முடியாவிட்டால் நாம் எதற்கும்
தகுதியில்லாதவர்கள்! இது லெனின் சொன்னது. இதைத்தான் நம்ம பெரியார் சொன்னார். “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி! அப்புறம் பாம்மை அடி என்று சொன்னார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (குறள் 471)

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் இந்தக் குறள்
சீமானுக்குத் தெரியும். அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கைகொடுப்போம். அவரோடு கை சேர்ப்போம். இடித்துரைக்கும் அமைச்சர் போல் செயல்படுவோம்.

தோழமையுடன் 

நக்கீரன்

நன்றி நெருடல் இணயம்




maniajith007
 
 

பதிவுகள்6809
வசிப்பிடம்தேசாந்த்ரி 
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 78
எச்சரிக்கை

View user profile Send private message