சனி, 29 ஜனவரி, 2011

http://thenee.com/html/270111-1.html

ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை: கோத்தபாய சாட்சியம் _
Gotabhaya_Rajapaksaஇராணுவத்தளபதி மட்டுமல்ல கடற்படை மற்றும் விமானப்படையின் ஒவ்வொரு தளபதியும் நல்ல திட்டங்களை வகுத்துள்ளனர். அந்த பதவியில் வேறு யாராவது இருந்திருந்தாலும் அதனை செய்திருப்பார்கள்.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் இருந்த நிலையிலேயே அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் மாஸ்டர், தயாமாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.

படையில் 30 வருடகால அனுபவத்தை பெற்றவர் இந்த காரணத்தை செய்யவேண்டும் நான் அங்கு இராணுவ தளபதியை பற்றியே பேசியிருந்தேன். நபர் தொடர்பில் அல்ல. எனினும் இங்கு நீதிமன்றத்தை திசைதிருப்பும் விடயங்கள் கூறப்படுகின்றன என்றும் அவர் சொன்னார். 

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

சாட்சியத்தை பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியத்தை நெறியப்படுத்தியதன் பின்னர் பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி குறுக்கு விசாரணையை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். 

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் வெளியானது எல்லாமே பொய்? பதில்: என்னால் அப்படி கூறமுடியாது. 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயமும் பொய்யானதாகும். 

பதில்: பொய்.

கேள்வி: சில விடயங்கள் சரியானவை, பல விடயங்கள் பொய்யானவை?

பதில்: பல பத்திரிகைகளிலும் அவ்வாறே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திதொடர்பில் நீதிமன்றத்திகு சென்றுள்ளீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி:உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது என்றுதானே நீதிமன்றத்திற்கு சென்றிருந்தீர்கள்?

பதில்:ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் செய்திக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பெற்றிருக்கின்றீர்களா?

பதில்: ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையில் உங்கள் தொடர்பில் வெளியாகின்ற செய்தி அவ்வப்போது பொய்யானது என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கின்றீர்களா?

பதில்: ஆம். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் இடைக்கால தடையுத்தரவு பெற்றமை உண்மையா? 

பதில்: இது முற்றிலும் மாறுபட்ட விடயமாகும். 

சாட்சி அந்த கேள்விக்கு பதிலளித்ததன் பின்னர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி இந்த கேள்விக்கு சாட்சி எதிர்ப்பு தெரிவித்தமை தவறானதாகும். 

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இல்லை என்றால் கேள்வியை எதிர்ப்பதில் பிரச்சினையில்லை. வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரிடம் ஏற்கனவே இது தொடர்பில் கேள்விகளை கேட்டிருக்கின்றேன். நீதிமன்றத்தின் குறுக்கு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அப்போதிருந்த பிரதிசொலிசிட்டர் ஜெனரல் அதனை எதிர்க்கவில்லை என்பதனால் மேற்படி கேள்வி தொடர்பில் இரண்டு பொதுக் காரணங்கள் இருக்கின்றன. 

சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கல்கிசை நீதிமன்றத்திலும் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் இரண்டு வழக்குகள் இருக்கின்றன. அதன் பிரதான சாட்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இருக்கின்றார். இந்த காரணங்களினால் உண்மையில்லாத விடயங்களை சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரிக்கவேண்டிய நிலைமை இருந்ததா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும். 

சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொடர்பில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்ட பல விடயங்கள் தவறானது என்றால். இதுமட்டும் உண்மையானது எவ்வாறு என நீதிமன்றத்திடம் கேட்டார். 

இதனிடையே கருத்து தெரிவித்த சாட்சியான கோத்தபாய ராஜபக்ஷ எனக்கு எதிரான வழக்கு ஒரு காரணத்துடன் சம்பந்தப்பட்டவை இந்த செய்தி தொடர்பில் தொலைக்காட்சியிலும் கூறியிருக்கின்றார் என்பதனால் நான் இங்கு தெளிவுப்படுத்தினேன் என்றார். 

இதனிடையே எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியின் காரணம் ஒன்றானதாகும். கேட்ட கேள்விக்கு சாட்சி எதிர்ப்பு தெரிவித்தாரே தவிர சாட்சியினால் எதிர்க்கப்படவில்லை. வழக்கு தொடர்பிலான காரணத்தை கேட்க வேண்டும் என்றார். சாட்சி எதிர்ப்பு தெரிவித்தமை காரணமல்ல சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் முடியாது என்றார். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: வேறு பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றீர்களா? பதில்: இல்லை எனது காலத்தை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை. எனக்கு நேரம் முக்கியமானது. நீதிமன்றத்தில் காலம் கடந்துகொண்டிருக்கின்றது. இந்த வழக்கு (வெள்ளைக்கொடிவிவகார) விரைவில் நிறைவடைந்தால் வழக்குகளை தாக்கல் செய்யலாம். 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? 

பதில்: ஏனைய பத்திரிகைகளை அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

கேள்வி: இரண்டு வழக்கில் ஒரு வழக்கு விசாரணை கேட்டு விலக்கிக்கொள்ளப்பட்டதா? 

பதில்:இல்லை. 

கேள்வி: இடைக்கால தடையுத்தரவு பெற்றதன் பின்னரா இந்த செய்தி வெளியானது? 

பதில்: எனக்கு கேள்வி விளங்கவில்லை. 

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி:இடைக்கால தடையுத்தரவு இருக்கின்ற நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது? 

பதில்: அது தவறானது. முன்னர் வெளியான செய்தி தொடர்பிலேயே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. அதுஒரு வழக்காகும். அங்கு எனக்கெதிராக இரண்டு வழக்குகள் இல்லை. 

கேள்வி: ஒரு வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு பெற்றிருக்கின்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: இடைக்கால தடையுத்தரவு 2009 டிசம்பர் 13 ஆம் திகதி இருக்கும் போதே இந்த செய்தி வெளியாகியுள்ளது? 

பதில்: ஆம். 

கேள்வி: இராணுவத்தளபதி நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியில் இருந்தவேளையில் நியமிக்கப்பட்டார்? 

பதில்: ஆம். 

கேள்வி: யுத்த இறுதிக்காலத்தில் மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் படையில் சேவையில் ஈடுபட்டிருந்தாரா?

பதில்: ஆம். 

கேள்வி:2009 ஆம் ஆண்டு மே மாத யுத்தத்தின் போது பிரதிவாதி(சரத்பொன்சேகா) கூடுதலான அர்ப்பணிப்பை செய்திருந்தாரா?

பதில்: என்னால் கூறமுடியாது. 

கேள்வி:பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் அர்ப்பணிப்பை கூறமுடியாதா? பதில்: இராணுவத்தளபதி மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப்படைகளின் தளபதிகளும் அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் பதவிகளின் பிரகாரம் அர்ப்பணிக்கவேண்டும். 

கேள்வி:யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரதிவாதியின் சேவையை பாராட்டியிருக்கின்றீர்களா? 

பதில்: ஆம். 

கேள்வி: பிரதிவாதியின் திறமையும் யுத்தவெற்றிக்கு காரணமாக இருந்தது என்று எங்காவது கூறினீர்களா? 

பதில்:நான் கூறவில்லை. ஆனால் யாராவது அப்படி நினைத்திருக்கலாம். 

கேள்வி:2009 ஜூன் மாத பிஸ்னஸ் டுடேயிக்கு நேர்முகம் கொடுத்திருக்கின்றீர்களா? 

பதில்:ஆம். பத்திரிகை ஆசிரியரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே நான் பதிலளித்தேன். அதிலும் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. 

கேள்வி: நல்லதோ கெட்டதோ பதிலையும் வாசித்து காட்டுங்கள்? 

பதில்: இராணுவத்தளபதி நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். கடற்படை மற்றும் விமானப்படையின் ஒவ்வொரு தளபதிகளும் இதனைசெய்துள்ளனர். வேறு யாராவது அந்த பதவியில் இருந்திருந்தால் அதனை செய்திருப்பார்கள். இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் இருந்த நிலையிலேயே அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். படையில் 30 வருடகால அனுபவத்தை பெற்றவர் இந்த காரணத்தை செய்யவேண்டும் நான் அங்கு இராணுவ தளபதியை பற்றியே பேசியிருந்தேன். நபர் தொடர்பில் அல்ல. எனினும் இங்கு நீதிமன்றத்தை திசைதிருப்பும் விடயங்கள் கூறப்படுகின்றன. 

கேள்வி:இராணுவத்தளபதி தொடர்பில் நீங்கள் கூறியது பொய்யானதா?

பதில்: இராணுவத்தளபதி தொடர்பில் கூறியிருந்தேன். படையினரின் தைரியத்தையும் அதிகரித்திருந்தேன் அந்த காலத்திற்குள் செய்து முடித்தேன். அதுவே எனது செயற்பாடாகும். 

கேள்வி: கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதிலளித்து பின்னர் தெளிவுப்படுத்தலாம்? 

பதில்: ஆம்,இல்லை, முடியாது என தர்க்கத்தை முன்வைக்க முடியாது. இது முக்கியமான பிரச்சினையாகும். 

கேள்வி:சரத்பொன்சேகா தொடர்பில் பிஸ்னஸ் டுடேயிக்கு நீங்கள் கூறியது பொய்யா? 

பதில்: இராணுவத்தை பற்றியும் பேசியிருக்கின்றேன். 

கேள்வி: 2009 ஜூன் மாதம் நீங்கள் கூறியது உண்மையா? 

பதில்: ஆமாம் நான் பொய் கூறமாட்டேன். 

கேள்வி: நேர்காணலில் கூறப்பட்ட விடயம் உண்மையானதா? 

பதில்: நேர்காணலில் முழுவிபரங்களையும் கூறமுடியாது. இராணுவ தளபதியை முப்படைகளின் தளபதியே நியமிப்பார். அதற்கான பணிப்புரைகளை நான் வழங்குவேன். 

கேள்வி: அனுபவசாலி, நுண்ணறிவாளனாக அவர் இருந்ததை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:ஆம், அவரை ஜனாதிபதி நியமித்தார் நல்லது என்று தெரிந்தே அவரை நியமித்தோம். ஆனால் அந்த நியமனம் பிழையானது என பல சந்தர்ப்பங்களில் தெரிந்து கொண்டோம். 

கேள்வி: திகதியை குறிப்பிடமுடியுமா? 

பதில்: முடியாது. ஆனால் மக்கள் தீர்மானித்து விட்டனர். அதனை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்த முடியாது. 

கேள்வி: பிஸ்னஸ் டுடேயில் கடற்படை, இராணுவப்படைகளின் தளபதிகள் தொடர்பிலும் கூறப்பட்டிருக்கின்றதா? 

பதில்: ஆம். 

கேள்வி:அதுவும் நீங்கள் கூறியது போல கடற்படை, விமானப்படை தொடர்பிலா? அல்லது நபர்கள் தொடர்பிலா? 

பதில்: அவர்கள் தொடர்பில். 

கேள்வி:பிலிப் அல்ஸ்டனுக்கு கடிதமொன்று எழுதப்பட்டது தெரியுமா? எப்போது?

பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி. 

கேள்வி: இலங்கை அரசாங்கம் கடிதத்திற்கு பதிலளித்ததா? இல்லையா? என தெரியுமா? 

பதில்:தெரியாது. 

கேள்வி: டிசம்பர் 13 ஆம் திகதி கடிதம் பிரசுரிக்கப்பட்டதா?

பதில்:ஆம். 

கேள்வி:சண்டே லீடர் பத்திரிகையிலிருந்து உங்களிடம் ஏதாவது வினவினார்களா?

பதில்: என்னிடம் கேட்கவில்லை. 

கேள்வி: 11 ஆம் திகதி பின்னர் கதைப்பதாக கூறினாரா? 

பதில்: எனக்கு அவ்வாறானதொரு அழைப்பு கிடைக்கவில்லை. நான் கையடக்க தொலைபேசியே பயன்படுத்துகின்றறேன். அதற்கு அழைப்பு வரவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சில் நிறைய தொலைபேசிகள் இருக்கின்றன. 

கேள்வி:சரணடைந்த 11968 பேரில் புலிகளின் பிரபலமான தலைவர்களும் இருந்தனரா? 

பதில்:ஆம். 

கேள்வி: புனர்வாழ்வளித்து சமுகமயப்படுத்தப்பட்டுள்ளனர்?

பதில்:ஆம். 

கேள்வி:சிலர் அரசியல் நடவடிக்கைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனரா?

பதில்: ஆம். 

கேள்வி:கருணா,பிள்ளையானும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனரா? பதில்: இல்லை, யுத்தகாலத்தில் சரணடைந்தவர்களுக்கே புனர்வாழ்வளித்தோம். இவர்கள் இருவரும் இந்த அரசாங்கத்திற்கு முன்னரே புலிகளிலிருந்து விலகிய நபர்களாவர். 

கேள்வி: ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர்?

பதில்: ஆம். 

கேள்வி: குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டாரா? 

பதில்: ஆம். 

கேள்வி: ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக எவ்விதமான குற்றஞ்செயல்களிலும் ஈடுபடவில்லையா?

பதில்:எனக்கு தெரிந்த வகையில் குற்றஞ்செய்யவில்லை. 

கேள்வி:பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான உங்களுக்கு தெரியாது?

பதில்: ஆம். 

கேள்வி: குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களுக்கு தெளிவுப்படுத்தப்படுமா?

பதில்: ஆம். வேறு நிறுவனங்களும் தெளிவுப்படுத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நாவும் எங்களும் தெரிவித்திருக்கின்றது.

கேள்வி: பிரதிவாதியை சிறந்த இராணுவத்தளபதி என்று கூறியிருக்கின்றீர்களா? பதில்: நீதிமன்றத்தில் தவறு ஏற்பட்டிருக்கின்றது. வேறு யாராவது கூறியிருக்கலாம். 

கேள்வி: அவர் யாரொன்று கூறமுடியுமா?

பதில்: முடியாது. 

கேள்வி:இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றீர்கள்? பதில்: ஆம். 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். 

கேள்வி: பிரதிவாதியுடன் ஏக காலத்தில் சேவையாற்றிருக்கின்றீர்கள்?

பதில்: சேவையாற்றியிருக்கின்றேன். 

கேள்வி:1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றமைக்கு விசேட காரணம் இருக்கின்றதா?

பதில்: தனிப்பட்ட காரணத்திற்காக ஓய்வு பெற்றேன். அந்த கேள்வியுடன் பிரதிவாதியின் சட்டத்தரணி தனது குறுக்கு விசாரணையை நிறைவு செய்துகொண்டார். இதனையடுத்து எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹாரை மீள் விசாரணையை மேற்கொண்டார். 

கேள்வி:செய்தி தவறு என்பதனை ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தினீர்கள்? 

பதில்: ஆம். நேர்காணல் செய்தனர். அப்போது பொய் குற்றச்சாட்டு என்று கூறி தெளிவுப்படுத்தினேன். அக்கேள்வியுடன் மீள் விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதனால் மேற்படிவழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக