திங்கள், 28 பிப்ரவரி, 2011

அச்சு வடிவம்
'சர்வதேச சமூகம் தாமதிக்கிறது'-அம்னஸ்டி சாடல்
 
அம்னஸ்டி இன்டர்நேஷனல்
அம்னஸ்டி இன்டர்நேஷனல்
இலங்கையில் இடம்பெற்றதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் மற்றும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதிருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பை சாடியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைப்பதை வலியுறுத்த சர்வதேச சமூகம் தொடர்ந்தும் தவறிவருகின்றமை, இலங்கையில் ஆட்சியாளர்கள் சர்வதேச நியமங்களையும் ஐநாவின் கட்டமைப்பையும் ஊதாசீனம் செய்வதையே ஊக்குவிக்கும் என மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தத் தாழ்த்த இலங்கையின் சமூக கட்டமைப்பின் அடித்தளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பு நீடிக்கவே செய்யும் என்பது அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கருத்து.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கவுன்சிலின் 2010ம் ஆண்டு அமர்வுக்கு முன்னரான சம்பவங்களுக்குப் புறம்பாக, இலங்கையில் புதிதாக பல மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கே அண்மைக்காலங்களில் புதிதாக இடம்பெற்றுள்ள கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில், சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்குமாறும் மனித உரிமைகள் கவுன்சிலை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போதான சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றிய விசாரணைகளிலும் இலங்கை அக்கறை செலுத்தவில்லையெனவும் சபை விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் ஐநா சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வரை உலகம் காத்திருக்கின்றது என அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனதறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
 

சனி, 26 பிப்ரவரி, 2011

1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1)

“ இப்படியாக அடக்கியாள்பவர்களின் வன்முறையினால் ஒடுக்கப் பட்டவர்களின் வன்முறையற்ற போராட்டம் அமைதியாக்கப் பட்டது சிங்கள குறுகியவாதத்தின் ஆயுத பலம் தமிழர்களின் அகிம்சா வாதத்தை நசுக்கியழித்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தியான நிகழ்வு தமிழ் தேசியப் போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் அனுபவத்திற்கு தொடக்கம் குறித்தது.அந்த அனுபவம் தமிழர்களுக்குப் போதித்தது வன்முறையற்ற நீதியான போராட்டத்தின் சக்தியால், இனத் துவேசமானதும் மனிதத்தன்மையையும் நாகரிகப் பழக்க வழக்கங்களினதும் எல்லா ஒழுங்கு நெறிகளின் தரங்களையும் தாண்டி நிற்கும் அடக்கியாளும் வன்முறையான இராணுவ சக்தியை உட்கொள்ள முடியாது என்பதை. இந்த நிகழ்ச்சியில் அடக்குமுறையாளர்கள் ஊக்குவித்த கருத்தானது,இராணுவ பயங்கரவாதம்தான் தமிழர்களின் கோரிக்கைக்கும் மற்றும் வன்முறையற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்ட தமிழர்களின் அரசியல் கிளர்ச்சிக்குமான ஒரே பதில்,மேலும் துப்பாக்கிக் குழல்களின் முன்பாக அது பலவீனமானதும் கையாலாகானதுமான ஒரு கட்டமைப்பு” – அன்ரன் பாலசிங்கம்
“விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்” எனும் நூலில் இருந்து.
1961Satyagrahaபெப்ரவரி 20 1961 இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்காக உருவான ஸ்ரீலங்கா தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த ஒரு நாளில்தான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி (எப்.பி) என அழைக்கப்படும்.  இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ஐ.ரி.ஏ.கே) உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வன்;முறையற்ற நேரடிப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தது.

வருடக்கணக்காக நடந்துவந்த தமிழ் போராளிகளின் கொடூரமான ஆயதப் போராட்டம், இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் இயல்பாகவே இத்தகைய வன்முறை நிறைந்தது என்கிற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழர்களின் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணமான விடயங்களைப் புறந்தள்ளி இந்தப் பிரச்சனை சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஒரு விடயம் மட்டுமே எனச் சித்தரித்துக் காட்டக்கூட இந்த வன்முறையைப் பரிமாறியிருக்கலாம். இதில் மறக்கடிக்கப்பட்டு,அவகணிக்கப்பட்டு அல்லது வசதிப்படி கவனிக்காமல் விடப்பட்ட உண்மை என்னவென்றால்,மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல் போராட்டமானது அடிப்படையில் வன்முறையற்றதும் ,மகாத்மா காந்தி எனும் வன்முறைக்கு எதிரான மாபெரும் பரிசுத்தவானால் தெளிவாக எடுத்துக் கூறப்பட்ட வன்முறையையோ இரத்தம் சிந்துவதையோ முற்றாகத் தவிர்க்கும் அகிம்சை எனும் அறவழிக் கொள்கையை கடைப்பிடித்து நடத்தப்பட்டு வந்தது என்பதை.
இதில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருவது, தமிழர்களின் வன்முறையற்ற போராட்டம் தோல்வியுற்ற படியாலேயே வழக்கத்திலிருந்து வரும் அரசியல் வியாதியை குணப்படுத்துவதற்கு தோன்றிய ஒரு வழிதான் விரக்தியுற்ற தமிழ் இளந் தலைமுறையினரைத் துப்பாக்கிகளைத் தூக்க வைத்தது என்று.
இதன் தகுதிகள்; அல்லது இந்த விவாதம் எவ்வாறிருப்பினும் 20ம் நூற்றாண்டின் கடைசி முக்கால் பகுதி; ஸ்ரீலங்காத் தமிழர்களால் நடத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் நிறைந்து இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஹர்த்தால், சத்தியாக்கிரகம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபவனிகள், ஊர்வலங்கள், திரளான பிரச்சாரங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், துக்க தினங்கள், சட்டமறுப்புகள், புறக்கணிப்புகள் என்று அந்நாட்களில் தமிழ் அரசியலில் ஒழுங்கான சம்பவங்களாக இருந்தன.
இந்த வன்முறையற்ற அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களின் உச்சக்கட்ட அடையாளமாகவிருந்தது 1961 பெப்ரவரி 20ல் நடத்தப்பட்ட மிகப் பெரிய சத்தியாக்கிரக இயக்கம்தான்.
ஸ்ரீலங்காத் தமிழர்கள் எல்லோருமே பெருமைப் படக்கூடிய அந்த நிகழ்ச்சியினால்அடைந்த வெற்றி சிறிய,ஆயுதம் ஏந்தாத பாதுகாப்பில்லாத மக்களின் அர்ப்பணிப்புடன் ஐக்கியப்பட்ட முயற்சியினால் கொழும்பின் நிருவாக இயந்திரத்தை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இராணுவத்தின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரை இயங்காமல் முடக்கிய சம்பவம்தான்.
முன்னறிவிப்பு
ஆயுதப் படையினரை ஈடுபடுத்தியது, தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வட மாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தை அதிகரித்து இராணுவமயமாக்கலை தீவிரமயமாக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு ஒரு விதமான முன்னறிவிப்பு ஆகும்.
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆயுதப் படையினரின் பிரசன்னனம் எங்கும் படர்ந்து பரவியுள்ளது.
ஒரு அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் அந்த மாகாணங்களில் மறுக்கப் பட்டதாகவும் அழிக்கப் பட்டதாகவும் உள்ளது.selva
1961 சத்தியாக்கிரகம் அதன் வன்முறையற்ற அடிப்படைத் தன்மைக்கு அப்பால் தமிழ் அரசியலின் எதிர்காலப் பாடங்களுக்கான அறிகுறிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்களின் அமைதியற்ற தன்மை சாத்தியமான இராணுவ அதிகரிப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்சார வேளையில் குடியியல் சட்டமறுப்பு நடவடிக்கையாக அரம்பிக்கப்பட்ட சமாந்தர தபால்சேவைகள் போன்றவை எதிர்காலத்தில் மலரப்போகும் பிரிவினைவாதத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டின. வருந்தத் தக்க விதமாக இந்த முழு முயற்சிகளுக்கும் பலனற்ற விதத்தில் 1960 ஜூலை மாதத்தில் நடந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழரசுக் கட்சி ஒரு தேர்தல் கூட்டை வைத்துக் கொண்டதன் பயனாக திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா அதிகாரத்துக்கு வந்திருந்தார்.
அந்த நேரான தன்மைக்கு மாறாக நிகழ்வுகள் மோசமான திருப்பத்தை அடைந்தன, ஒரு வருடத்துக்குள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் பிரதான அரசியற் கட்சிகள் ஒருவரை ஒருவர் முட்டாளாக்கிக் கொண்டனர். இந்த அரசியல் முறிவின் விளைவாக எதிர்வாத அரசியல் 1961 ஆண்டின் சத்தியாக்கிரகத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.
முக்கியத்துவம்
இந்த விவகாரங்களின் தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின், தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தை விழுத்துவதிலும் மற்றம் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முக்கியமான பாத்திரத்தை வகித்த 1960 மார்ச் மற்றும் ஜூலையில் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையும் பற்றி ஆழமாக அலச வேண்டிய தேவை உள்ளது.
தமிழரசுக் கட்சியை தன்முழு சக்தியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கத் தூண்டியது எது? மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – தமிழரசுக் கட்சி உறவு முறிவடைவதைத் தூண்டியது எது? என்பன பற்றிய முன்னேற்றங்களை இது சம்பந்தமாக விபரமாக பரிசீலிப்பது பயனுள்ளது.
1srimao961 சத்தியாக்கிரகம் மேடையேற்றப் பட்டதன் பின்னணியை முற்றாகப் பாராட்ட வேண்டுமாயின் கடந்து போய்விட்ட அந்த நிகழ்வுகளை ஆராய்வது இந்தக் கட்டத்தில் மிகவும் அவசியம்.
பல மறைபுதிரான அரசியல் பேரங்கள் 1960 மார்ச் மற்றும் ஜூலை தேர்தல்களுக்கு இடையே நடந்தேறின. இந்தக் காட்சி மாற்றங்களுக்குப் பின்னால் தமிழரசுக் கட்சி மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது. 1961 சத்தியாக்கிரகத்தை நடத்த வேண்டிய அரசியல் சூழலுக்கு வழியமைத்த காரணத்தைக் கண்டறிய வேண்டுமாயின் இந்தச் சம்பவங்களை மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் எதிர்க் கட்சியான தமிழரசுக் கட்சியும் சத்தியாக்கிரக கொந்தளிப்பின்போது காட்டிய வேகமும் பிடிவாதமுமான சூழலை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் 1960 மார்ச்க்கும் ஜூலைக்கும் இடையே நடந்த அரசியல் ஊடல்களையும் கூடல்களையும் நன்கு பரிசீலித்தால் மட்டுமே முடியும்.
செப்டம்பர் 1959 ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டது சுயாதீனச் சிந்தனையாளரான டபிள்யு. தகநாயக்கா பிரதமராக வருவதற்கு வழிகோலியது. எப்படியாயினும் அவரது பதவியின் ஆயுள் குறுகியதாகி 1960 மார்ச் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடைபெற்றன. முதல்தடவையாக் பருத்தித்துறை தொடக்கம் தெவிநுவர வரையான நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றன.
பாராளுமன்றத்திலுள்ள ஆசனங்களின் தொகை 101 லிருந்து 157 ஆக அதிகரிக்கப் பட்டது. இதில் 6 ஆசனங்கள் நியமன அங்கத்தவர்களுக்கும் மிகுதி 151 ஆசனங்களும் 145 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களுக்குமாக இருந்தது.தேர்தல் தொகுதிகளான, கொழும்பு தெற்கு, அக்குறணை,மட்டக்களப்பு,மற்றும் மூதூர் ஆகியவை இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும்,கொழும்பு மத்தி மூன்று அங்கத்துவத் தொகுதியாகவும் இருந்தன.
பிரச்சாரம்
1953 ல் அரசியலில் இருந்து சுயமாக ஓய்வு பெற்றிருந்த டட்லி சேனநாயக்கா 1957 ல் அரசியலுக்கு மறுபிரவேசம் செய்தார்.1960 தேர்தல்களில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சீ.பி.டீ.சில்வா தலமை ஏற்றிருந்தார்.
பண்டாரநாயக்காவின் விதவை சிறிமா தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரதான மேடைக்கு வரவில்லை ஆனால் கடைசி நேரத்தில் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
பிரதமர் பதவிக்காக எதிர்பார்க்கப்பட்ட மற்றவர்கள் மகாஜன எக்ஸத் பெரமுன (எம்.ஈ.பி) கட்சியைச் சேர்ந்த பிலிப் குணவர்தன,லங்கா சமசமாஜக் கட்சியை (எல்.எஸ்.எஸ்.பி) சேர்ந்த  கலாநிதி.என்.எம்.பெரேரா, மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபந்து அரசாங்கப் பிரதமராகிய லங்கா பிரஜாதந்திரவாதி பெரமுனயைச்(எல்.பி.பி) சேர்ந்த விஜயானந்த தகநாயக்கா ஆகியோராவர். முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது அது ஒரு தொங்கு பாராளுமன்றமாக அமைந்தது. ஐதேக 50 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தன. எல்.எஸ்.எஸ்.பி மற்றும் எம்.ஈ.பி ஆகியவை தலா 10 ஆசனங்களைப் பெற்றிருந்தன.மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. புதிய பாராளுமன்றத்தின் ஆட்சிபீட அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்கியது.
தமிழரசுக்கட்சி வடமாகாணத்தில், காங்கேசன்துறை, வட்டுக்கோட்டை, நல்லூர், சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில் ஊர்காவற்றுறை, கோப்பாய், கிளிநொச்சி, மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, திருகோணமலை, மற்றும் மூதூர் ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக ஐதேக மீது ஒருவித பக்கச்சார்பு கொண்டபடியால் பாராளுமன்றில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற காரணத்தைக் காட்டி புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி டட்லி சேனநாயக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.எப்படியாயினும் நிலையான அரசை நிறுவுவதற்குத் தேவையான பெரும்பான்மையை டட்லியால் உருவாக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
ஆறு நியமன உறுப்பினர்கள் பிரதமரால் நியமிக்கப் படடிருந்தும் சில சுயேச்சைகள் மற்றும் எல.பி.பியில் இருந்து கட்சி தாவிய சிலரின் ஆதரவு இருந்தும் கூட 157 அங்கத்தவர்களில் டட்லியிடமிருந்தவர்கள் 60 – 61 பேர்களே. ஆனால் தமிழரசுக்கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவை பெற முடியுமாகவிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்கும் ஆனால் ஐதேக யின் தலைவர் மேலும் சில சுயேச்சை அங்கத்தவர்களின் ஆதரவை சேகரிக்க முடியுமென்பதிலும் சில சிறிய கட்சிகளை உடைத்து ஆசைகாட்டி அங்கத்தவர்களைப் பெறமுடியும் என்பதில் நன்னம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
செல்வநாயகம்
இப்படியாக செல்வநாயகத்தின் ஆதரவு நிiயான அரசாங்க மொன்றை அமைக்க சேனநாயக்காவுக்கு மிக அவசியமாக தேவைப்பட்டது. அதே போல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும்படி கோரப்பட்டால் அதற்கும் தமிழரசுக்கட்சியின் ஆதரவு சரிசமனாகத் தேவைப்படும்.
எனவே வெற்றியாளரான செல்வநாயகம் பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்தார். அரசியலில் அவர் மிகமிக வேண்டப்பட்டவராக இருந்தார். பிரபலமான மனிதர்களாகிய முன்னாள் பிரதமர் சேர் ஜோண் கொத்தலாவல,முன்னாள் அரச சபா அங்கத்தவர் சேர் அருணாசலம் மகாதேவா,ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சேர் எட்வர்டு; ஜெயதிலக, முன்னாள் நீதியமைச்சரும் செனட்சபைத் தலைவருமான சேர் லலித ராஜபக்ஸ ஆகியோர் செல்லநாயகத்துடன் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து கொண்டு ஐதேக சார்பாக டட்லி சேனநாயக்காவுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம்; ஐதேக, தனக்கு எதிராகப் போட்டி போட முடியாத ஒரு துருப்புச் சீட்டு கைவசம் இருந்தது. அதுதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஜூன் 1957ல் கைச்சாத்திட்ட பண்டா – செல்வா அல்லது பி – சீ ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது, வடக்கில் ஒரு பிரதேச சபையும் கிழக்கில் இரண்டு பிரதேச சபைகளும் ஒன்றிணையத் தக்க பிரிவுகளுடன் அமைப்பது.மேலும் நீதிமன்றத்திலும் நிருவாகத்திலும் சாத்தியமான அளவுகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது, மேலும் குடியேற்றங்களுக்கு எல்லைக் கோடுகளை அமைப்பது என்பன.
இந்த பி – சீ ஒப்பந்தத்துக்கு ஐதேக வினாலும் புத்த மத குருமாரின் ஒரு பகுதியினரிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பினால் பண்டாரநாயக்கா அதை தன்னிச்சையாக நிராகரிக்க வேண்டிய நிலைக்கு வற்புறுத்தப் பட்டார்.

இரத்மலானையில் வந்திறங்கிய செல்வநாயகத்துக்காக ஒரு எதிர்பாராத விருந்தாளி காத்திருந்தார். அது வேறுயாருமல்ல முன்னாள் மலையகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராமானுஜன் என்பவர்தான். அவர் அங்கே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக வந்திருந்தார். அந்த நேரத்தில் டட்லி சேனநாயக்கா தமிழ் தோட்டத்தொழில் தலைவர் எஸ்பி வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தார், வளங்களை உடைய தொண்டமான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழரசுக்கட்சியுடன் ஒரு பொதுவான இணக்கப் பாட்டை எட்டியிருந்தது, அதாவது ஸ்ரீலங்காத் தமிழ் கட்சி பதவியிலிருக்கும் எந்த அரசாங்கத்துடன் பேரம் பேசும் போது மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த இணக்கப்பாடு.அதன்படி இரண்டு கடசிகளிடையேயும் அரசியல் உறவு ஏற்பட்டிருந்தது. ராமானுஜன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து ஒரு எதிர்பாராத விருந்தாளியை சந்தித்துச் செல்லும்படி செல்வநாயகத்தை வற்புறுத்தினார். செல்வநாயகமும் அதற்கு இணங்கினார்.அங்கு தொண்டமானுடன் அவருக்காகக் காத்திருந்தது கல்வியாளரான கலாநிதி.பதியுதீன் மகமூத்.
கலாநிதி.பதியுதீன் மகமூத் பின்னாளில் திருமதி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகக் கடமையாற்றினார். பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கு மிக நெருங்கியவரான அவர் சிறிமாவை சுறுசுறுப்பான அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய பாத்திரங்களாக இருந்தவர்களில் ஒருவர்.
பண்டா – செல்வா ஒப்பந்தம்
கலாநிதி.பதியுதீன் மகமூத், செல்வநாயகத்திடம் n;சான்னது, தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவளிக்காமல் விலகியிருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு புத்துயிரளிக்கவும், காணி மற்றும் குடியேற்றங்களில்அதிக அதிகாரங்களுடன் கூடிய பிரதேச சபைகளை அமைப்பதற்கும் தயாராகவுள்ளது என்று. அவர் மேலும் உறுதியளித்தது,தமிழை நிருவாக மற்றும் சட்ட கோளங்களில் அமல்படுத்த தேவையான முற்போக்கான சலுகைத் திட்டங்களை. கூர்மதியாளரான மகமூத் சுட்டிக் காட்டியது பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஐதேக யால் தமிழரசுக் கட்சிக்கு வழங்க முடியாது என்பதை.
இதன்படி செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவுடன் பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டபோது  பண்டா – செல்வா ஒப்பந்தத்தைப் பற்றிய அறிவை அதன் பிரதான வாயிலாகப் பலப்படுத்திக் கொண்டார்.அதைத்தவிர டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடன் பேரம்பேசத் தொடங்கு முன்னரே அதன் ஆதரவு தனக்கிருப்பதாக தேசாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக வெளியான பூரணமற்ற ஊடகச் செய்திகளால் தமிழரசுக் கட்சி சற்று வெறுப்புக் கொண்டிருந்தது.
டட்லி சேனநாயக்காவுடனான கலந்துரையாடல்களில் தமிழரசுக் கட்சித் தலைவர் நான்கு விரிவான கோரிக்கைகளை வாய்மொழியாகச் சமர்ப்பித்தார்.
  • முதலாவது: பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மனக் கணக்கு போடப்பட்டிருந்த நில உரிமை மாற்றம் மற்றும் அபிவிருத்தி அதிகாரத்துடன் கூடிய பிரதேச சபைகளை நிறுவுதல்.
  • இரண்டாவது:நிருவாகத்திலும்,நீதி மன்றுகளிலும் தமிழ் மொழிக்குச் சம உரிமை.
  • மூன்றாவது: மலையகத் தமிழர்கள் இழந்துள்ள பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமைகளை வழங்கத் தக்க விதத்தில் விரைவான விரிவாக்கமுள்ள பதிவுகளை மேற்nகொள்ளத் தக்கதாக 1948ம் ஆண்டு இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் இல.18 ஐத் திருத்தியமைத்தல்.
  • நான்காவது:ஆறு நியமன அங்கத்தவர்களில் நான்கினை மலையகத் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்குதல்.
தேவைப்பட்டால் இந்தக் கோரிக்கைகளில் சிறிதளவு விட்டுக் கொடுப்பிற்கு தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதாகவும் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரசவ வேதனை போன்ற துயரத்தை தணிக்க டட்லி சேனநாயக்கா நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வாராயின் தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவு வழங்கத் தயார் என செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவிடம் தெரிவித்தார்.
சேனநாயக்கா,செல்வநாயகத்திடம் விசாரித்த கோரிக்கைகளை தட்டிக் கழிக்காமலேயே கூட்டம் முடிவுற்றது. அடுத்த கூட்டம் மார்ச் 26 ந்திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திரும்பவும் வேகமாக இயங்கி டட்லியை பின்தள்ளியது.
பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா
மார்ச் 23ல் செல்வநாயகத்திடம் ஒரு இளம் விருந்தாளி வந்திருந்தார். அது தொம்பே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மருமகனான பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா. திறமையான இளம் சட்டவாளரான அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப்பட்டார் ,பீலிக்ஸின் தந்தையான உயர் நீதிமன்ற நீதிபதி செல்வநாயகத்தின் நெருங்கிய நண்பராவார்.
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கும் மற்றும் செல்வநாயகத்திற்கும் இடையே 1957ல் ஏற்படுத்தப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தொடர்ந்து பின்பற்றப் படும்.அந்த ஒப்பந்தம் முற்றாக நடைமுறைப் படுத்தப் படுவதாகவும் பிரதேச சபைகள் நிறுவப்படும் என்றும் பீலிக்ஸ் செல்வநாயகத்துக்கு உறுதியளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது சிம்மாசனப் பிரசங்கத்தில் இதைப்பற்றிய கொள்கை விளக்கம் ஒன்றையும் வழங்கும் என்று பீலிக்ஸ் செல்வாவுக்கு மேலும் சொன்னார்.
சேனநாயக்கா, செல்வநாயகத்தை மார்ச் 26ல் சந்தித்த போது ஐதேக யின் தலைவர் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு சம்மதிப்பதில் தனக்குள்ள கஷ்டத்தைப் பற்றி விளக்கினார். சாத்தியப் படுமானால் கோரிக்கைகளின் வீரியத்தை சற்றே குறைக்கும்படி அவர் செல்வநாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழரசுக் கட்சியால் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் சம அந்தஸ்து கோரிக்கையை கைவிட முடியும் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருவாக மற்றும் சட்டக் கோளங்களின் நியாயமான பயன்பாட்டுக்காகத் தமிழை ஒரு அரச கரும மொழியாக மாற்றும் சில விதிகளை அமல் படுத்தினால் தமிழரசுக் கட்சி திருப்திப்படும் என்று செல்வா டட்லியிடம் தெரிவித்தார்.மலையகத் தமிழ் பிரதிநிதிகளின் கோரப்பட்;ட நான்கு பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தயாராக இருந்தது.
எப்படியாயினும் தமிழரசுக் கட்சி மற்ற இரண்டு கோரிக்கைகளான பிரதேச சபைகள் மற்றும் பிரஜாவுரிமைச் சட்டம் ஆகியவற்றில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. எனவே சேனநாயக்கா தமிழரசுக் கட்சியின் இறுதிக் கோரிக்கைகளை எழுத்து மூலம் தரும்படி கோரினார். அது அன்றைய தினமே நடந்தேறியது.
மார்ச் 27 ந்திகதி சேனநாயக்கா, செல்வநாயகத்திடம் தொடர்பு கொண்டு ஐதேக நியமித்த அங்கத்தவரை சபாநாயகராகத் தெரிவு செய்வதற்கு ஆதரவு வழங்கும்படி கோரினார். கட்சி தனது ஆதரவினை எதிர்கட்சிக்கு வழங்குவதற்கு சம்மதித்துவிட்டது எனக்கூறி செல்வா அதை நிராகரித்து விட்டார்.
அதன் தொடர்ச்சியாக எதிர்கட்சி வேட்பாளர் ரி.பி. சுபசிங்க அரசாங்க வேட்பாளர் சேர் அல்பட் பீரிசினை தோற்கடித்தார்.
சேனநாயக்கா, செல்வநாயகத்தை திரும்பவும் மார்ச் 27 மாலையில் சந்தித்தார்..
(தொடரும்)

புதன், 23 பிப்ரவரி, 2011


முன்னாள் போராளிகளின் எதிர்காலமும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்

மிகுதி நேரில் – 2
முன்னாள் போராளிகள் என்றதும் முதலில் முன்னர் படித்த நாவலொன்றின் சம்பவங்களே நினைவுக்கு வருவதுண்டு. அது உலகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ எழுதிய ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on Cross). அது கென்ய விடுதலைப் போராட்ட அனுபவங்களை சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல்.
கென்யாவை காலனித்துவத்திலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு மாவ் மாவ் என்னும் விடுதலை இயக்கம்(Mau Mau Revolt – 1952 – 1960) தலைமைதாங்கி வெற்றி பெற்றது. போராட்டத்தின் போது மிகவும் உயர்ந்த இடத்தில்இருந்த மாவ் மாவ் இயக்கப் போராளிகள், போராட்டத்தின் பின்னர் வாழ்வை கொண்டு நடத்த இயலாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டதை மிகவும் தத்ரூபமாக தியாங்கோ சித்தரித்திருக்கிறார். காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராடியவர்கள் பின்காலனித்துவ (Post- Colonialism) எஜமானர்களிடம் தங்கள் வாழ்க்கைக்காகயாசகம் செய்யும் இழி நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தை நாவல் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.

இந்த நாவலை படித்த காலத்தில் நமது சூழலில் அப்படியொரு நிலைமை வருமென்று எவரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் புதிர்கள் நிறைந்த வரலாற்று ஊர்வலத்தில் அனைத்தும் சாத்தியம்தான் என்பதைவிளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நமது அறிவுக் கண்களை வெற்றிக்களிப்பு என்னும் மாயமான் அலைக்கழித்திருந்தது. இப்போது எல்லாமே தெளிவாகத் தெரிகிறது ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான் விளங்கவில்லை.
இன்று தமிழ்ச் சமூகம் என்பது ஒரு பின்போர் சமூகம் (Post- war society) என்பதை எந்தளவிற்கு நமது  ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். யுத்தம் மிகவும் மூர்க்கமாக இடம்பெற்ற நிலங்களில் எல்லாம் இப்படியான நிலைமையை நாம் பார்க்க முடியும். இதனை ஒரு அமெரிக்க இணையம் மிகவும் சரியாக ‘யுத்தம் பழிவாங்கிய நிலம்’ (War- revenged land) என்று வர்ணித்திருக்கிறது.
இன்று நமது மக்களும் குறிப்பாக போரில் நேரடியாக அகப்பட்ட மக்களின் வாழ்நிலையும் இப்படியான ஒன்றுதான். பச்சையாகச் சொன்னால், தோல்வியடைந்த ஈழத் தமிழர் போராட்டம் ஒரு கையறு (Vulnerable Society) நிலைச் சமூகம் ஒன்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. இதில் எந்தவிதமான பினபலமுமற்ற ஏழை மக்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் மற்றும் அவர்கள்தம் குடும்பங்கள் வரை அடக்கம். ஆனால் இந்தப் பத்தி முன்னாள் போராளிகள் குறித்தே சில விடயங்களை சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றது.
இந்தப் பத்தி ஏன் முன்னாள் போராளிகள் குறித்து பிரத்தியேக கவனம் செலுத்த விழைகிறது? பொதுவாகவே ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே அதிகளவில் தங்களை இணைத்துக் கொள்வதுண்டு. இது இயக்கங்களுக்கான ஆளணி என்ற அர்த்தத்தில் எங்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. நமது சூழலை எடுத்துக் கொண்டால், ஈழத் தமிழர் அரசியல் மிதவாத தலைமைகளின் கைகளிலிருந்து ஆயுதரீதியான இயக்கங்களின் கைகளுக்கு மாறிய போது, அவற்றில் அதிகளவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே தன்னிச்சையாக இணைந்து கொண்டனர்.

அவர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் சிறுவயதில் கல்வியை பாதியில் விட்டுவிட்டு வந்தவர்கள். இவர்கள்சார்ந்த இயக்கங்கள் ஒவ்வொன்றினதும் வீழ்ச்சி இவ்வாறான பல்லாயிரக் கணக்கானவர்களை நிராதரவானநிலைக்குத் தள்ளியது. இதற்கு சிறந்த உதாரணம் புரட்சியின் மூலம் சமூகத்தை புரட்டியெடுக்கும் கனவுடன் போன பல EPRLF கீழ்மட்டப் போராளிகள் அதன் தலைமை தங்கள் குடும்பங்களுடன் ஓடியபின்னர் மேசனாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும் தங்கள் காலத்தை கழிக்க நேர்ந்தது. ஆனால் அங்கும் வசதியான குடும்பப் பின்னனிகளைக் கொண்டவர்கள், படித்தவர்கள் தாங்கள் சார்ந்த இயக்கங்களின் வீழ்ச்சிக்கு பின்னரும் தங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இன்று வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் அவ்வாறான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்களே! ஆனால் எதுவுமற்றவர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியுடன் கழிய நேர்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரேயொரு தனிப்பெரும் இயக்கமாக உருவெடுத்த பின்னர், அது பெரும் சாதனைகளை நிகழ்த்தியதாகச் சிலாகிக்கப்பட்ட காலத்தில் எல்லாம் அதன் ஆதாரமாக இருந்தவர்கள் அனைவரும் நாம் மேலே பார்த்த அந்த ஏழைகளின் புதல்வர்களும் புதல்விகளும்தான். இந்தக் காலத்தில் மதில்மேல் பூனையாக இருந்த தமிழ் மத்தியதர வர்க்கம் தங்களது பிள்ளைகளை படிப்பித்துக் கொண்டு ஏழைகளின் வெற்றிக்கு சீனவெடி போட்டுக் கொண்டிருந்தது.


இன்று அனாதரவாகியிருக்கும் போராளிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களை தங்கள் உறவுகள் என்று சொல்லிக் கொள்வதில் பலரும் பெருமைப்பட்டதுண்டு. அவர்களுடன் நின்று படம் எடுப்பதிலும் அதனை மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வதிலும் நம்மில் பலரும் முன் வரிசையில் நின்றனர். பிரபாகரன் ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் இன்று?
இன்று விடுவிக்கப்பட்ட போராளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். ஒரு புறம் மிகுதிக் காலத்தை எவ்வாறு வாழ்வது என்ற கேள்வி, மறுபுறம் சொந்த சமூகத்தாலேயே அன்னியமாகப் பார்க்கப்படும்நிலை என்று அவர்கள் பிரச்சனை தனித்துத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்களை தங்களது உறவுகள் என்று சொல்லிக் கொள்ள உறவினர்களே தயங்குகின்றனர். இதுபற்றி விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த உறுப்பினர் சொல்லும் போது, தனது சொந்த அக்காவே தன்னை வீட்டுப்பக்கம் வரவேண்டாமென்று கூறுவதாகக் குறிப்பிட்டார்.


விடுவிக்கப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் எவரும் முன்வருவதில்லை. இப்படியாக சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முன்னாள் போராளிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். விடுதலை வாங்கித்தரப் புறப்பட்டவர்கள் இப்போது ஒரு வேளை உணவுக்காக எப்படி போராடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையலாம்.

இவ்வாறானவர்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் பொறுப்பை யார் எடுப்பது? இந்த இடத்தில்தான் புலம்பெயர் சமூகம் குறித்து கேள்வி எழுகிறது. நமது புலம்பெயர் சமூகம் முன்னாள் போராளிகள் குறித்து உண்மையிலேயே என்ன கருதுகிறது? அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் இனி அவர்கள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லை என்று கருதுகிறதா?போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் புலம்பெயர் சமூகம் போரில் புலிகள் வெல்ல வேண்டுமென்னும் நோக்கில் பணத்தை வாரி வழங்கியது. வருடமொன்றுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவ்வாறு வழங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

புலம்பெயர் சமூகம் புலிகளின் பின்தளமாக இருந்த காலத்தில்தான் அரசியல்ரீதியாக தமிழ்ப் புலம்பெயர் சமூகம்(Tamil Diaspora) என்னும் ஒரு விடயம் முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் சமூகத்தின் முக்கியத்துவத்தை அங்கு இயங்கிய தேசியவாதிகள் என்போர் மிகவும் குறுகிய அர்த்தத்திலேயே நோக்கி வந்தனர். தங்களது பங்களிப்பு என்பது வெறுமனே நிதியைக் கொடுப்பது மட்டுமே, அந்த நிதியைக் கொண்டு போராட வேண்டிய பொறுப்பு களத்தில் இருப்பவர்களுடையதாகும் என்ற மனோநிலையே அவர்கள் மத்தியில் இருந்தது. புலிகள் பலமாக இருந்த காலம் முழுவதும் அவர்களும் அவ்வாறானதொரு சிந்தனையைத்தான் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு ஊட்டியும் வந்தனர்.
ஆனால் இன்று புலிகள் களத்தில் முற்றாக அகற்றப்பட்டிருக்கும் சூழலில் சரணடைந்த போராளிகளை தேவையற்றவர்கள் என்று புலம்பெயர் தேசியவாதிகள் கருதுகின்றனரா என்ற சந்தேகமே எழுகிறது. பெரும்பாலான புலம்பெயர் ஊடகங்கங்களிலும் அவர்கள் குறித்த கரிசனை வெளிப்படவில்லை. இத்தனைக்கும் புலம்பெயர் சமூகம் என்று நாம் எல்லோரும் பிரஸ்தாபிப்பதற்கான அச்சாணியாக இருந்தவர்களே அவர்கள்தான். இது பற்றி ஆய்வாளர் திருநாவுக்கரசு புலம்பெயர் மக்களின் விருப்பங்களுக்காக வன்னி தொடங்கி வாகரை வரையான மூன்று லட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்ததாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. புலம்பெயர் தேசியவாதிகள் என்போர் தங்கள் பேரப்பிள்ளைகளைக் கூட பேணிக்கொண்டுதான் புலிகளை போரிடும்படி தூண்டினர். எனவே இன்று கையறு நிலையில் கிடக்கும் மக்களை புறம்தள்ளிவிட்டு அடுத்த கட்ட அரசியலை நோக்கிச் செல்லவதாகச் சொல்வது எந்தவகையில் பொருத்தமானதாக இருக்க முடியும்?

ஆனால் அனாதரவான போராளிகள், அவர்கள்தம் குடும்பங்கள் என்பவற்றை மீளமைக்கும் பாதையை நோக்கி புலம்பெயர் சமூகம் இனியாவது வரவேண்டும் என்பதைத்தான் இந்தப் பத்தி குறித்துரைக்க முயல்கிறது. புலம்பெயர் சமூகம் தனது முக்கியத்துவத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்ய வேண்டியிருக்கின்றது.
மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக  உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும். ஒரு வகையில் இது புலம்பெயர் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமது முன்னோர்களுக்குச் செலுத்தும் பிதிர்க்கடன் காணிக்கையாகும்

nanri maruaaivu


ஈழப்பிரச்சினையும் தமிழகத் தேர்தலும்

மஹாபலி
இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இப்போதுள்ள சூழலைக் கொண்டு பார்க்கும்போது, இதே கூட்டணிகள் தொடரும் என்றால் இரண்டு பெரிய அணிகள் மோதப்போகின்றன என்று சொல்லலாம். தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணி ஒரு அணியாகவும் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் இன்னொரு அணியாகவும் உள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க எந்த கூட்டணியில் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்தின் தற்போதைய செயல்பாடுகளை வைத்து பார்க்கும்போது அவர் நிச்சயமாகத் தி.மு.க கூட்டணியில் இணைய மாட்டார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
திமுக அய்ந்து ஆண்டுகளில் அள்ளித் தெளித்துள்ள இலவசத் திட்டங்களே அதன் ஒரே நம்பிக்கை. இந்த இலவசத் திட்டங்களைத் தாண்டி திருநங்கைகளுக்கான நலவாரியம், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அருந்ததியர்க்கான உள் ஒதுக்கீடு போன்றவை தி.மு.க அரசின் குறிப்பிடத்தக்க நல்ல திட்டங்கள். ஆனால், இவை பாமர மக்களைக் கவரக்கூடிய, ஜனரஞ்சகமான, வாக்கு வங்கியை உருவாக்கக்கூடிய திட்டங்கள் இல்லை. இன்னொருபுறம் வெளிப்படையான வாரிசு அரசியல் போட்டிகள், திரைப்படத்துறையையே கலைஞர் குடும்பம் ஆக்கிரமித்துள்ளது, அருவெறுக்கத்தக்க வகையில் நடைபெறும் கருணாநிதிக்கான பாராட்டு விழாக்கள், விலைவாசி உயர்வு ஆகியவை திமுகவின் பாதகங்கள்.
வருடம் முழுதும் நடக்கும் உழவை அறுவடைக்காலத்தில் பெருமழை வந்து கெடுத்ததைப் போல, இலவசத் திட்டங்களாலும் ஸ்டாலினை முன்வைத்து மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் திமுக உருவாக்கி வைத்திருந்த இமேஜையும் ஒட்டுமொத்தமாகக் காலி செய்து விட்டது ஸ்பெக்ட்ரம் பிரச்சினை. இன்னொருபுறம் விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவுக்கும் கூடும் கூட்டத்தை வைத்து மட்டுமே எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாய்த் திரள்வதும் அது வாக்குகளாய்த் திரளாமல் போய்விடுவதும் தமிழக அரசியலுக்குப் புதிதல்ல.
மேலும் கருணாநிதியின் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் இம்மி பிசகாமல் பொருந்திப் போகிறவர்தான் ஜெயலலிதா. இன்னொரு பக்கம் விஜயகாந்த், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் கருணாநிதி, ஜெயலலிதாவை விட ஒரு மோசமான ஆட்சியாளராக இருப்பார் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும் முன்பே குடும்ப அரசியல் செய்வது, இட ஒதுக்கீடு தொடங்கி தமிழகத்தின் முக்கியமான எந்த பிரச்சினையிலும் எந்த கொள்கையும் இல்லாதது, ஒருகாலத்தில் ஈழ ஆதரவு பேசி தன் மகனுக்குப் பிரபாகரன் என்று பெயர் வைத்த விஜயகாந்த், இறுதிப்போர்க் கால கட்டத்தின் போது கருணாநிதி, ஜெயலலிதாவைப் போலவே சந்தர்ப்பவாதியாக நடந்துகொண்டது என்று அவரது செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியும் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றிய மறதியும் தமிழக மக்களிடம் அதிகரித்தால், ஜெயலலிதா முதல்வர் ஆவார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றியெல்லாம் கவலையில்லை, இலவச வீடும் இலவச டிவியும்தான் முக்கியம் என்று தமிழக மக்கள் நினைத்தால் கருணாநிதி முதல்வர். ஆனால், இதைத் தாண்டி ஈழப்பிரச்சினைக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ள உறவு குறித்து யோசிப்போம்.
ஒருபுறம் ஈழ ஆதரவாளரான திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியே ஈழ எதிர்ப்பு கூட்டணியாகக் கருதப்படுகிறது. இன்னொருபுறம் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைகோவும் சீமானும் அதிமுக கூட்டணி ஆதரவு நிலையில் இருக்கிறார்கள். இப்போது இரண்டு கேள்விகளை ஆராய்வோம்.
1. ஈழப்பிரச்சினை சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?
2. தேர்தல் களத்தில் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா?
முதலாவது கேள்விக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி. இறுதிப் போர்க் காலகட்டத்தில் பெரியார் தி.க, சீமான் போன்றவர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோதும் காங்கிரஸ் கூட்டணியே கணிசமாக வெற்றிபெற்றது. இதற்குக் காரணம் தமிழக மக்கள் ஈழப்பிரச்சினை பற்றி அக்கறை காட்டவில்லை என்றோ பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டது மட்டும்தான் காரணம் என்றோ சொல்லிவிட முடியாது.
ஈழப்பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டுபோய் வெகுஜன அரசியலாக மாற்றத் தவறியதும் ஈழப்பிரச்சினையை முன்வைக்கும் தேர்தல் கட்சித் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதும் முக்கியமான காரணங்கள். குறிப்பாக ஜெயலலிதா ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று பேசியபோதும் சரி, மற்ற நேரங்களில் ஈழ எதிர்ப்பைப் பேசியபோதும் சரி வைகோ எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டே ஒருவர் ஈழ ஆதரவு பேசினால் அவரைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
வைகோ செய்த அதே தவறை இப்போது அவரோடு சேர்ந்துகொண்டே சீமானும் எடுத்திருக்கிறார். சீமானின் இந்த முடிவு அவர் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறுமனே விடுதலைப்புலிகள் பலமோடு இருந்த காலங்களில் மட்டுமல்ல, இறுதிப்போருக்குப் பிறகும் கூட அ.தி.மு.க ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காகத் தமிழகத்தில் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒட்டி சட்டமன்றத்தில் பா.ம.க, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களோ ஜெயலலிதாவின் ஆணைப்படி சட்டமன்றத்துக்கே செல்லாமல், புறக்கணித்தனர்.
நளினி விடுதலை குறித்த பிரச்சினையிலும் அதிமுகவின் நிலைப்பாடு என்பது ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுதான். இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் சுப்பிரமணியசாமி, துக்ளக் சோ போன்ற எல்லோருமே ஈழ எதிரிகள். வைகோவையும் சீமானையும் இன்னமும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. தேர்தல் வெற்றிக்காக, அவர்கள் ஈழ ஆதரவு பேசும்போது தற்சமயம் மௌனம் காத்தாலும், ஆட்சிக்கு வந்துவிட்டால் ஜெயலலிதா சோ, சுப்பிரமணியசாமியின் பக்கம்தான் நிற்பார். எல்லாவற்றையும் விட முக்கியம் அவர் கடைசிநேரம் வரை காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தவர், நாளை கூட முயற்சி செய்பவர் என்று சொல்லலாம். ‘ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் திமுக ஆதரவை விலக்கிக்கொண்டால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்’ என்று ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது ஈழமக்களின் எதிரியான காங்கிரஸ் கட்சிக்குத்தானே.
சில வாரங்களுக்கு முன்பு, ‘காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, இப்படி எல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது’ என்று வைகோ பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்டாரே தவிர, ‘காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம்’ என்று சொல்லவில்லை.
சீமான், தமிழக மக்களால் முழுவதுமாக அறியப்பட்ட அரசியல் தலைவர் அல்ல. ஆனால், அவரது தொடக்கங்களே இப்படியான குழப்பநிலையாக இருந்தால் அவர் பெரிதாக எதையும் சாதிக்க மாட்டார். மேலும் இதுமட்டுமல்லாது விடுதலை ஆனபிறகு சீமானின் பேச்சுகளும் எழுத்துகளும் நகைப்புக்கு உரியவையாக மாறிவிட்டன.ஒருபுறம் சினிமா பாணியில் ‘என்னை ஒருநாள் முதல்வர் ஆக்குங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன்’ என்கிறார், இத்தகைய பேச்சுகள் அவரை மதிப்புக்குரிய தலைவராக உருவாக்காது.
இரண்டாவது கேள்விக்கு வருவோம், வெறுமனே தமிழகத் தேர்தல் நிலைப்பாடுகளையும் தேர்தல் கட்சிகளையும் அடிப்படையாக வைத்து ஈழ அரசியல் பேசியதன், பேசி வருவதன் தவறுதான் சீமானின் அதிமுக ஆதரவுநிலை. இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே (இந்திராவின் காங்கிரஸ் உள்பட) ஈழப்பிரச்சினையைத் தங்கள் தேர்தல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர அவர்களுக்கு உண்மையில் ஈழமக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன், ராமதாஸ், இப்போது சீமான் என்று இந்த தலைவர்களின் தேர்தல் சந்தர்ப்பவாத அரசியலையும் வெறுமனே உணர்ச்சியூட்டும் பேச்சுகளைத் தாண்டி முக்கியமாக முன்வைக்கப்பட வேண்டியவை இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், தமிழக மீனவர் படுகொலைகள், அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவை.
இவற்றை மாற்று அரசியல் களத்தில்தான் செய்ய முடியுமே தவிர, தேர்தல் ஆதரவு, எதிர்ப்பு களத்தில் அல்ல. அத்தகைய களத்தில் பணியாற்றி தமிழக மக்களிடம் கொண்டு செல்லும்போது மட்டும்தான், தமிழகத்தில் ஈழ மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசுவது பொருளுடையதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011


பாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி

புரட்சி அலை அடிக்கும் அரபுலகில், வளைகுடா செல்வந்த நாடான பாஹ்ரைன் மட்டும் மக்கள் எழுச்சியை வன்முறை கொண்டு அடக்க எத்தனிக்கின்றது. தலைநகர் மனாமாவில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இது மொத்த சனத்தொகையில் பத்து வீதமாகும். மனாமாவின் மத்தியில் அமைந்துள்ள “பேர்ல் சதுக்கத்தில்” கூடாரங்களை அமைத்து அஹிம்சை வழியில் போராடிய மக்கள் மீது, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நள்ளிரவில் திடுதிப்பென புகுந்த படையினர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பிணங்களாலும், காயமுற்றவர்களாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் கூட, எழுச்சியுற்று ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இது போன்று அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரானிலோ, அன்றில் சீனாவிலோ நடந்திருந்தால், ஊடகங்கள் ஒரு மாதத்திற்கு அதையே தலைப்புச் செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கும். எத்தனையோ பேர் அடுத்த பத்து வருடங்களாவது படுகொலைகளை மறக்காமல் நினைவுகூர்ந்திருப்பார்கள். என்ன செய்வது? அப்பாவி பாஹ்ரைனியர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தைக் கொண்ட நாடொன்றில் பிறந்த துரதிர்ஷ்டசாலிகள். அதனால் அவர்களது தியாகமும், சிந்திய இரத்தமும் வெளியுலகின் கவனிப்பின்றி அமுங்கிப் போகலாம்.
இன்றைய சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நடுவில் அமைந்திருக்கும் தீவான பாஹ்ரனில் குறைந்தது பத்தாயிரம் வருடங்களாவது மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், மெசப்பத்தோமிய நாகரிக காலத்தில் செழிப்பான வணிக மையமாக திகழ்ந்துள்ளது. மேசப்பத்தொமியர்கள் பாஹ்ரனை “டில்முன்” என்றழைத்தனர். விவிலிய நூலில் வரும் ஏடன் தோட்டம் இன்றைய பாஹ்ரைனான டில்முன் ஆக இருக்கலாம் என சில அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய ஈரானின் பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதால், ஈரானியர்களின் குடியேற்றமும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இன்றைக்கும் பாஹ்ரைன் மக்களில் ஒரு பிரிவினர் ஈரான் குடியேறிகளாக கருதப்படுகின்றனர். இன்று “அஜாரிகள்” என அழைக்கப்படும் அந்த மக்கட்பிரிவினர் ஒரு லட்சம் அளவில் இருக்கலாம். அவர்களை அரேபியராக மாறிய ஈரானியர்கள் என்றும் குறிப்பிடலாம். இஸ்லாமிய மதம் பரவிய காலத்தில், ஈரானிய ஷியா மதப் பிரிவை பின்பற்றினார்கள். அதனால் பாஹ்ரைன் அரசு, அவர்களது எழுச்சியை ஈரானின் தூண்டுதலால் நடப்பதாக காரணம் சொல்லிக் கொண்டிருந்தது.
பாஹ்ரைனின் மொத்த சனத்தொகை 568,000 ஆகும். இவர்களில் ஷியா மதப்பிரிவை சேர்ந்தோரின் எண்ணிக்கை 374,000 . அதாவது பாஹ்ரைனியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அல்லது எழுபது சதவீதம் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் முன்னர் குறிப்பிட்ட ஒரு லட்சம் ஈரானிய குடியேறிகளை தவிர, மிகுதிப்பேர் பஹ்ரைனிய பூர்வீக மக்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஈரானிய ஆயத்துல்லாக்களை பின்பற்றுவதில்லை. தமக்கென தனியான “அக்பாரி” எனும் மதக் கல்லூரியின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள். இந்த மக்கள் பஹ்ரைனிய நாட்டுப்புறங்களில் செறிவாக வாழ்கின்றனர். தலைநகர் மனாமாவில் சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்த அரபுக்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம். பாஹ்ரனின் அரசர் ஹமட் அல் கலிபா, சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்தவர். 187,000 தொகையினரான சுன்னி இஸ்லாமிய- அரபுக்கள் நீண்ட காலமாக பாஹ்ரனின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இவர்களின் மூதாதையர் சவூதி அரேபியாவில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம்.
ஒரு காலத்தில் முத்துக் குளித்தல் மட்டுமே பாஹ்ரைனுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய தொழிற்துறையாக இருந்தது. எழுபதுகளில் எண்ணெய் வளம் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்தது. அருகில் இருக்கும் கட்டார், குவைத் போன்று பாஹ்ரைனும் செல்வந்த நாடாகியது. வளைகுடா நாடுகளில் முதன்முதலாக பாஹ்ரனின் எண்ணெய்க் கிணறுகள் வற்ற ஆரம்பித்தன. இதனால் மாற்றுப் பொருளாதாரமாக வங்கி, நிதித் துறையில் ஈடுபட்டு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைத் தளம் பாஹ்ரைனில் அமைந்துள்ளது. அமெரிக்கர்கள் கொடுக்கும் வாடகைப் பணம், பாஹ்ரைன் அரசுக்கு மேலதிக வருமானம். இவ்வளவு செல்வமும் பெரும்பான்மை ஷியா மக்களை போய்ச் சேருவதில்லை. அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு பணக்கார நாட்டில் ஏழைகளாக வாழும் அவலம் தொடர்கிறது.
இன்று பாஹ்ரைனில் ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 54 % மானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஒப்பந்த கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். எத்தனை வருடம் வேலை செய்தாலும், நிரந்தர வதிவிட அனுமதியோ, பிரஜாவுரிமையோ கிடைக்கும் வாய்ப்பற்றவர்கள். வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சுன்னி முஸ்லிம்கள். இவர்கள் இன்றைய குழப்பகரமான சூழலில் மன்னருக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஹ்ரைன் அரசு, குறிப்பிட்ட சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கி சுன்னி முஸ்லிம் எண்ணிக்கையை அதிகரிக்க முயலுவதாக வதந்திகள் உலாவுகின்றன. தனது சொந்த மக்களில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடும் பொழுது, எதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாஹ்ரைனில் வேலை செய்யும் நம்மவர்களைக் கேட்டால் பின்வருமாறு பதில் வரும். “அவர்கள் உழைக்க விரும்பாத சோம்பேறிகள்.” பாஹ்ரைனின் ஆளும் வர்க்கம் கூட, அது போன்ற கருத்தை ஒரு சாட்டாக கூறி வருகின்றது. உண்மையில் இதற்கு இரண்டு காரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.
1. முதலாளித்துவ பொருளாதாரம் குறைந்த கூலிக்கு சுரண்டப்படும் தொழிலாளிகளை மட்டுமே விரும்புகின்றது. உள்ளூர் மக்கள் இதை விட மூன்று மடங்கு அதிக ஊதியம் எதிர்பார்ப்பார்கள். பாஹ்ரைனின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப குடும்பத்தை பராமரிப்பதற்கு தற்போது கொடுக்கப்பட்டு அற்பத்தொகை போதாது.
2.அரசின் திட்டமிடப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கை. பஹ்ரைனில் உண்மையில் ஒரு சிறுபான்மையினம் (சுன்னி முஸ்லிம்), பெரும்பான்மையினத்தை (ஷியா முஸ்லிம்) அடக்கி ஆளுகின்றது. பொருளாதாரத்தை அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்துவதால் அவர்களின் பலம் குறைக்கப்படுகின்றது.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாதல்லவா? ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமீப காலத்தில் கூட, 40 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஷியா சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவு. ஷியாக்களின் Wifaq கட்சி, 18 ஆசனங்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலத்தையும் சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் வீட்டோ செய்யும் அதிகாரம் கொண்டுள்ளனர். அதையும் தாண்டிச் சென்றால் மன்னர் ஹமட் அதனை நிராகரிக்கலாம். ஆகவே ஏற்கனவே உள்ள அரசமைப்பின் கீழ் உரிமைகள் கிடைக்காது என்று தெரிந்த பின்னர் தான், ஷியா சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.
பாஹ்ரைன் சிறுபான்மையினரின் அரசு, பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வது இலகுவானது அல்ல என்று தெரிந்து வைத்துள்ளது. அதனால் ஏற்கனவே நரித்தனத்துடன் பல திட்டங்களை தீட்டியிருந்தது. பாஹ்ரைனின் இராணுவத்தை தேசிய இராணுவம் என்று கூறுவதை விட, கூலிப்படை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். பெருமளவு சிப்பாய்கள் அதிகளவு கூலியாள் கவரப்பட்ட பாகிஸ்தானியர்கள். இயல்பாகவே அரேபியர்களை முட்டாள்களாக கருதும் இனவாதம் பாகிஸ்தானியர் மத்தியில் சாதாரணம். அதிலும் பாகிஸ்தானில் கிடைத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் கிடைக்கின்றது என்றால், பாஹ்ரைன் மன்னருக்கு விசுவாசமான படையினராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கூலிப்படையை கொண்டு போய் விட்டு, “ஆர்ப்பாட்டம் செய்யும் பொது மக்களை சுடு” என்றால், எந்தவித உணர்ச்சியுமற்று சுட்டிருப்பார்கள்.
மக்கள் எழுச்சியை அடக்குவதில் அமெரிக்காவின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. பாஹ்ரனில் மேற்கத்திய பாணியிலமைந்த ஜனநாயகம் ஏற்பட்டால் கூட, அது அமெரிக்க நலன்களுக்கு விரோதமாக இருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றமும், பிரதமர் பதவியும் பெரும்பான்மை ஷியா மக்களின் கைகளுக்கு சென்று விடும். ஷியா முஸ்லிம்களின் விசுவாசம் ஈரானை சார்ந்ததாக இருக்கும். பாஹ்ரைனில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பப் போவதில்லை. ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்கா தனக்கு தானே காலில் சுட்டுக் கொண்டது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் ஆட்சியை அகற்றியதால், சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களிடம் இருந்த அதிகாரம், தற்போது பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களிடம் சென்று விட்டது. ஈராக் போரின் போதான படை நகர்த்தல்களுக்கு, பாஹ்ரைன் தளத்தில் இருந்து தான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.வருங்காலத்தில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் பாஹ்ரைன் தளம் அத்தியாவசியமானது. மக்கள் சக்தி ஆளுபவரை மாற்றினால், அமெரிக்க படைத் தளத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். ஈரானைப் பொறுத்த வரை, அது ஒரு இராஜதந்திர வெற்றியாகி விடும்.
நன்றி : கலையகம்

தாயே


தனது வாழ்வின் இறுதிவரை போராட்டங்களோடு இணைந்து இன்பம் துன்பம் இரண்டையுமே சந்தித்த வீரத்தாய் பார்வதி அம்மாள்
[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011, 01:00.06 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அனபுத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைமைச் செயலகத்தின் இரங்கற் செய்தி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அனபுத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து இலங்கையில் மட்டுமின்றி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்ற இந்த வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் சார்பில் ஜேர்மனியிலிருந்து இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்மை விட்டு பிரிந்து மீளாத் துயில் கொள்ளும் வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்கள் யாழ்ப்பாண தமிழர் சமூகத்தின் ஒரு சராசரித் தாய் ஆவர். அவருக்கும் தனது பிள்ளைகள் நல்ல கல்வி கற்று ஒரு சிறந்த கல்விமானாகவோ அன்றி சமூகம் போற்றிப் பாராட்டுகின்ற ஒரு உயர்பதவி வகிக்கும் அளவிற்கு உயர வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருந்திருக்கும்.
ஆனால் தனது கனி~;ட புதல்வன் யாருமே எதிர்பார்க்காக அளிவிற்கு மிகவும் வியப்புக்குரிய ஒரு பாதையை தேர்ந்தெடுத்து உள்ளார் என்ற செய்தி அந்த தாயை எட்டியபோது அவரது உள்ளம் என்ன வகையான உணர்வை பெற்றிருக்கும் என்பதைப்பற்றி நாம் தீவிரமாக ஆராயத் தேவையில்லை.
மனதில் ஒரு திகைப்பு அத்தோடு ஏக்கம் அத்துடன் அச்சம் தரும் நினைவலைகள் எல்லாம் அவர் முன்னால் தோன்றி மறைந்திருக்கும்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தனது பிள்ளை தேர்ந்தெடுத்துள்ள பாதை ஒரு சாதாரண பாதை அல்ல. அது தமிழ் மக்களின் விடிவிற்கான பாதை. ஆத்துடன் எவ்வித சுயநலமே அற்ற உன்னத பாதை. ஒரு காலத்தில் உலகெங்கும் இருந்து வியக்கும் விழிகள் தனது பிள்ளையை தலையை உயர்த்திப் பார்க்க உள்ளன. என்றெல்லாம் அந்தத் தாய் நிச்சயம் எண்ணியிருப்பார்.
ஆமாம் என் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே. நமது பார்வதி அம்மாள் தனது வாழ்வின் இறுதிவரை இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவோ அன்றி மாறி மாறியோ அனுபவித்து இந்த உலகத்தில் எந்தத் தமிழ்த் தாயும் அனுபவிக்காத உணர்வுகளை அனுபவித்துச் சென்றிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.
எமது நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்த வீரத்தாய் நிச்சயமாக சொர்க்கத்திற்கே சென்றிருப்பார். இது நிச்சயம். ஆனால் தற்போது சொர்க்கத்தில் உறங்கும் அந்தத் தாய் இந்த மண்ணுலகில் அனுபவித்த வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் நாம் புரட்டிப் பார்த்தால் அதை நாங்கள் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு சோகம் நிறைந்திருக்கும் மனது நிறைந்த அனுபவம் பிறந்திருக்கும்.
தனது பிள்ளை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அதுவும் விடுதலைப் புலிகள் இயக்கம் போதிய பலமற்ற இயக்கமாக இருந்த காலத்தில் நமது வீரத்தாய் பார்வதிஅம்மாள் மிகுந்த வேதனையையும் சோதனைகளையும் சந்தித்திருப்பார் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு நிமிடமும் தனது பிள்ளைக்கு என்ன ஆபத்து வந்துவிட்டதோ என்று ஏங்கித் தவிக்கின்ற ஒரு சாதாரணத் தாயாக அந்த பார்வதிஅம்மாள் இருந்திருப்பார்.
பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்பெற்ற இராணுவ மற்றும் அரசியல் அமைப்பாக வளர்ச்சியடைந்த போது அந்தத் தாய் சற்று மனங்குளிர்ந்து தனது பிளைளையின் நோக்கம் நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தான் நேசிக்கும் மக்களை கொடிய சிங்கள ஆட்சியாளரிடமிருந்து விடுவித்து உலகம் வாழ்த்தியும் போற்றியும் நிற்கும் ஒரு தனித் தமிழ்த் தேசத்தின் தலைவனாக தனது பிள்ளையை மனக்கண்ணால் கண்டிருப்பார். அப்போது அந்தத் தாயின் உள்ளத்தில் நிச்சயம் ஒரு துளியேனும் சந்தோசம் வழிந்திருக்கும்.
இவ்வாறான இந்த அற்புதத்தாய் தொடர்ச்சியாக தனது பிள்ளையின் தலைமையில் ஒரு மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சியை எவ்வாறு கண்டிருப்பாரோ அதே போல முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்த ஒரு அமைதித்தாயாக நமது கண்களுக்குத் தெரிந்தார்.
ஆமாம் எம் அன்புக் குரிய இனிய தமிழ் உறவுகளே! தொடர்ந்து தனது துணைவரை இழந்து அந்த அன்னை தவித்தார். போதிய வைத்திய வசதிகள் கிடைக்காமல் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நடத்திய கபட நாடகங்களால் அவர் கலங்கினார். முதல்வர் கருணாநிதி தன்மீது இரக்கம் காட்டி தமிழ்நாட்டில் தான் வைத்திய சிகிச்சை பெற உதவி செய்வார் என்று என்று எதிர்பார்த்தார்.
ஒன்றுமே கிட்டா நிலையில் அந்த வீரத்தமிழ் மகனைப் பெற்ற தாய் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் ஒரு ஓரமாக உறங்கும் ஒரு சாதாரண பெண்மணி போல் அங்கே உறங்கினார்.
அவருக்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த திரு சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை மக்கள் ஆகியோரது அன்பான அணைப்பால் அந்த அன்னை தனது சகல துன்பங்களையும் மனத்தினுள் மறைத்து வைத்துக் கொண்டு தனது துணைவர் எவ்வாறு மனக்கவலைகளுடன் தனது உயிர்போகும் நேரத்தில் காணப்பட்டாரோ, அதேபோலவே இந்த அற்புதத்தாயும் தனது வாழ்வின் இறுதிவரை இன்பத்தையும் துன்பத்தையும் இணைந்து அனுபவித்து வெற்றி தோல்வி என்ற இரண்டையும் நேரடியாகக் கண்டார்.
இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர்களின் வீரம் என்ற அத்தியாயம் எப்போது எழுதப்பட்டாலும் அதில் முதன்மைத் தாயாக, முதலிடம் கொடுத்து பூசிக்கப்படும் ஒரு வீரத்தாயாக பார்வதி அம்மாள் குறிப்பிடப்படுவார் என்பதும் என்றும் அவர் எம் மனங்களில் இருப்பார் என்று நாம் நம்புகின்றோம்.
இவ்வாறான ஒரு நேரத்தில் இந்தத் வீரத்தாயின் இழப்பு என்பது என்மை இன்னும் உற்சாகப்படுத்தும் ஒரு கருவியாகவே நமக்கு பயன்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் உலகத் தமிழ்பண்பாட்டுஇயக்கம் உலகத்தமிழ் மக்களிடம் விடுக்கின்றது.
இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் விடுத்த இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

nanri BBC



புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 பிப்ரவரி, 2011 - பிரசுர நேரம் 17:28 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
யுத்தம் பற்றி சிங்கள மக்கள் சாட்சியம்
 
நல்லிணக்க ஆணைக்குழு-ஆவணம்
நல்லிணக்க ஆணைக்குழு-ஆவணம்

இலங்கையில் கடந்தகால போர் தொடர்பில் ஆராய்ந்து மக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்துவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெற்கே காலி மாவட்ட மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
1970களின் இறுதியில் இலங்கையில் அக்கால அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் விடுதலைப் புலிகள் உருவாக காரணம் என பீ.பி ஹெட்டிகே என்ற ஓய்வு பெற்ற சிங்கள அரச ஊழியர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
திறந்த பொருளாதாரம் காரணமாக உள்ளூர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டதும் சந்தை வாய்ப்புகள் இல்லாமல் போனமையும் இளைஞர்கள் விரக்தியடைந்து தீவிரவாதத்தின் பாதையில் செல்ல வழிவகுத்தது என அந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர் கூறுகின்றார்.
இதேவேளை, தெற்கில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் வாழும் பல தமிழர்களுக்கு தமது பிள்ளைகளுக்கு தமது அடையாளங்களை மறைத்து சிங்களப் பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பத்தேகம பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ஜயனாத் என்பவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்து தெரிவித்தார்.
காலி கோட்டைப் பகுதியில் பிரஜைகள் குழுவின் தலைவராக உள்ள ரூபன் என்பவர், ‘எதிர்காலத்தில் இவ்வாறான மோசமான யுத்தமும் வன்முறைகளும் ஏற்படாதவாறு அரசாங்கம் சர்வதேச சட்ட நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், அரசியல்வாதிகள் இனவாதம் பேசிக்கொண்டு அதிகாரத்துக்கு வராதபடி சட்டங்களை அதிகாரிகள் உருவாக்க வேண்டும்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மற்ற சமூகங்களையும் மதத்தவர்களையும் மதிக்கும் சகிப்புத்தன்மை மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் பற்றி சந்திரிக்கா பள்ளியகுரு என்ற சட்டத்தரணி பேசினார்.
யாழ் நூலக எரிப்பு
1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, அரசாங்கத்தின் தேர்தல் அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய போது அங்கு, யாழ் நூலகத்துக்குத் தீவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தான் கண்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் காலி சமூக அபிவிருத்தி மன்றத்தின் டீ.டப்ளிவ்.சிறிமான்ன உணர்ச்சிவசப்பட்டு விளக்கினார்.
அன்று விட்ட தவறை இன்றைய ஆட்சியாளர்களும் விடாது நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதே இன்றுள்ள முக்கிய கடமை என்றும் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினார்.
இதேவேளை தமது உறவுகள் யுத்தத்தில் உயிரிழந்த போதிலும் அவர்களுக்கான இழப்பீடுகள் இதுவரை உரியமுறை கிடைக்கவில்லையென ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் மற்றும் மனைவிமார் பலரும் முறையிட்டனர்.
 

சனி, 19 பிப்ரவரி, 2011


இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் கொடுப்பதென்பது கிளிநொச்சியின் விவசாயத்தையும் அழித்து, குடிநீருக்காக காத்திருக்கின்ற யாழ்குடாநாட்டு அப்பாவி மக்களையும் ஏமாற்றும் செயற்திட்டம்‏
- வீ.ஆனந்தசங்கரி
sangary-aஇரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டிற்கு குடிநீர் வழங்க ஓர் புதிய திட்டத்தை அரசு பலகோடிரூபா செலவில் உருவாக்குவதற்கு நான் ஆட்சேபணை செய்து வருவதை சிலர் தவறான கருத்து மூலம் விமர்சிப்பதால் இத்திட்டம் பற்றி நியாயப்படுத்தக் கூடிய எனது நிலைப்பாட்டை யாழ் குடாநாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை எனக்குண்டு.
கிளிநொச்சி மாவட்டம் தான் யாழ்மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவதால், இத்திட்டம் எவ்வாறு யாழ்குடா நாட்டு மக்களையும், விவசாயத்தை வருமானமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்ட கிளிநொச்சி மக்களையும், விமோசனப்படுத்தும்? எனவே இரு சாராரும் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்குவதா? வேண்டாமா? என்பதை தீர்மாணிக்க வேண்டும்
முதலாவதாக இத்தகைய பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க எண்ணியவர்கள் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்பற்றி கிளிநெச்;சி வாழ் விவசாயிகளின் கருத்துக்களை தெரிந்து கொள்ளாதது பெரும் தவறாகும். கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் குடியேற்றத்திட்டங்கள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், குமரபுரம், முரசுமோட்டை எட்டாம் வாய்க்கால், உருத்திரபுரம், சிவநகர் போன்ற பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குடியேற்றவாசிகள் குடியேறுவதற்கு முன் இரணைமடுக்குளம் பெரும் கமக்காரர்களின் ஏகபோக உரிமைக்குள் கட்டுப்பட்டிருந்தது. குடியேற்றவாசிகளுக்கு நீர் விநியோகம் அரைஏக்கர், முக்கால் ஏக்கர், ஒரு ஏக்கர் என வருடாவருடம் நடைபெறும் “தண்ணீர்” கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும். பெரும் கமக்காரர் தம்மிடமுள்ள காணியின் விளை நிலத்தைப் பொறுத்து குடியேற்ற வாசிகளிலும் பார்க்க கூடுதலான பங்குத் தண்ணீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தனர். குளக்கட்டு உயர்த்தப்பட்டு குளத்தின் கொள்ளளவைக் கூட்ட அவர்களே பெரும் முயற்சியும் செய்து அதற்காகத் தமது சொந்தப் பணத்தையும் முதலீடு செய்து அவ்வுரிமையைப் பெற்றனர். பின்னர் ஏழைக் குடியேற்றவாசிகளின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டு அவர்களுக்கு முன்னர் இருந்த நிலையிலும் பார்க்க கூடியளவு நிலத்தில் சாகுபடி செய்யக்கூடிய உரிமையை அவர்கள் சார்பில் நடத்திய போராட்டங்கள் பெற்றுக்கொடுத்தது. இப்போராட்டம் பெருங்கமக்காரர்களின் மனதை பெருமளவு பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை இருப்பினும், குடியேற்றவாசிகளின் கோரிக்கை நியாயபூர்வமானதாக இருந்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத்தகைய தண்ணீர்ப் பங்கீடு காலபோகத்திற்கல்ல சிறுபோகத்திற்கு மட்டுமேயாகும். காலபோகம் என்று சொல்லப்படுகின்ற பெரும் போக நெற்செய்கைக்கு அதிகளவு தண்ணீர் இரணைமடுக் குளத்திலிருந்து பெறப்படுவதில்லை காரணம் அக்காலத்தில் தேவையான அளவு மழைபெய்தால் பெரும் கமக்காரர்களும், குடியேற்றவாசிகளும் தமக்குச்சொந்தமான வயல் நிலங்களை சாகுபடி செய்வார்கள். மாரி காலம் முடிய தேவையேற்படின் இரண்டொரு தடவை தண்ணீர் குளத்திலிருந்து திறந்து விடப்படும் குளத்தின் நீர்மட்டம் கொஞ்சம் குறைந்து நிற்கும். காலநிலைமையைப் பொறுத்து குளம் நிறைந்து நிற்பதும் உண்டு. திருவையாறு படித்த வாலிபர் திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம் ஆகியவற்றில் ஏறக்குறைய ஐநூறு குடும்பத்தினர் இந்தக் குளத்து நிரையே நம்பி மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை செய்து வருகின்றனர்.
சிறுபோகம் ஆரம்பிக்கின்றபோது குளத்தினது நீரின் அளவு எத்தனை ஏக்கர் சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும் என்பதைனை கணக்கிலெடுத்து, குடியேற்ற வாசிகளுக்கு எத்தனை ஏக்கர் சொந்தமாக இருந்தாலும், ஒன்றுமுதல் இரண்டு ஏக்கர் வரையும் பெரும் கமக்காரர்களுக்கு அவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் கால்பங்கும், சிலசமயம் அதிலும் குறைய விஸ்தீரணம் கொண்ட காணியில் மட்டும் தான் நெற்சாகுபடி செய்ய அனுமதி கிடைக்கும். இதில் வேடிக்கை என்னவெனில் பல மைல் தூரம் நிலத்தில் நீர் செல்வதால் தண்ணீரை நிலம் உறிஞ்சி விடும் என்பதால் தமது தண்ணீர்ப் பங்கை குளத்திற்கு அருகில் உள்ள வேறு நிலத்திற்கு மாற்றி சாகுபடி செய்வதற்கு அறிவுறுத்தப்படுவார்கள். அதுபோலவே வேறு காணி உரிமையாளரின் சம்மதப்படி குளத்திற்கு அருகாமையிலேயே நெற்சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே சிறுபோகத்தில் குளத்தை அண்டிய பகுதிகளிலேயே நெற்சாகுபடி செய்யப்படும் இந்த நிலைமை சில அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியாமற் போனது ஏனோ?
இரணைமடுக் குளம் வற்றாக் குளமும் அல்ல, அது ஒரு அமுதசுரபியும் அல்ல. குளம் பல தடவை வற்றி நிலம் தெரிவதைப் பார்த்துள்ளோம். பாடசாலைமாணவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் சுற்றுலா வந்தபோது வெறும் தரையாக இருந்த குளப்பகுதியில் ஓடிச்சென்று வழுக்கி வாய்க்காலில் விழுந்து இறந்த அந்த துன்பம் நிறைந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது.
மக்களுக்கு குடிநீர் கொடுப்பது எமக்கு மோட்ச நிலையினை தரும் ஆனால் சிறுபோக வேளாண்மைக்கே தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும்போது யாழ் குடாநாட்டில் இருக்கும் அனைவருக்கும் இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் கொடுப்பதென்பது கிளிநொச்சியின் விவசாயத்தையும் அழித்து, குடிநீருக்காக காத்திருக்கின்ற யாழ்குடாநாட்டு அப்பாவி மக்களையும் ஏமாற்றும் செயற்திட்டம் என்பதில் சந்தேகமில்லை. இந்த உண்மை தெரியவரும்போது எனது நிலைமை எப்படியிருக்கும் என்பதை நானறியேன். ஆனால் நிச்சயமாக எனது கருத்தைக் கேட்காமல் விட்டு விட்டோமே என்று பலர் வருத்தப்படுவார்கள்.
இத்திட்டத்திற்கான சிறந்த மாற்று வழி ஒன்று உண்டு “யாழ்பாணவாவித்திட்டம்” (துயககயெ டுயபழழn ளுஉhநஅந) என 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் கவனஞ்செலுத்துவதே ஆகும். இத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அன்றைய அரசுக்கு சரியான முறைப்படி தெரிவிக்காமையால் இடையில் கைவிடப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் சில முக்கிய வேலைகள் பூர்த்தியாகி விட்டன. தொண்டமான் ஆற்றைச்சுற்றி ஒரு தடுப்புக் கதவும், அதேபோல்  நாவற்குழியில் ஒரு தடுப்புக்கதவும் ஓரளவு பூர்த்தியாகியுள்ளன. சுண்டிக்குளத்தில் பலமிக்க ஓர் அணைக்கட்டு (னுயுஆ) கதவுகளுடன் அமைக்கவேண்டும். அத்துடன் ஆனையிறவு வடமராட்சிக் கடல் ஏரியை இணைக்கும் 5மைல் நீளமான வாய்க்கால் வெட்டி குறையில் உள்ளது. இவ்வாய்க்கலோடு சுண்டிக்குளம் அணைக்கட்டும் பூர்த்தியாகிவிட்டால் படிப்படியாக வருடாவருடம் ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர், உப்புத் தன்மை குறைந்து யாழ் குடாநாடு முழுவதும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகவும், உப்புத்தன்மை கொண்ட கிணறுகள் நன்னீராகவும் மாறும் வாய்ப்புகள் உண்டு.
இத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய தற்போது இரணைமடுத் திட்டத்திற்கு செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள பணத்தில் ஒரு சிறு தொகையே போதுமானதாகும். இச்சிறு தொகையைத் தந்துதுவ ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ள போதிலும் யாழ் கடலேரி திட்டத்தை தடுக்க சதி செய்பவர்கள் யார்?
முன்னாள் நீர்பாசன உதவிப் பணிப்பாளர் காலம் சென்ற அமரர் ஆறுமுகம் அவர்கள் “யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு” என்ற நூலை எழுதியுள்ளார் அவரின் வழிகாட்டுதலோடு அன்னாரின் இத்திட்டத்திற்கு மிகவும் அக்கறைகொண்டு உழைத்த மாவட்ட காணி அதிகாரி (னு.டு.ழு) மெண்டிஸ் என்னும் பெரியார் அதே கனவுகளோடு இன்றும் வேதனையுடன் உள்ளார்
இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்று சொல்பவர்கள் “ யாழ்ப்பணத்திற்கு ஒரு ஆறு” என்னும் அந்தத்திட்டத்தினை ஆய்வு செய்து அதற்கான விபரங்களை சேகரிப்பதற்குத் தயங்குவது ஏன்? கிளிநொச்சி விவசாயிகளின் ஆலோசனையைக் கூடப்பெறாமல் சம்மந்தப்பட்டவர்கள் ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. எப்போதுமே நான் சொல்கின்ற உண்மை கசப்பானது தான் மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் முடியும் வரை நடந்து முடிந்த அனர்த்தங்களை நாடே அறியும். அதைத்தடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான கசப்பான உண்மைகளை நான் கடிதம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். எவரும் எனது கருத்துக்களை அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை. விளைவு எல்லாவற்றையும் இழந்து எமது மக்கள் அனாதரவாக நிற்கிறார்கள். அதேபோல்தான் இதுவும் ஒரு கசப்பான உண்மை. சம்மந்தப்பட்டவர்களது காதில் ஏறினால் நல்லது இல்லையேல் நான் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய சந்தர்ப்பத்தில் சொல்லிவிட்டேன் என்ற ஆத்ம திருப்தியில் இருப்பேன். ஏற்கனவே நான் ஊதிய சங்கு எவர் காதிற்கும் கேட்கவில்லை, இதாவது கேட்குமா?
வீ.ஆனந்தசங்கரி

தலைவர்,

தமிழர் விடுதலைக் கூட்டணி

புதன், 2 பிப்ரவரி, 2011

எதுக்கு எது சாப்பிடலாம்


Posted bytamilrishi
தலைவலியா? இஞ்சி சாப்பிடுங்கள்
காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்கள
மாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள்
கொழுப்பு இதயத்தின் சுவர்களில் தேங்காமல் தடுக்கும். குறிப்பாக க்ரீன் டீ மிக நல்லது
தூக்கம் வர வில்லையா? தேன் குடித்தால் தானாக வரும் தூக்கம
ஆஸ்த்துமாவால் கஸ்டப்படுகிறீர்களா? வெங்காயம் சாப்பிடுங்கள்
ஆர்த்த்ரிடிஸ்- ஆல் கஸ்டப்படுகிறீர்களா? மீன் சாப்பிடுங்கள்
வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள்
எலும்பு சம்பந்த்தப் பட்ட கோளாறா? அன்னாசி பழம் சாப்பிடுங்கள்
மாதவிலக்கு பிரச்சனையா? Cornflakes சாப்பிடுங்கள்
மறதி பிரச்சனையா? Oyster fish சாப்பிடுங்கள்
சளி தொல்லையா? பூண்டு சாப்பிடுங்கள்
மார்பக புற்றுநோயா? கோதுமை, முட்டைகோஸ் சாப்பிடுங்கள்
நுரையீரல் புற்றுநோயா? கரும் பச்சை மற்றும் ஆரன்சு நிறம் காய்கறிகளை சாப்பிடுங்கள்
வயிற்று புண்ணா? முட்டைகோஸ் சாப்பிடுங்கள்
வயிற்று போக்கா? ஆப்பிளை சுட்டு சாப்பிடவும்
இரத்த கொதிப்பா? ஆலிவ் எண்ணை சாப்பிடுங்கள்
இரத்த சர்க்கரை ஏற்ற இற்க்கமா? BROCCOLI AND வேர்க்கடலை சாப்பிடுங்கள்
ம*னநிம்ம*தி தேவையா உழைத்துச் சாப்பிடுங்க*ள்
பழங்களின் நன்மைகள்:
——————————
கிவி: ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது.
ஆப்பிள்: மாரடைப்பு, புற்றுநோய் வருவதை தடுக்கின்ற*து.
ஸ்டாபெரி: இளமையாக வைத்து இருக்க உதவுகிறது.
ஆரஞ்ச்: சளி தொல்லை, கொழுப்பை குறைக்க மற்றும் கிட்னி கல்லை கரைக்க உதவும்.
தர்பூசணி: புற்று நோய் தடுக்க, தோல் வியாதியில் இருந்து தடுக்க*
கொய்யா பழம்: மல சிக்கலை தடுக்
பப்பாளி பழம்: கண்களுக்கு நல்லது. உணவு செரிக்க நல்லது.
தக்காளி பழம்: ஆண்களுக்கு prostate cancer வருவதை தடுக்கிறது