திங்கள், 24 ஜனவரி, 2011


அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 சனவரி 2011, 12:52.38 PM GMT ]
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு (Tamil Against Genocide )  அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளனர். 
இந்த வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று மனுதாரர்கள் இந்தவழக்கை பதிவு செய்யவுள்ளதாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது  .
இந்த வழக்கு வெற்றி அடையும் பொருட்டு உலகில் வாழும் அனைத்து  தமிழ்மக்களின் ஆதரவையும் அவ் வறிக்கை கோரியுள்ளது.  Genocide  அக்ட (18 USC 1091 ), Warcrimes Act (18 USC2441 ) மற்றும் Torture Act (௧௮ USC 2340A0 ஆகியவற்றின் கீழ் மகிந்தா ராஜபக்சவை கைது செய்யக் கோரி மனுக்களை அனுப்பியும்  , தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டும் செயல்படுமாறு மேலும் கேட்கப்பட்டுள்ளது .
அமெரிக்க நீதி திணைக்கள தொலைபேசி இலக்க 2025142000 எனவும் மின்னஞ்ச்சல் தொடர்பு முகவரி askdoj @usdoj .gov எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் போர்க்குற்றம் தொடர்பான திணைக்களத்தில் 2026475072 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான அதிகாரி ஸ்டீபன் இப்ப் இடம் முறையிடுமாறும் கோரப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால் பதவியில் உள்ள அரசு தலைவர்களுக்கான சட்ட பாதுகாப்பு என்பதை மீறி அரசு தலைவர்  கைது செய்யப்பட்டார் என சர்வதேச சட்ட முன் உதாரணம் ஏற்படுத்தலாம் என இந்த முயற்சியில் ஈடுபடுவோர் நம்புகின்றனர் .
மேலும், 10 நாட்கள் அமெரிக்காவில் தங்க உள்ள ராஜபக்சேயை கைது செய்யக் கோரி உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்கத் தூதுவராலயம் முன் வெகுஜன நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தமிழர்கள் வெகுஜன நடவடிக்கை ஒன்றை திங்களன்று ஏற்பாடு செய்வதாகவும் மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக