செவ்வாய், 30 நவம்பர், 2010

நன்றி மறு ஆய்வு

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1/2)

ஜோர்ஜ் இ,குருஷ்சேவ் (தாயகம்)
பெருமதிப்புக்குரிய பெரியோர்களுக்கும். பேரன்புக்குரிய நண்பர்களுக்கும். நீதியின் மேல் பசிதாகமுள்ள ஆர்வலர்களுக்கும் தன்னடக்கத்துடன் கூடிய பணிவான வணக்கங்கள்,
மேடைப்பேச்சு என்பது எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று, சிறுவயதில் பேச்சுப்போட்டிகளில் மனனம் செய்து ஒப்புவித்ததைத் தவிர மேடைப் பேச்சு எதிலும் நான் கலந்து கொண்டதில்லை, மேடைப் பேச்சுக்குரிய சிம்மக் குரலும் எனக்கு இல்லை என்பது என் அனுமானம்,
உண்ர்வுகளைக் கிளப்பி. மெய் சிலிர்க்க வைத்து உசுப்பேத்திய உணர்ச்சி கொப்பளித்த மேடைப்பேச்சுக்கள் தான் இன்றைக்கு எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுப் போயிருக்கிறது, இதெல்லாம் தங்கள் மயிர்க் கூச்செறிய வைக்கும் பேச்சுக்களால் எங்களை தடுத்தாட் கொண்ட இந்த அடலேறுகள். தானைத் தளபதிகள். சொல்லின் செல்வர்களின் கைங்கரியம், கரகோசங்களுக்கும் மாலைகளுக்கும் இரத்தத் திலகங்களுக்குமாக நிகழ்த்தப்பட்ட விடுதலைப் பேச்சுக்களும். விசிலடிகளுக்கான வக்கிர நகைச்சுவையுடனான மாவீரர் தின உரைப் பொழிப்புகளும் என பகுத்தறிவை மறக்க வைத்த பேச்சுக்களை நம்பப் போய் கடைசியில்தன்னுடைய கருத்துக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்க முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கி முனையில் எங்கள் பேச்சுரிமையை இழந்து வாய் முடி மௌனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம், இந்த பேச்சுகளால் உந்தப்பட்டு பின்னால் போனதன் விளைபயனை முழுத்தமிழினமும் இன்று அனுபவித்து அதற்கான விலையைச் கொண்டிருக்கிறது,
நண்பர்களின் வற்புறுத்தலைத் தட்ட முடியாததால் மேடையேறச் சம்மதித்திருந்தேன், பேசவேண்டும் என்ற வேண்டுகோளாக இல்லாமல். பேசுகிறீர்கள் என்று உரிமையோடு சொல்லியிருந்தார்கள், எதைப் பேச வேண்;டும் என்ற நிபந்தனையும் இன்றி. எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்ற எல்லையும் இன்றி அழைத்ததால். தோழர் காஸ்ட்ரோவின் மே தின உரை போன்ற நீண்ட உரையொன்றுடன் வந்திருக்கிறேன், இது நிச்சயமாக உண்ர்ச்சியூட்டி புலன் பெயர் தமிழா புறப்படழ என்று போருக்கும் அழைக்கும் உரையாக இருக்காது, வழமையான உரை என்பதை விட. ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கும் கருத்துப் போன்ற அமைப்பில் இந்த உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்,
கருத்துக்கள் பற்றி யாழ்ப்பாண்ம் கொண்டிருந்த மனப்பாங்கு பற்றிக் கூற வேண்டும், ஊரோடு ஒத்தோடுகின்ற எவருக்கும் எங்கள் ச்முகத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை, கும்பலோடு கோவிந்தா போடுவது உயிரைக் காப்பதற்கான ஒரே வழி என்பது பின்நாளில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது, மாற்றுக் கருத்துக்கள் என்றால் யாழ்ப்பாண்திற்கு ஒவ்வாத விடயம்,,, அலர்ஜி என்று சொல்லலாம்,
கூட்டங்களில் பின்னால் நின்று கேள்வி கேட்கும்; போது. பேசாமல் ஐயா சொல்றதைக் கேளடா என்று அதட்டுவதற்கு அடியாட்கள் எப்போதும் நிறைய உண்டு, மேடையில் நின்று கருத்துச் சொன்னால். பேசாமல் கீழ இறங்கடா என்று பணிவோடு வேண்டுவதற்கும் ஆட்கள் உண்டு, ஆனால் ஒருபோதும். அவனைக் கதைக்கவிடு. அவன் என்ன சொல்றான் எண்டதையும் கேட்பம், என்று கேட்பதற்கு எந்தப் பொதுமகனும் துணிந்ததைக் காணமுடியவில்லை, ஒன்றில் கும்பலோடு கும்பலாக தர்ம அடி விழும் என்ற பயமாக இருக்கலாம், சும்மா ஊரோட ஒத்தோடாமல். உவனுக்கு ஏன் தேவையில்லாத வேலைட பிழைக்கத் தெரியாதவன் என்ற தீர்ப்பளிப்பாக இருக்கலாம், அல்லது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல. சண்டை பார்ப்பதற்கும் வேடிக்கை பார்ப்பதற்கும் ஆர்வமாகவும் கூட இருந்திருக்கலாம்,
யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைகள் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம், யாழ்ப்பாணத்தவர்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு கொடுக்கும் மரியாதை பலருக்கும் தெரிந்திருக்கும், சீதனம் வாங்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால். சமுக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்த ஒருவனின் முயற்சியைப் பாராட்டாமல். உவருக்கு ஏதும் குறையிருக்குது போல என்று வக்கிரப்படுத்தும் பாரம்பரியம் எங்களுடையது,
மேதகு தேசியத் தலைவரின் நல்லாட்சியில் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாற்றுக்கருத்துக்கு மண்டையில் போடுவது தான் தீர்ப்பாக இருந்தது, இந்தப் பாரம்பரியம் புலன் பெயர்ந்த நாடுகளுக்கும் பரவி. தாயகம் தடை. தேடகம் எரிப்பு. செந்தாமரை ஆசிரியர் தாக்குதல் என்று போய் சபாலிங்கம் கொலையில் முடிந்தது,
வெளியில வாடா. பாப்பம் என்றும். ஊருக்கு வா. கவனிக்கிறம் என்று பணிவன்புடன் வேண்டுகிற காடையர் கூட்டம் இங்கே மலிவானது, இப்போது வெளியில வாடா என்றவர்களின் தலைக்கறுப்பை வெளியில் காண‌ முடியவில்லை, ஊருக்கு வந்தால் கவனிப்பதற்கும் ஊரிலும்  யாரும் இல்லாமல் போய் விட்டார்கள்,
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வது என்பது யாழ்ப்பாண்ச் சிந்தனையில் இருப்பதேயில்லை,
இன்றைய உரையிலும் மாற்றுக்கருத்துக்கள் நிறைய இருக்கும், அது சம்பந்தமான கேள்விகளும் எதிர்க்கருத்துக்களும் எழும், இந்தக் கருத்துக்களையும் கேள்விகளையும் நான் வாசித்து முடியும் வரை பொறுமையாக வைத்திருந்தால். முடிந்த பின்னால் பதிலளிக்க முடியும்.
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்?
புலன் பெயர்ந்த நாடுகளில் அரசியல் ஆய்வாளர்கள் மலிந்திருப்பது போல. எங்களுக்கு ஊரில் நிறைய குஞ்சப்புமார் இருந்தார்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமன்றி. எங்கள் தந்தைமார். பேரன்மாரின் வயதில் இருந்த பெரியோர்கள் எல்லாம் மரியாதை கருதி குஞ்சப்பு என்றே அழைக்கப்பட்டார்கள். எங்கள் அண்ண்ன்மார் வயதில் இருந்த இளவட்டங்கள் ஸ்டைலாக குஞ்சி என்று அழைத்துக் கொள்வதுடன். பீடி. வாய்க்குப் போடும் புகையிலை கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்டிருப்பார்கள், வீட்டிலிருந்து புறப்பட்டால். வழியில் கணணர்pல் படுகின்ற குஞ்சப்புகளுடன் பரஸ்பர குசலம் விசாரிப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது, இவர்கள் சிறுதோட்டக்காரர்களாகவும் தோட்டவேலைக் கூலித்தொழிலாளராகவும் முட்டாள்வேலை. அதாவது மேசன்மாருக்கு உதவியாளர்களாகவும் வேலை செய்து கொண்;டிருந்தார்கள், கல்வியறிவின்மை. வறுமை,,, இத்தோடு குடிப்பழக்கம்,,, இதனால் பொருளாதார ரீதியில் வளம் பெற முடியாமல் ஒரு சுற்றுவட்டத்திற்குள்ளேயே இவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
மாலையானதும் பெரும்பாலும் வெறியில் இருப்பார்கள், அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டைகள் நடக்கும், இல்லாவிட்டால் மனைவிமாருக்குப் போட்டு அடிப்பார்கள், வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் விசயம் தெரியாமல் கை வைக்கப் போய் மகன் மாரிடமும் வாங்கிக் கட்டுவார்கள்.
இவர்களைப் பற்றியெல்லாம் ஊரில் பல்வேறு நகைச்சுவைக் கதைகள் இருக்கும், இன்று கூட. எங்கள் ஊர்க் காரர்கள் சந்தித்துக் கொண்;டால் இந்தக் கதைகளை சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு புகழ் பெற்ற கதைகள் அவை.
ஒரு குஞ்சப்பு ஒருநாள் தோட்டத்துக்குள்ளால் போன ஒரு பெண்ணைப் பார்த்து. ஏரிக்கரை மேலே போறவளே. பெண் மயிலே. என்னருமைக் காதலியே. நில்லு கொஞ்சம் நானும் வாறேன் என்று பாடியிருக்கிறார், தமிழ்ப்படத்துக் கிராமத்தில் வரும் கதாநாயகியாக இருந்தால். பதிலுக்கு புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே. உங்க எண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க என்று பாடியிருப்பார், இது நம்ம ஊர், பெண்; போய் தந்தையிடம் முறையிட்டிருக்கிறார், தந்தையும் தமிழ் படத்து அப்பா மாதிரி அரிவாளைத் தூக்காமல். போய் விதானையாரிடம் முறையிட்டிருக்கிறார், விதானையார் பொலிசாரி;டம் முறையிட்டு. வழக்குப் பதிவாகி விட்டது,
புலிகளின் நீதிமன்றம் அப்போது இருக்கவில்லை, இருந்திருந்தால் தீர்ப்பு குஞ்சப்பு எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்திருந்திருக்கும், எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வராததால் மின்கம்பத் தண்டனை ஊருகுள் இருந்திருக்காது, சந்தைக்குப் போகும்போது சுன்னாகத்திலோ. அல்லது தின்னவேலியிலோ அடையாளம் தெரியாமல் சமுக விரோதியாகியிருப்பார், அல்லது பெண்ணின் தந்தை பச்சை மட்டை அடி வாங்கியிருப்பார், நல்ல காலம்.
குஞ்சப்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார், குற்றம் என்ன செய்தேன். கொற்றவனே. குற்றம் என்ன செய்தேன்என்ற பாணியில்,
அரச சட்டத்தரணி கேட்கிறார்,,,
நீ அந்தப் பெண்;ணைப் பார்த்துப் பாட்டுப் பாடியது உண்மையா
ஓம் ஐயா?
எப்பிடிப் பாடினாய்?
குஞ்சப்பு ஏதோ அரசவையில் அம்பிகாபதி என்ற நினைப்பில் நீதிமன்றத்தில் பாடத் தொடங்கினார்,,
ஏரிக்கரை மேலே என்று,,,
இதுவரையும் பேசாமல் பார்த்துக் கொண்;டிருந்த நீதிபதி கையைக் காட்டி நிறுத்தி விட்டுச் சொன்னார்,,,
25 ருபா குடுத்திட்டுப் போ?
பாட்டுப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் இருக்கிறார், பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், எங்கள் குஞ்சப்பு மட்டும் தான் பாட்டுப் பாடி அபராதம் கட்டியவர்,
இதைப் போல இன்னொரு குஞ்சப்பு இருந்தார், இவர் ஒருநாள் மாலை. ஆட்டுக்கு குழை பிடுங்க மரத்தில் ஏறியிருக்கிறார், மாலை நேரம் என்றாலேயே. குஞ்சப்பு மரண வெறியில் நிற்பவர், றோட்டால் நடந்து போகும் போது கூட. கிடுகுவேலியைப் பிடித்துக் கொண்டு கிழுவ மரத்தோடு வாக்குவாதப்பட்டு;க் கொண்;டிருப்பவர், மரத்தில் ஏறியிருக்கிறார், ஏறாதே ஏறாதே என் கணவா என்ற மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல். தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி மனைவிக்கும் தூசணத்தால் பேச்சுக் கொடுத்து குஞ்சப்பு மரத்தில் ஏறியிருக்கிறார்,
பிறகென்ன குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த மாதிரி. குஞ்சப்பு மரத்திலிருந்து விழுந்து விட்டார், இந்த குறுக்கால போனவனால மனிசர் நிம்மதியா இருக்கேலாது என்று மனைவி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வருகிறார், அருகில் பொதுக்கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வருகிறார்கள், கூக்குரல் கேட்டு நீண்ட தூரங்களில் இருந்தும் ஓடி வருகிறார்கள், ஊரே திரண்டு வந்தது என்பது போல,
நல்ல காலம், தென்னை மரம் என்றால். நேரடியாக வந்து விழுந்து குஞ்சப்பு முடிந்திருப்பார், அல்லது முள்ளந்தண்டு. கை. கால் முறிந்திருக்கும், இது கொப்புள்ள மரம், நேரடியாக விழாமல். கொப்புகளில் எல்லாம் அடிபட்டு உள்காயங்களோடு கீழே விழுந்து கிடக்கிறார், சுற்றி வர நிற்பவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதா இல்லை. புக்கை கட்ட ஒட்டகப்புலத்துக்கு கொண்டு போவதா  என்று ஓடுபட்டுப் கொண்டிருக்கிறார்கள், பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குஞ்சப்பு கணணைத் திறந்து பார்க்கிறார்
அடிபட்டு நொந்து எழும்ப முடியாமல் கிடப்பது குஞ்சப்புவிற்கு பிரச்சனை இல்லை, அவருடைய பிரச்சனை கௌரவப் பிரச்சனை, தன்னுடைய பிழையை. குடிவெறியில் மரத்தில் ஏறிய தன்னுடைய மடத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத கௌரவப் பிரச்சனை, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பிரச்சனை, பெரிசுகள் எல்லாம் என்ன மட வேலை பாத்தனீ  என்று தன் முட்டாள்தனத்தை திட்டும் என்ற வெட்கம்,
இந்த அவமானத்தை மூடி மறைத்து. விலாசம் காட்டும் முயற்சியில்,,,கண்ணைத் திறந்து குஞ்சப்பு சொன்னார்,,,,
விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டன்?
குஞ்சப்பு விளையாட்டு என்று சொன்னது. சீனடி. சிலம்படி. கம்பு விளையாட்டுக்கள், குஞ்சப்புவிற்கு அப்படி ஒரு விளையாட்டும் தெரியாது, தன்னுடைய பிழையை மறைக்க. எடுத்து விட்டு கயிறு அது, பின்னால் நாலைந்து மாதமாய் குஞ்சப்பு நெஞ்சில் புக்கை கட்டியபடி அலைந்தார்.
நண்பர்களே.
முப்பது வருடங்களாக மோகமும் மையலும் கொண்டு துரத்தி வந்த ஈழம் என்ற மாயமான். முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்து. கண்ணைத் திறந்து பார்த்தபடியே  கிடக்கிறது, பல்லாயிரக்கண்க்கானவர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கிறார்கள், அதை விட அதிகமானவர்கள் அவயவங்களை இழந்து போயிருக்கிறார்கள், லட்சணக்கானவர்கள் சொந்த வீடுவாசல்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டு. பொருளாதாரம் இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது, மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிக் கொண்டு வரச் சொன்ன புத்தர் கதை போல இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறான், பொருளாதார ரீதியாகவோ. உறவுகளை இழந்தோ,,,
இதை விட முக்கியமாக. இலங்கை அரசியலில் தமிழர்கள் தலைநிமிர்ந்து தங்கள் உரிமைகளைக் கேட்க முடியாதபடிக்கு புலிகள் நட்டாற்றில் கொண்டு வந்து தலை குனிய விட்டுப் போயிருக்கிறார்கள், அடுத்த நாற்பது வருடங்களுக்கு தமிழர் அரசியல். யூதர்கள் நாற்பது வருட காலம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தது போல. திக்குத்திசை தெரியாமல் போக்கிடம் தெரியாமல் எதிர்காலம் சூனியமாகிய அரசியல் கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால். உண்மை நிலையையும் எங்கள் தவறுகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து. வரட்டுக் கௌரவப் பிரச்சனையாக,,,, குஞ்சப்பு போல,,, விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே.
உலகில் இன்று அடிக்கடி பல்வேறு அழிவுகள் நடைபெறுகின்றன, இயற்கை அழிவுகள்,,, புயல். பூகம்பம். வெள்ளம். ஆழிப்பேரலை, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகள்,,, யுத்தம். தொழில் விபத்துக்கள். சுற்றாடல் அழிவுகள், லட்சக்கணக்கான மக்கள் கண்ணை மூடித் திறக்கும் குறுகிய கால எல்லைக்குள் கொல்லப்படுகிறார்கள், கோடிகணக்கான சொத்துக்கள் அழிகின்றன, லட்சக்கணக்கானோர்கள் அகதிகளாக்கப்பட்டு. நிர்க்கதிக்குள்ளாகிறார்கள்,
ஆனால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் அந்தந்த இனத்தைச் சேர்ந்த படித்தவர்கள் ஒரு வார்த்தையைப் பாவிப்பார்கள்,
We are resilient people.
நாங்கள் இந்த அழிவிலிருந்து மீண்டும் எழுவோம், அழிந்தும் அழிய மறுக்கும் தங்கள் மன உறுதியை வெளிப்படுத்துகின்ற வார்த்தை அது,
இந்த வாரம் பர்மாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்டது பற்றி ரொறன்ரோ ஸ்டாரில் வந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்,,, resilient leader
சிறையில் இருந்தாலும் தன் மன உறுதியைத் தளர விடாமல் உற்சாகமாக இராணுவ அரசுக்கு எதிராக செயற்படுகின்ற தலைவர்,
எங்களுடைய ஆய்வாளர்களும் எழுதுகிறார்கள், பீனிக்ஸ் போல மீண்டும் உயிர்ப்போம், இந்த ஆய்வாளர்களுக்கு பீனிக்ஸ் என்பது ஒரு கற்பனைப் பறவை என்பது தெரியுமோ தெரியாது.
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என. நாங்களும் அழிய மாட்டோம் என்றுதானே இவர்கள் சொல்வதாக சிலர் வக்காலத்து வாங்கக் கூடும்.
அழிவினால் மனம் சோர்ந்து விடாமல். தன்னம்பிக்கையைக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் resilence என்ற பதத்திற்கும். மேதாவித்தனத்தைக் காட்டி பேய்க்காட்டுகின்ற பீனிக்ஸ் என்ற பதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
முதலாவது அவர்கள் எல்லாம் நாங்கள் இயற்கையிடமோ. இந்தக் காரணிகளிடமோ தோற்று விட்டோம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அந்த அழிவிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு மனவலிமை இருக்கிறது என்று மனம் தளராமல் உற்சாகப்படுத்துகிறார்கள், என்னுடைய எலும்புகளை உடைக்கலாம். ஆனால் என் மன உறுதியை உன்னால் உடைக்க முடியாது என்று இயற்கைக்கும் எதிரிகளுக்கும் சவால் விடுகிறார்கள், ஆனால் நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வது வெட்கக்கேடு என்பது போல. குஞ்சப்பு போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இரண்டாவது. இந்த பீனிக்ஸ் ஆய்வாளர்கள் சொல்வது எங்கள் தமிழ் மக்களை இல்லை, மீண்டும் எழுவோம் என்று இவர்கள் சொல்வது புலிகளை, 12 ஆயிரம் பேரோடு தலைவர் காட்டுக்குள் தயாராக இருக்கிறார். திருப்பி வந்து மணியா வேலையைக் கொடுக்கப் போகிறார் என்ற கணமூடி விசுவாசத்தில்?
சுவாமி நித்தியானந்தா போலத் தான் புலி ஆதரவாளர்களும், நித்தியானந்தாவின் காமசாஸ்திர வீடியோ வெளிவருகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது நான் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தேன், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
தலைவர் கொல்லப்பட்ட போது. வீடியோக்கள். படங்கள் உலகமெல்லாம் சுற்றி வருகிறது, புலி ஆதரவாளர்களுக்கு அதெல்லாம் தெரியாது, காரணம் அவர்களும் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தார்கள்.
சமீபத்தில் ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்,,, ஜப்பானியர்களும் யூதர்களும் போல. யாழ்ப்பார்த்தவர்களுக்கும் பெயர் ஜெ என்ற எழுத்தில் தொடங்குகிறதாம், அதனால் நாங்களும் அவர்களைப் போல சாதனை படைப்போம் என்பது தான் அவருடைய ஆய்வின் சாராம்சம், இதை வாசித்ததும் எனக்கு எரிச்சல் வந்தது, பரதேசி. ஜெகோவாவின் சாட்சிகளும் ஜெ என்ற எழுத்தில் தானே தொடங்குகிறது,
யாழ்ப்பாணத்தவர்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் jaffna manஎன்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் இந்த ஆய்வாளர் புதிதாக jaffniite என்ற அகராதியில் இல்லாத சொல்லைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார், ஷியா முஸ்லிம்களை shiites என்பது போல.
கார் வாங்கினால் கொண்டா. ரொயோட்டா. டி,வி வாங்கினால் சோனி மட்டுமே வாங்குபவர்களுக்கு ஜப்பானியர்களோடு தங்களை ஒப்பிடுவதில் குஷி ஏற்படுவதில் சந்தேகம் இல்லை.
கேட்டால். எல்லாரும் வாங்கினம். அப்பிடி எண்டால் நல்லதாத் தானே இருக்க வேணும். Consumer Reports  சஞ்சிகை இந்த வருடம் சம்சுங்கை சிறந்த தொலைக்காட்சியாக தெரிவு செய்திருக்கே.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, எல்லாரும் வாங்கிறதை வாங்கினால் பிரச்சனையில்லை, எல்லாருக்கும் நடக்கிறது தானே எங்களுக்கும் நடக்கும்.
ஊரோடு ஒத்தோடு, வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையுமே வராது,
ஆனால். தங்களுக்கு கிட்லரால் இழைக்கப்பட்ட இனஅழிப்பு அநீதியை வைத்து தங்களை பாதிக்கப்பட்டவர்களாக இன்றைக்கும் காட்டிக் கொண்டு. பாலஸ்தீனியர்களை அடக்குகின்ற யூதர்களோடு அடக்கப்பட்டு பாதிக்கப்படும் இனமான தங்களை எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று நீங்கள் தலையைச் சொறியக் கூடும், இங்கே ஊடகங்கள். வர்த்தகங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இங்குள்ள அரசுகள் இஸ்ரேல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் யூதர்களின் திறமை தங்களுக்கும் இருக்கிறது என்று இவர்கள் காணும் கனவின் எதிரொலி தான் இது,
தற்கொலைப் போராளிகள் என்பதை புலிகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தது ஜப்பான், சக்கரவர்த்திக்காக உயிரைக் கொடுப்பதும். தோல்வியடைந்தால் வயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொள்வதும் வீரம் என உயிர் ஜப்பானுக்கு. உடல் மண்ணுக்கு என்ற சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்ட மாவீரர்களை நிறையக் கொண்டிருந்தது ஜப்பான், அமெரிக்க போர்க் கப்பல்களை விமானத் தற்கொலைப் போராளிகள் நிர்மூலமாக்கிய நிலை, கடவுளின் அவதாரமாக. சூரிய தேவனாகத் தன்னைக் காட்டிய சக்கரவர்த்தி கடைசி நேரத்தில் மக்களை தற்கொலை செய்யுமாறும். அவ்வாறு செய்பவர்களுக்கு வீரசுவர்க்கத்தில் யுத்தத்தில் போரிட்டு இறந்தவர்களுடன். மாவீரர்களுடன். சமமான இடம் கிடைக்கும் என்று அறிவித்ததை நம்பி பத்தாயிரம பேர் வரை தற்கொலை செய்திருந்தார்கள், இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டு. ஜப்பான் மண்டியிட வைக்கப்படுகிறது, யுத்தமுடிவில் ஜப்பானிய சக்கரவர்த்தி சரணடைகிறார்.
தங்கள் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மதித்த சக்கரவர்த்தி அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் வெறும் சம்பிரதாயச் சின்னமாக நடமாடும் அளவுக்கு ஜப்பான் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தது, மன்னிப்புக் கேட்க வந்த சக்கரவர்த்தியை ஜெனரல் மக்ஆதர் சந்திக்க மறுத்து அவமானப்படுத்துகிறார்,
ஆனால். தங்களுடைய புராதன சிந்தனை தங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்து. தங்கள் எதிரியுடனேயே சமரசம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுகிறார்கள், 90கள் வரைக்கும் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருந்தது ஜப்பான், அதாவது தங்கள் அழிவை ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற பாதையை வகுக்கிறார்கள்.
வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி. அன்னியனே வெளியேறு என்று ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடங்க அவர்களுக்குத் தெரியாதா அவர்களுக்கு என்ன நாட்டுப் பற்றுத் தான் இல்லையா எங்களை விட நாட்டுப் பற்று அதிகமானவர்கள் ஜப்பானியர்கள்.வெறும் கனவுகளில் தொடர்ந்தும் வாழாமல். மாவீர உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு. தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றிய ஜப்பானியர்களுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது
யூதர்களை எடுத்துக் கொள்வோம், கிட்லரின் நாசிகளின் இன அழிப்பில் அழிக்கப்பட்டாலும். இன்று மேற்கு நாடெங்கும் பரவி. பொருளாதார ரீதியாக வளர்ந்து. அரசியல் ரீதியான அழுத்தங்கள் மூலமாக தங்களுக்கு என ஒரு நாட்டை அமைத்திருக்கிறார்கள். இன்று அந்த நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க. மேற்கு நாட்டு அரசுகளின் ஆதரவைப் பெற அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரண்த்திற்கு ஜெரி ஸ்வாட்ஸ் என்ற கனடிய தொழிலதிபர் ஒனெக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், இவரது மனைவி தான் இன்டிகோ புத்தக விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர், இவர்கள் இருவரும் கனடிய லிபரல்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்காக தங்கள் ஆதரவை மாற்றிக் கொண்டு கன்சர்வேட்டிவ் அரசுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு நிதி சேகரிக்க உதவி செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள். இதுவரையும் எந்தக் கனடிய அரசும் வழங்காத ஆதரவை தற்போதைய கனடிய அரசு இஸ்ரேலுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெளியில் தெரியாமல் நடத்தப்படுகிறது,
இந்த யூதர்கள் எல்லாம் ரொறன்ரோவில் என்ன மாபெரும் போரையா நடத்துகிறார்கள் இல்லை. சாலை மறியல் செய்கிறார்களா இங்குள்ள அரசியல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை கற்றுக் கொண்டு  காதும் காதும் வைத்தது போல வெளியில் தெரியாமல் அதற்குரிய முறைகளில் தங்கள் விருப்பங்களைச் சாதிக்கிறார்கள்.
இவர்களுக்கும் தெருவில் நின்று கூச்சல் போட்டு. எங்களிடம் இரண்டு லட்சம் வாக்குகள் இருக்கின்றன என்று மிரட்டும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கடவுள் தங்களுக்கு வாக்களித்த பூமி என்று நம்பி. மேற்கு நாடுகளில் வசதியான வாழ்க்கையையும் கைவிட்டு. பாலைவனத்தில் அடிப்படை வசதிகளோடு மட்டும் தங்கள் நாட்டைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு வாழும் யூதர்களுக்கும். எப்படியாவது வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற கனவோடு திரியும் தமிழர்களுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது.
அவர்களுக்கு மூளை இருக்கிறது; எங்களுக்கு வாய் இருக்கிறது; இது தான் வித்தியாசம்.
ஆனால் இவர்களை விட ஜெகோவாவின் சாட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது, அதிகாலையில் குளிரில் ஆளுக்காள் வேலைக்கு ஓடிக் கொண்டிருப்போம், சப்வே வாசலில் இரண்டு சஞ்சிகைகளைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டு பேர் நிற்பார்கள். கவனயீர்ப்பு கேட்டு கடைசி வரைக்கும் அமெரிக்க தூதுவரகத்தின் முன் கொடி பிடித்துக் கொண்டிருந்த தமிழர்கள் மாதிரி.
காவல் கோபுரம்? தேசியத் தலைவர் பிரபாகரன் எங்கள் காவல் கோபுரம்.
விழித்தெழு? புலிகளை அங்கீகரி.
முடிவு நெருங்கி விட்டது? மனம் திரும்புங்கள்?
யாழ்ப்பாணத்தவர்களுக்கு முடிவு ஏற்கனவே வந்து விட்டாலும் இன்னமும் மனம் திரும்பும் எண்ணம் கிடையாது,
இப்படியாக எவனுமே கவனிக்காமல் தன் பாட்டில் போய்க் கொண்டிருந்தாலும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது, இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
மத நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கும் இவர்களுக்கும் புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து வருமானத்தைக் கொடுக்கும் தமிழர்களுக்கும் தான் ஒற்றுமை அதிகம்,
இப்படி ஒரு கனவில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இன்னமும் எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை,
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், பெரியம்மாவின் மகன், இவனுடைய சகோதரியின் மகளை கடைசிக்கட்டத்தில் தப்பி வரும் போது புலிகள் சுட்டுக் கொன்றது பற்றி தாயகத்தில் எழுதியிருக்கிறேன், இந்த அண்ணன் சுவையான கதைகள் சொல்வான், அதில் ஒன்று இது,
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் தொண்டமான் ஒரு சிங்களக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வார், அவர் சேர்ந்ததால் தான் அந்தக் கட்சி வென்றதா இல்லை வெல்லப் போகும் கட்சியுடன் தான் அவர் கூட்டு வைத்துக் கொள்வாரா என்பது தெரியாது, ஒன்று மட்டும் நிச்சயம் தோல்வியடைந்த கட்சி மலையத்தமிழர்களுக்கு அடிக்கும், கலவரம் வெடிக்கும், தோட்ட லயன்கள்,,, வீடுகள் எரிக்கப்படும், மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள்,
அகதிகளாக்கப்பட்டவர்கள் எங்கே போவார்கள் வடக்கில் சூரியன் உதித்தால் மலையகத்தில் சேவல் கூவும், எனவே தங்கள் தமிழ்ச் சகோதரர்கள் தங்களுக்கு தஞ்சம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் புகையிரதத்தில் ஏறி. வந்தாரை வாழ வைக்கும் யாழ்ப்பாணத்திற்கு வருவார்கள்,,, அவர்கள் என்ன யாழ்ப்பாணத்தவர்களா தலை மாற்றி ஜெர்மன் கனடா போக ஆனால் யாழ்ப்பாணத்திற்கு விசா கிடைக்காது, எனவே கிளிநொச்சியில் இறங்கி விடுவார்கள், போவதற்கு இடம் இல்லை, என்ன செய்வது என்பதும் தெரியாது, புகையிரத நிலையத்தில் வாழ்க்கை ஆரம்பமாகும், அருகில் உள்ள மரங்களில் கட்டப்பட்ட ஏணைகளில் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள், கொண்டு வந்த சட்டி பானைகளுடன் ஓரமாய் சமையல் நடக்கும்,
அப்போது. வீட்டுத் தலைவர்கள் சுவரில் சாய்ந்து கொண்டு தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்களாம்,,,
மச்சான். நாம இப்ப என்னா பண்ணிறமுன்னா,,, முதல்ல ஒரு பாதையை அமைச்சிக்கிறம், அங்க வெளியில ஒரு கொட்டிலை கட்டிக்கிறம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் காட்டை வெட்டிறம், அதுக்கு அப்புறமாக நிலத்தைக் கொத்திறம், பிறகென்ன,,, நூறு கண்டுக்கு மொளவாய்க்கண்டு. நூறு கண்டுக்கு கத்தரி,, இன்னொரு நூறு கண்டுக்கு தக்காளி,,, நட்டுக்க வேண்டியது தான், நம்ம பெண்டாட்டி. புள்ளைங்களுக்கு என்ன வேலை,, அவங்க தண்ணியைப் பாய்ச்சி. பராமரிச்சிட்டுருப்பாங்க, நாங்க பீடியை அடிச்சிக்கிட்டு வரம்பு வழிய நடந்து கங்காணி வேலை பாத்துக்க வேண்டியது தான்,
அகதிகள், போக்கிடம் இல்லை, தங்கள் கனவு சாத்தியமானதா என்ற விபரமும் கிடையாது, நம்ம யாழ்ப்பாணி விதானைமார். டி,ஆர்,ஓ விடுவார்களா அனுமதி இல்லாமல் காட்டை வெட்டினால். சட்டவிரோதமாய் காட்டு மரம் தறித்ததற்காக பொலிசைக் கூப்பிட்டு உள்ளே தள்ள மாட்டார்களா
இதைப் போலத் தான் நாங்களும், இவ்வளவு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது, அரசியல் எதிர்காலம் எந்த நம்பிக்கையும் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது,
நாங்கள் இங்கே இருந்து கொண்டு,,,
நூறு கண்டுக்கு,,, நாடு கடந்த தமிழீழம், நூறு கண்டுக்கு மக்களவை, நூறு கண்டுக்கு Global
Tamil Forum,  இன்னொரு நூறு கண்டுக்கு யுத்தக் குற்ற விசாரணை என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை, வெறும் கற்பனையில் எங்களை நாங்களே குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.அதாவது சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறோம்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள், கூடை விழுந்தால் எல்லா முட்டைகளும் நொருங்கி விடும், எங்கள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் புலிகள் என்ற கூடைக்குள் வைத்ததால் தான் எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் கண்ப் பொழுதில் தகர்ந்து போனது.
நாங்கள் அடித்த திமிர்க்கூத்திற்கு நடந்த முடிவைக் கண்டு வெட்கப்பட்டு. அவமானம் தாள முடியாமல் எங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நியாயங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.
புலிகள் இல்லாட்டி சிங்களவன் தமிழனை அழிச்சுப் போடுவான் என்ற நாங்கள். தமிழர்கள் இன்று தங்கள் பாட்டில் வாழ்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் கொதித்துக் கொண்டிருக்கிறோம்,
புலிகள் தனியான அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் தீர்க்கதரிசி, புலிகள் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள்,,, சரணடைய மாட்டார்கள்.
இப்படியாக மார்தட்டிக் கொண்டிருந்த நாங்கள் தலைவர் போரில் விழுப்புண் பட்டு வீரமரணமடைந்தார் என்று மார் தட்ட முடியாமல் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறோம். தலைவர் சரண்டைந்து அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதையும் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரண்டைந்தார்கள் என்பதையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இன்றைக்கு பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறோம்,
காரண்ம் என்ன எங்களுடைய யாழ்ப்பாண மனோபாவம் தான்.
உங்களுக்குத் தெரியும், உயர்தர வகுப்புப் படித்த பின்னால் வேலை தேடும் வரைக்கும் யாழ்ப்பாணப் பெருமகன் வீட்டில் இருப்பார், பொழுதுபோகாமல் நண்பர்களோடு ஊர் சுற்றப் போவார். சுற்றிப் போட்டு வருபவருக்கு வீட்டில் அர்ச்சனை நடக்கும், கண்ட கண்ட காவாலியளோடு சுத்துறான், அதாவது தன்னுடைய மகன் ஒரு அப்பாவி, மற்றவர்களுடைய பிள்ளைகள் தன் பிள்ளையைக் கெடுக்கிறார்கள் என்பது தான் இந்த தாயின் முடிவு, அப்படியானால். அந்த கண்ட கண்ட காவாலிகளின் தாய்மார் என்ன சொல்வார்கள்? அந்த படிக்கிற கெட்டிக்காரப் பெடியனை ஏன்டா கெடுக்கிறாய் என்றா சொல்வார்கள் இல்லை, கண்ட கண்ட காவாலிகளோட சுத்திறான் என்பது தான் அவர்களின் அர்ச்சனையாக இருக்கும், எல்லாருமே தங்கள் பிள்ளைகள் ஒண்ணும் தெரியாத பாப்பா. மற்றவர்கள் தான் தங்கள் பிள்ளைகளைக் கெடுக்கிறார்கள் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பார்கள்,
சுத்தித் திரிகின்ற தம்பிக்கு காதல் வரும், ஒரு தலைக்காதல் வயதுக் கோளாறால் இருதலைக்காதல் ஆக கூர்ப்படையும், வயதான இருவர்களுக்கு காதல் வந்து விட்டது. பெரியோர்கள் ஒன்று கலந்து பேசி திருமாணமா முடித்து வைக்கப் போகிறார்களா வழமை போல. யாழ்ப்பாணத்தார் லாப நட்டக் கணக்கு பார்ப்பார்கள், பெணணின் அம்மா திட்டுவா,,, ஐயோ. என்ரை பிள்ளையை ஏமாத்திப் போட்டான், தம்பியின் அம்மா திட்டுவா,,, என்ரை பிள்ளையை மயக்கிப் போட்டாள்,
இது நாங்கள் எங்கும் பார்க்கிற வழமையான விடயம், யாருமே தங்கள் தரப்பில் தவறு இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை,
புலிகள் என்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் செல்லம் கொடுத்துக் கெடுத்த. தறுதலைப் பிள்ளை, மற்ற இயக்கங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள், இதனால் தான் தங்கள் பிள்ளைகளின் தவறைக் கண்டும் காணாமல் பெருமை பேசித் திரிந்ததுடன். மாற்றாந்தாய் பிள்ளைகளை கேவலமாக நடத்தினார்கள், அவர்களையும் தங்கள் பிள்ளைகளாக இவர்கள் கணக்கெடுத்ததேயில்லை, மாற்று இயக்கங்களில் இருந்து வந்த நண்பர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்,
எனவே இந்த அழிவு வந்ததும் நாங்கள் செய்த முதல் வேலை என்ன யாரில் பழியைப் போடலாம் என்று ஆள் தேடிக் கொண்டிருக்கிறோம்,
ஐ,நா. பான் கி மூன். நோர்வே. எரிக் சொல்கெய்ம். அமெரிக்கா. ஒபாமா. இந்தியா. சோனியா. கருணாநிதி,,,, டக்ளஸ். கருணா,,, கே,பி, பிராந்திய அரசியலில் மட்டுமல்ல. சர்வதேச அரசியலிலும் சம்பந்தப்பட்ட எல்லாரையுமே நாங்கள் துரோகி என்றிருக்கிறோம், நல்ல காலம் புலிகள் மக்களை வெளியேற அனுமதித்து பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என்று தலாய் லாமா சொல்லியிருந்தால் அவரையும் எளிய பிக்கு. சிங்கள பௌத்தனுக்கு சைட் பண்ணுறான் என்று நாங்கள் திட்டியிருப்போம்.
ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்டாமி Taste of cherry  ஒரு படத்தை இயக்கியிருந்தார், சங்கரும் எந்திரனும் மாதிரி உலக அளவுக்கு பெரும் புகழ் பெறவில்லை. இந்தப் படம் பிரான்சின் கான் பட விழாவில் தங்க இலை விருது பெற்றது, அதில் ஒரு வர்த்தகர் தற்கொலை செய்ய விரும்புகிறார், இதற்காக ஒரு புதை குழியையும் வெட்டி விட்டு. தற்கொலை செய்த தன் உடலைப் புதைப்பதற்கு ஆள் தேடித் திரிகிறார். இப்படி ஒரு வயதானவரைச் சந்தித்து அவரைக் காரில் ஏற்றிக் கொண்டு தன்னுடைய திட்டத்தை விளக்கும் திட்டத்தில் கூட்டிக் கொண்டு போகிறார், அப்போது அந்த வயதானவர் ஒரு ஜோக் ஒன்று சொல்வார்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் இன்னொரு இனத்தவரை முட்டாள்கள் என்று மட்டம் தட்டி கேலிக் கதைகள் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும், கனடாவில் நியுபவுண்ட்லாந்துக் காரரைக் கிண்டல் அடிப்பார்கள், இங்கிலாந்தில் ஸ்கொட்டிஸ்காரரைக் கேலி செய்வார்கள், இந்தியாவில் சீக்கியர்களைக் கிண்டல் செய்வார்கள், வழமை போல. அதிபுத்திசாலிகளான தமிழர்கள் தங்களைத் தவிர எல்லாரையும் முட்டாள்கள் என்பார்கள், இந்த பட்டியலில் மோட்டுச்சிங்களவர்கள். மலையகத்தினர். முஸ்லிம்கள் மட்டுமன்றி. ஏழாலையார். தீவார்கள் என நிறையப் பேர் இருப்பார்கள், இதே போல. அரேபிய நாடுகளிலும் துருக்கியர் பற்றி கிண்டல் கதைகள் உள்ளன, அரேபிய நாடுகளை துருக்கியரின் ஒட்டோமான் சாம்ராஜ்யம் அடக்கி வைத்திருந்ததால் வந்த கோபமாகக்கூட இருக்கலாம்,
இந்தப்படத்தில் அந்த வயதானவர் சொல்லுகின்ற கதை இது தான்,
ஒரு துருக்கியர் டொக்டரிடம் போனராம், போய் சொன்னாராம்,,, டாக்டர். எனக்கு மூக்கைத் தொட்டால் நோகிறது, வயிற்றைத் தொட்டால் நோகிறது, முழங்காலைத் தொட்டால் நோகிறது, முதுகைத் தொட்டால் நோகிறது, உடம்பில் எங்கே தொட்டாலும் நோகிறது,
டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னராம்,,, உனக்கு ஒரு இடமும் நோவில்லை, உன் சுட்டுவிரலில் தான் நோ இருக்கிறது என்று,
நாங்கள் உலகத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் துரோகமிழைத்து விட்டார்கள் என்று பெரும் பட்டியலே போடுகிறோம், யசூகி அகாசியை மட்டுமல்ல. அசினையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால். எங்களில் தவறு இருக்கும் என்ற உண்மையை நாங்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை, யார் மீதாவது பழியைப் போட்டு. அவர்கள் துரோகம் இழைக்காவிட்டால் எங்களுக்கு ஈழம் கிடைத்திருக்கும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா. நோர்வே. ஐரோப்பிய சமுகம். இந்தியா. ஜப்பான். சீனா என்ற நாடுகளும் பான் கி முன் தொடக்கம் சொல்கெய்ம் வரைக்கும் துரோகம் இழைக்காவிட்டால் தலைவர் தமிழீழத்தைப் பெற்றிருப்பார் என்று எங்கட பிள்ளையைக் கண்ட கண்ட காவாலிகளும் கெடுத்துப் போட்டாங்கள் என்று பழியைப் போடுகிறோம், இவ்வளவு பேரும் ஆதரவு தந்தால் தான் தமிழீழம் கிடைக்கும் என்றால் அதற்கு தேசியத் தலைவரா வேண்டும் அதை யாழ்ப்பாண்த்தில் பஸ் ஸ்ராண்டில் சுவீப் டிக்கட் விற்ற வைரமாளிகையால் கூட பெற்றிருக்க முடியும். ஏனென்றால். வைரமாளிகைக்கு கொஞ்சம் இங்கிலிஸ் பேசத் தெரியும்.
இவ்வாறான தடைகளையும் மீறி இலட்சியங்களை அடைவதற்குத் தானே நாங்கள் தலைவர்களைத் தெரிவு செய்து ஆதரவு வழங்குகிறோம். தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் என்றால் இப்படி எல்லாம் அனாவசியமாக உயிர்ப் பலி கொடுத்து எதற்காகப் போராட வேணடும் இப்படி மற்றவர்கள் மீது நொண்டிச்சாட்டுச் சொல்லவா இவர் தன்னை தேசியத்தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்தத் தோல்வியின் இரண்டாவது கட்டமாக நாங்கள் எங்களைத் தோற்கடித்த ராஜபக்ச மீது தாங்கமுடியாத கோபத்தில் இருக்கிறோம்.
நீங்களும் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளைக் கண்டிருப்பீர்கள், இளவட்டங்கள் சில நேரங்களில் பெண்; பிள்ளைகளோடு சொறிச் சேட்டைகளில் ஈடுபடுவார்கள், ஒரு தலைக்காதல் சேட்டைகள், சில நேரங்களில் விசயம் தெரியாமல் பெண்ணின் அண்ணன்மாரிடமோ. அல்லது அந்தத் தெருவில் உள்ள மற்ற போட்டிக் காதலர்களிடமோ மாட்டிக் கொண்டு அடி வாங்குவார்கள், அதிலும் மிகவும் அவமானமானது. அந்தப் பெணணின் முன்னால் அடி வாங்குவது,
அடி வாங்கியவருக்கு உலகத்தில் இல்லாத கோபம் வரும், பெண்ணின் முன்னால் அடி வாங்கிய அவமானம், பழி வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பார், திருப்பி அடிக்க தனக்கு திராணி இருக்காது, யாரையாவது பிடித்து பழிவாங்க வேண்டும் என்று அலைவார், இத்தனைக்கும் இப்படி தேவையில்லாமல் அந்தப் பெண்ணோடு சொறிச் சேட்டை விட்டது தன்னுடைய பிழை என்பதை இவர் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இன்றைக்கு தமிழர்களின் ராஜபக்ச மீதான மனநிலையும் இவ்வாறானது தான். எங்களை அவமானப்படுத்தி விட்டான். அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் விடக் கூடாது. எந்தச் சண்டியனைப் பிடித்து என்றாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் இன்றைக்கு பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது கிட்டத்தட்ட obsessionஎன்ற நிலைக்கு வந்து விட்டது, யுத்தக் குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்பது முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் குழப்ப வேண்டும் என்பது வரைக்கும் நாங்கள் முறுகிக் கொண்டு நிற்கிறோம்.
இலக்கிய நண்பர்கள் வாசித்திருப்பார்கள், சுந்தர ராமசாமியின் ஜெ,ஜெ சில குறிப்புகள், இதில் ஜெ,ஜெ ஒரு இலக்கியப் பிரகிருதி பற்றிச் சொல்வான்,,, அவனுடைய நிலைப்பாட்டை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்று, அதாவது அவனுக்கு என்று சொந்தமான நிலைப்பாடு எதுவும் இல்லை, அவனது எதிரிகள் எடுக்கும் நிலைப்பாடு எல்லாவற்றுக்கும் எதிரான நிலைப்பாட்டைத் தான் இவன் எடுப்பான் என்று.
இந்த obsession இன்று எந்த அளவில் வந்து நிற்கிறது எங்களுடைய அரசியலை இவ்வளவு நாளும் பிரபாகரன் நிர்ணயித்து வந்தது போய். இப்போது மகிந்த தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்.
சரத் பொன்சேகாவை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரித்து. அவரது மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து நாங்கள் கண்ணீர் விடுவதில் வந்து நிற்கிறது. பிரபாகரனைக் கொன்றது நான் தான். ராஜபக்ச அல்ல என்று சிங்கள இனவாதிகளின் வாக்குகளை எடுப்பதற்காக சொன்ன ஒருவரை. தமிழர்கள் சம உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் என்று கருத்துச் சொன்ன ஒருவரை. எங்கள் எதிரி மீதான கோபம் காரணமாக. எதிரிக்கு எதிரி நண்பன் என்றும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறோம்.
எங்களுக்கு அடித்து விட்டான் என்று நாங்கள் பழி வாங்க கூலிக்கு அழைக்கும் சண்டியன் எங்களிடம் தொடர்ந்து கப்பம் கேட்பான் என்ற உண்மை எங்களுக்குத் தெரியாத படிக்கு எதிரி மீதான கோபம் கண்ணை மறைத்து விட்டது.
ராஜபக்ச ஒன்றும் புனிதர் இல்லை. ஆனால் ராஜபக்ச மீது மட்டும் கோபம் கொள்வதன் காரணம் என்ன?
ராஜபக்சவை யதார்த்தவாதி என்று புகழ்ந்தது யார் எழுபது கோடி ருபா வாங்கி தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது யார்?  இவர்கள் சொல்லலாம், தாங்கள் பணம் வாங்கியதாக புலிகள் சொல்லவில்லையே என்று சப்பைக்கட்டு கட்டலாம், கீழ் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்று தமிழ்ச்செல்வனே ஒப்புக் கொண்டிருந்தார். எனவே புலிகள் புனிதர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ரணிலை விட. மகிந்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் மட்டுமே வென்றார். யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க விட்டிருந்தால் ரணில் ஜனாதிபதியாகி இருப்பார் என்பது தெரிந்த உண்மை. எனவே. மகிந்த ஜனாதிபதியானதற்கு காரணம். புலிகளே. புலிகள் மட்டுமே. புலிகளின் உதவி இல்லாமல் மகிந்த பதவிக்கு வந்திருக்கவே முடியாது. புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்தது. எனவே தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்று மதித்த ஒருவர் மீது இவர்கள் கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
புலிகள் கொள்கையை விட்டு விலகாதவர்கள். அவங்கள் ஈழத்தை கடைசி மட்டும் விடேலைத் தானே என்று தம்பட்டம் அடிக்கும் நாங்கள் புலிக்கும் ஒரு விலை இருக்கிறது. அது விலை போகும் என்பது மட்டுமல்ல. தமிழினத்தையும் விலை பேசி விற்கும் என்ற உண்மையை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?
நீங்கள் சொல்லலாம்  ஒப்பந்தம் இருந்தது உண்மை. எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம். மகிந்த தான் வாக்குறுதியை மீறித் துரோகம் இழைத்து விட்டார் என்று.
புலிகள் ஒப்பந்தம் செய்த ஒவ்வொருவரையும் என்ன செய்தார்கள் என்ற வரலாறு எங்கள் கண் முன்னே நிற்கிறது. இந்தியாவோடு புரிந்துணர்வோடு இருந்தார்கள்.பிரேமதாசாவோடு புரிந்துணர்வுடன் இருந்தார்கள்.சந்திரிகாவோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அவர்களைக் கொலை செய்த விவகாரங்கள் மகிந்தவுக்கு தெரிந்திருக்காதா புலிகள் எந்தக் காலத்தில் செய்த ஒப்பந்தங்களுக்கு உண்மையாக இருந்தார்கள் நோர்வேயில் சமஷ்டிக்கு சம்மதம் என்று கையெழுத்து வைத்து விட்டு வந்து ரணிலின் காலை வாரியதில் இருந்து தானே புலிகளின் அழிவு ஆரம்பிக்கிறது.
மகிந்தவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய பெருமை புலிகளைச் சாருகிறது. சிங்கள இனவாதிகளை நம்பக் கூடாது என்று. அரசுடன் தொடர்பு கொண்ட சகலரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி மண்டையில் போட்ட புலிகள் என்ன நம்பிக்கையுடன் மகிந்தவை நம்பினார்கள் மகிந்த என்ன ரணில் போல பச்சோந்தி வேடமா போட்டார் தான் சிங்கள இனவாதி தான். சிங்கள இனவாதிகளின் ஆதரவுக்காக எதையும் செய்வேன் என்று பகிரங்கமாகத் தானே அரசியல் நடத்தினார். தமிழருக்குப் பிரச்சனை இல்லை என்று தீர்வு கிடைப்பதைச் சகல வழிகளிலும் தடுத்த ஜே.வி.பி. உறுமயவுடன் தானே கூட்டு வைத்தார் இதில் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது?
மகிந்தவை தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்ற போது. மகிந்த ஒரு இனவாதி. இனவாதியை நம்பி அரசியல் நடத்துவது ஆபத்தில் முடியும் என்று எந்த ஆய்வாளர். எந்த ஊடகவியலாளர் தலைவருக்குப் புத்திமதி சொன்னார்?
தவறு மற்றவர்களில் அல்ல. உங்களிடம் இருக்கிறது. உங்கள் நுனி விரலில் தான் நோ இருக்கிறது.
புலிகள் விட்ட தவறை மறைத்து. மகிந்தவை எப்படியாவது அவமானப்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறியில் எங்கள் இனத்தின் எதிர்காலத்தை சிந்திக்க மறந்து விடுகிறோம். இன்றைக்கும் தமிழ் ஊடகங்கள்; பத்திரிகைகள். வானொலிகள். இணைய‌த்தளங்கள்,,, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களைச் செய்யத் தொடங்கி கால் ஊன்றத் தொடங்குகிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இன்றைக்கும் வெள்ளைவான் கடத்தல். கற்பழிப்பு என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள், அங்கே போய் வந்தவர்கள் எல்லாம் அங்கே மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் இல்லை.
(

வெள்ளி, 19 நவம்பர், 2010

நன்றி மறு ஆய்வு

நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு

இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும்
நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
“கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர்.
இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால்
இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
அதற்கான முதல் முயற்சி இது.
இது தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்கள் இரண்டாகும், அவை:
1) சிலி நாட்டு அதிபர் Pinochet பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார் அது போல் ராஜபக்சேயும் கைது செய்யப்படுவார்.
2) பான் கீ மூன் தலைமயில் ஐ.நா எடுக்கும் போர்க்குற்ற முன்னெடுப்பு.
சிலி அதிபரின் பிரித்தானிய கைது விவகாரம்
சிலி நாட்டு அதிபர் பிநோசெயை போர்குற்றம், இனப்படுகொலை, சித்திரவதை போன்ற குற்றங்களுக்காக பிரித்தானியாவில் கைது செய்து இஸ்பெயினுக்கு நாடுகடத்த எடுத்த முயற்சி தோல்வி என்பதுதான் உண்மையான கதை.
சிலி அதிபரின் கைது இஸ்பெயின் நீதிமன்ற பிடியாணைக்கு அமைய நடைபெற்ற விடயம்.  இஸ்பெயின் நீதியரசர் Baltasar Garzón விடுத்த பிடியாணைக்கு அமைய சர்வதேச போலீசார் சர்வதேச கைது உத்தரவை பிறப்பித்திருந்தனர். அதற்கு அமைய சிலி அதிபர் பினோச்சே பிரித்தானியாவில் அக்டோபர் 1998 இல் கைது செய்யப்பட்டார்.
ஆனால் பிரித்தானியாவின் மஜிஸ்ரேட் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், பிரபுக்கள் சபை வரை சென்ற இந்த வழக்கில் அவர் இறுதியாக தனது நாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டர் என்பது தான் முக்கியமான விடயம். அதுவும் போதாது என்று ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடாக £350000 (மூன்றரை இலட்சம்) பவுன்கள் பிரித்தானிய நீதிமன்றம் வழங்கி இருந்தது.
பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அரச வழக்கறிஞர் தெரிவித்த பின்வரும் கருத்து மிக முக்கியமானது
அதனை அப்படியே தருகின்றேன் “The Crown Prosecution Service (which is conducting the proceedings on behalf of the Spanish Government) while accepting that a foreign Head of State would, during his tenure of office, be immune from arrest or trial in respect of the matters alleged”
அதாவது “பதவியில் இருக்கும் அரச அதிபர் ஒருவருக்கு கைதில் இருந்து விதிவிலக்கு உண்டு ….” (ஆதாரம் பிரித்தானிய பாராளுமன்ற பதிவுகள்)
பின்வரும் இணைப்பில் நான்காம் பந்தியை பார்க்கhttp://www.publications.parliament.uk/pa/ld199899/ldjudgmt/jd990115/pino01.htm
மேலும் பிரித்தானியாவில் வாழ்ந்த மூன்றுபேர் பிநோசெக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முயன்ற போது பிரித்தானிய சட்ட மா அதிபர் திணைக்களம் அதற்கு அனுமதி வழங்கவில்லை (ஆதாரம்http://news.bbc.co.uk/1/hi/uk/203239.stm) கீழிருந்து ஆறாவது பந்தியை பார்க்கவும்.
அண்மைக்காலங்களில் அரசியல் தலைவர்களின் கைதையும், தண்டனையையும் இலக்கு வைக்காது அரசியல்அவமானத்தையும், அரசியல் “சாகச” த்தையும் மையமாககொண்டு பல அரசியல் தலைவர்களை கைது செய்வதாகமிரட்டல்கள் பிரித்தானியாவில் எழுந்தன. இதில் முக்கியமாக, இஸ்ரேலிய எதிர்க்கட்சி தலைவர் லிவினி, அமெரிக்க இராஜதந்திரி Henry Kissinger, சீன வர்த்தக அமைச்சர் Bo Xilai போன்றவர்களுக்கு எதிராக இத்தகைய சர்ச்சை எழுந்தது உண்மையே. இந்த சட்டத்தில் உள்ள இறுக்கமின்மை காரணமாக சாதாரண ஜே.பி தர மஜிஸ்ரேற்கூட இத்தகைய உத்தரவை பிறப்பிக்கும் உரிமை உண்டு. இது சரியான ஆதாரங்களை பின்னர் சமர்ப்பித்தல், ஜூரிகள் அதனை பின்னர் பரிசீலித்தல் என்ற அடிப்படையில் உண்டு.
கடந்த 2010 செப்டம்பரில், பாப்பரசர் பிரித்தானிய வந்த பொழுது கத்தோலிக்க மதகுமார் செய்த பாலியல் குற்றங்களுக்கு பாப்பரசர் பொறுப்பு என கைது முயற்சி இதே சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டபோது வத்திக்கான் “நாட்டின் தலைவர்” என்ற அடிப்படையில் அவரை கைது   செய்ய முடியாது என பிரித்தானியா தெரிவித்திருந்தது . ஆதாரம் Telegraph newshttp://www.telegraph.co.uk/news/newstopics/religion/the-pope/7989636/Pope-wont-be-arrested-in-UK-protesters-admit.html
அந்த வரிகளை அப்படியே பிரதி செய்கின்றேன் “But leaders of the Protest the Pope coalition now admit that the Pontiff cannot be arrested as Britain acknowledges him as a head of state, granting him sovereign immunity from criminal prosecution”.
நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த மக்கள் வாழும் பிரித்தானியாவில் உள்ள இந்த நிலைமையால் உலகின் எந்த தலைவரும் பாதுகாப்பாக வருதல் மற்றும் பிரித்தானியாவின் இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இதனை பிரித்தானியா விரும்பவில்லை.
ஆதாரம் பிரித்தானிய நீதியமைச்சின் 17 மார்ச் 2010 மற்றும் 22 ஜூலை 2010 திகதியிட்ட அறிக்கைகள். இவற்றை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்:
New rules on universal jurisdiction
Arrest warrants – universal jurisdiction. Note by the Ministry of Justice
மேலும் இத்தகைய சட்டம், பின்வரும் நாடுகளிலும் உண்டு:
Autralia – section 13 of crimes Act 1914
New Zeland- section 13 of crimes Act 1914
France-constitution de partie civile tite principle article 689 and 55 of the constitution
Spain
Canada – section 507 criminal code
Ireland-section 11(1) petty seasons Act , section 3(5) prosecution of offenses act 1974
இவற்றை அமுலாக்க அந்ததந்த நாட்டு அரசுகளின்தமிழர்களுக்கு சார்பான அரசியல் நிலைப்பாடு (political commitment) முக்கியமான தேவை.
முள்ளிவாய்கால் நிலைமைக்கு சர்வதேச ஆதரவுஇல்லாமற்போனது முக்கிய காரணியாகும். இந்த சர்வதேசஆதரவை திரட்ட செயல்பட வேண்டியவர்கள் புலம் பெயர்தமிழர்கள் தான். இது சிறிதேனும் நடைபெறவில்லை இதுவும்தோல்வியின் முக்கிய காரணிகளில் ஒன்று. இது இராஜ தந்திரஉறவுகளை வளர்ப்பதாலேயே சாத்தியம். அதனை செய்யாமல்எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி அளிக்காது.
யாரும் வழக்கை தொடரலாம். வழக்கு வைத்தல் வேறு வெற்றி அடைதல் வேறு. பினோச்சே பெற்ற நஷ்ட ஈட்டு தொகை மூன்றரை இலட்சம் பவுன்கள் மறக்க வேண்டாம்.
பான் கீ மூன் தலைமயில் ஐ.நா எடுக்கும் போர்குற்றமுன்னெடுப்பு.
ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணையை (இதனை முயற்சிப்பதில் ஒன்றும் பாதகமில்லை) மட்டும் முன்னிலைப்படுத்தாமல் இனப் படுகொலையையும் முன்னிலைப்படுத்துவதாக அனைத்து செயல்பாடுகளும் அமைய வேண்டும்.
“நடைமுறைச் சாத்தியமற்ற என்ற விடயம் போர்குற்ற விசாரணை ஈடுபாட்டை மழுங்கடிக்க செய்து விடும் என்ற அச்சம் காரணமாக இந்த கட்டுரையை மார்கழி 15 க்கு பின் வரையலாம் என முன்னர் கருதி இருந்தேன். எனினும் மனதை நோகடித்தாலும் பரவாயில்லை பொது நன்மை கருதி, அனைத்துக் கடிதங்களும் “இனப் படுகொலையையும்” வலியுறுத்துவதாக அமைய வேண்டும் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கும் தேவை இருப்பதால் உடனடியாக வரைய முடிவு செய்துள்ளேன்.
போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனைஎன்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணைபாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அதுகுற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாககொண்ட வடிவமைப்பு.
இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணைபாதிக்கப்பட்ட இனத்தை, இனப் படுகொலையில் இருந்துபாதுகாக்கும் (தனி நாடாக பிரிந்து செல்லுதலை முன்னிலைப்படுத்தும்) அதே நேரம் குற்றவாளிகளை தண்டிக்கும்நோக்கத்தையும் கொண்டது
போர்க் குற்ற விசாரணை எங்கே நடாத்தபடலாம்?
போர்குற்ற விசாரணை என்பது சர்வதேச போர்குற்ற நீதிமன்றில்தான் நடத்த முடியும். அதனை ஆங்கிலத்தில் ICC அல்லது International Criminal court என அழைப்பார்கள்.
ஐ. சீ .சி  இனுடைய இணையத்தளம்:http://www.icccpi.int/Menus/ICC/About+the+Court/ICC+at+a+glance/Jurisdiction+and+Admissibility.htmஎன்ற முகவரியில் உண்டு .
போர்குற்ற விசாரணை என்ற விடயத்தில் ஈடுபாடு கொள்ளமுன்அந்த நீதிமன்ற விதிகள் அனைத்தையும் நாம் அக்குவேறுஆணிவேறாக ஆராய்ந்து இருக்க வேண்டும்.
எம்மில் அனைவருக்கும் இந்த அறிவுத்திறன் இருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதனை தமிழின உணர்வு மிக்க அனைவரும் செய்திருப்பார்கள் என நம்புகின்றேன்.
இதில் முக்கியமான இரு அங்கங்களை நாம் நுணுக்கமாக ஆராய வேண்டும்.
அவையாவன,
1) சர்வதேச போர்குற்ற விசாரணை வழக்கு யாருக்கு எதிராக வைக்கலாம்?
2) அத்தகைய வழக்கை யார் பதிவு செய்யலாம்?
என்பனவாகும், இதனை ஆராய்ந்து அதற்கேற்ப நாம் செயற்படவேண்டும்.
இதனடிப்படையில் எனது அறிவுக்கு எட்டிய வரையில் போர்க்குற்றவிசாரணை நடைமுறையில் மிகச் சாத்தியம் அற்றதாகவேகாணப்படுகின்றது. இதனை முயற்சிப்பதில் ஒன்றும் பாதகமில்லை.
ஆனால் பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்க வழி ஏற்படுத்தும் சுயநிர்ணய உரிமைக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய இனப்படுகொலை தொடர்பான வழக்கு மிக நடைமுறைச் சாத்தியமானதாகவே காணப்படுகின்றது. அனால் அந்த முயற்சி நடப்பதாக தெரியவில்லை.
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் வழக்கு யாருக்கு எதிராகவைக்கலாம்
சிறிலங்கா அரசு தலைவருக்கும், அதன் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்வதே எமது நோக்கம் என்பதை மனதில் வைத்து அது சத்தியமா? எனப் பார்ப்போம்.
இந்த கேள்விக்கான பதிலை தேடினேன்
அதற்கான பதில் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் பின்வரும் முகவரியில் இருக்கின்றது.
அந்த பதிலை அப்படியே இங்கே பிரதி செய்து விரிவாக ஆராய்வோம்
The Court does not have universal jurisdiction. The Court may only exercise jurisdiction if:
The accused is a national of a State Party or a State otherwise accepting the jurisdiction of the Court;
The crime took place on the territory of a State Party or a State otherwise accepting the jurisdiction of the Court; or
The United Nations Security Council has referred the situation to the Prosecutor, irrespective of the nationality of the accused or the location of the crime.
இந்த நீதி மன்றுக்கு உலகளாவிய அதிகாரம் இல்லை, பின்வரும் ஏதாவது ஒரு நிபந்தனைகளுக்கு உட்படவே நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்
குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்ற உறுப்பினரான அரசின் (State Party) பிரஜையாக அல்லது அந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசின் பிரஜையாக இருக்க வேண்டும். அல்லது
நீதிமன்ற உறுப்பினரான அரசின் (State Party) பிரதேசத்தில் அல்லது அந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசின் பிரதேசத்தில் குற்றம் நடந்து இருக்க வேண்டும். அல்லது
.நா பாதுகாப்புச் சபை போர்குற்ற விசாரணையை கோரிஇருந்தால், பிரஜா உரிமை, குற்றம் நடந்த இடம் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை.
The Court’s jurisdiction is further limited to events taking place since 1 July 2002.
1 ஜூலை 2002 உருவாகப்பட்ட இந்த நீதிமன்று அதற்குப் பிந்திய குற்றங்களையே ஆராய முடியும்.
இப்பொழுது எம்மிடம் எழும் முக்கியமான கேள்வி, அது என்ன நீதி மன்ற உறுப்பினரான அரசு அல்லது “State Party” என்பதாகும். இதற்கான பதிலை தேடுவோம்.
அந்த பதில் நீதிமன்ற இணையத்தில் பின்வரும் முகவரியில் உண்டு. The States Parties to the Rome Statute என்ற தலைப்பில் உண்டு
அந்த பதில், அப்படியே பிரதி செய்து பார்த்தால் அதில் உறுப்பு நாடாக அதாவது State Party ஆக சிறிலங்கா இல்லை.
As of 12 October 2010, 114 countries are States Parties to the Rome Statute of the International Criminal Court. Out of them 31 are African States, 15 are Asian States, 18 are from Eastern Europe, 25 are from Latin American and Caribbean States, and 25 are from Western European and other States.
அப்படியானால் நாம் மூன்றாவது தெரிவான ஐ.நா பாதுகாப்புச்சபையின் தீர்மானத்தில்தான் தங்கியுள்ளோம்.
உலகமெலாம் இருந்த தமிழ் மக்கள் ஐ.நா தலையீடு கோரி 2009 முற்பகுதியில் தெருக்களில் அலைந்ததும், அது நிறைவேறாமல் போனதும் எமக்கு மறக்க முடியாதவை.
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் சீனாவும், ரஷ்சியாவும் இருப்பது எமக்கு எலோருக்கும் தெரியும். தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் பாதுகாப்புக் கவுன்சில் எடுப்பதை சீனாவும், ரஷ்சியாவும் தடுக்கும்.
எனவே சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் போர்குற்ற விசாரணை என்பது மிக மிக நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயம்.
இதே கருத்தை ஐ.நா வின் அதிகாரி Philip Aston மிக பவ்வியமாக பின்வருமாறு தெரிவிக்கின்றார். “war crimes investigation is most unlikely “
இலங்கை தொடர்பாக அவர் வழங்கிய ஒளிப்பதிவுப் பேட்டியை பின்வரும் முகவரியில் பார்க்கலாம். அதில் 16 ஆவது நிமிடம் முதல் 18 ஆவது நிமிடத்தில் இந்த விடயம் தெளிவாக சொல்லப்படுகின்றது.
ஆனால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்தல் சாத்தியம் என சொன்ன முக்கியமான நபர்களில் ஜி.எல்.பீரிசும் ஒருவர். அந்த செய்தியை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம் செய்தித் தலைப்பு “சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: கோத்தபாய மற்றும் தளபதி சவேந்திர சில்வா விசாரிக்கப்படும் ஆபத்து உண்டு – பீரிஸ்”
எனவே சிறிலங்கா போர்க்குற்ற நீதிமன் உறுப்பு நாடாகஇல்லாததாலும், குற்றம் சுமத்தப்படும் எவரும் நீதி மன்ற உறுப்புநாட்டு பிரஜை ஆக இல்லாததாலும், குற்றம் உறுப்பு நாட்டுபிரதேசத்தில் நிகழாததாலும் ஐ.நா தீர்மானம் நடை முறைச்சாத்தியம் இல்லாததாலும், சர்வதேச போர்குற்ற நீதிமன்றில்போர்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீராகும்.
அத்தகைய வழக்கை யார் பதிவு செய்யலாம்?
போர்குற்ற வழக்கை பதிவு செய்ய முடியாது என மேலே பார்த்தோம்.
போர்குற்ற வழக்கை பதிவு செய்ய முடியாது என்றாகிய பின் வழக்கை யார் பதிவு செய்யலாம்? என்ற கேள்வி அர்த்தமற்றதுதான். எனினும் சில ஆர்வலர்கள் தாம் வழக்கை பதிவு செய்து விட்டதாக அறிக்கை விட்டிருப்பதால் அது பற்றியும் பேச வேண்டி இருக்கின்றது. DTF எனப்படும் டென்மார்க் உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கை விட்டிருக்கின்றார்கள். அவர்கள் சட்டம் தெரியாமல் ஏமாறுகின்றார்களோ தெரியவில்லை. இவர்கள் தவிர ஏனைய சிலரும் இவ்வாறாக ஏமாற்றப்படக் கூடாது என்பதால் இதனை ஆராய்வது அவசிமாகின்றது
சட்டத்தரணிகள் பிழைப்புக்காக வழக்குகளை பதிவார்கள். உருவாக்குவார்கள். அமெரிக்க முன்னைநாள் சட்ட மா அதிபர் புரூஸ் பேயினும் இப்படித்தான் கோத்தபாயவுக்கும், பொன்சேகாவுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்வதாக 2009 முற்பகுதியில் TAG யினால் பிரச்சாரம் செய்யப்பட்டு பணம் திரட்டப்பட்டது நினைவு இருக்கலாம். அவர் பிரித்தானியா வந்திருந்த பொழுது அவர் நடத்திய கூட்டங்கள் மூன்றுக்கும் நுழைவுப் பணம் செலுத்தி சென்றிருந்தேன்.
அப்பொழுது “அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் தனி நபருக்கோ அல்லது தன்னார்வ நிறுவனங்களுக்கோ இல்லை. அந்த அதிகாரம் அமெரிக்க சட்ட மா அதிபருக்கு மட்டும் தான் உண்டு” என்று அவரிடம் கேட்டேன். அவருக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. ஏன் இனப்படுகொலை விசாரணையை நாம் முன் நிறுத்தாமல், போர்க்குற்ற விசாரணையை முன்னெடுகின்றோம் எனக் கேட்டதற்கு, இலங்கை மேலும் குற்றம் இழைகட்டும் பின்னர் செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.
போர்குற்ற வழக்கை யார் பதிவு செய்யலாம் என்பதற்கான பதிலை தேட நாம் மீண்டும் சர்வதேச போர்குற்ற நீதிமன்றின் இணையத்தில் பின்வரும் பகுதிக்குச் செல்வோம்.
அதில் யார் வழக்கு பதிவு செய்யலாம் என்ற பகுதி உண்டு. அதனை அப்படியே ஆங்கிலத்தில் முதலில் பார்ப்போம்.
Who can initiate proceedings? Proceedings before the ICC may be initiated by a State Party, the Prosecutor or the United Nations Security Council. இதற்கான இணைய முகவரி
ஒரு விளக்கத்துக்காக இதனை தமிழில் தருகின்றேன்
சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் விசாரணைகளை, உறுப்பு நாடு ஒன்றோ அல்லது சட்ட மா அதிபரோ அல்லது ஐ. நா பாதுகாப்புக் கவுன்ஸிலோ ஆரம்பிக்க முடியும்.
எனவே தனி நபர்களும், மற்றும் நிறுவனங்களும் வழக்குத்தாக்கல் செய்தோம் என்பது பொய் அல்லது அறியாமை ஆகும்.
இனப்படுகொலை விசாரணை ஏன் சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?
இனப்படுகொலை விசாரணை என்பது ஐ.நா சட்டங்களுக்குஅமைய ஏதாவது ஒரு உறுப்பு நாட்டினால் ஆரம்பிக்கக் கூடியவிடயம்.
இனப்படுகொலை வழக்கு, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் 260(iii) இற்கு அமைய தொடரக் கூடியதாகும்.
260 Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.
இந்த தீர்மானத்தில் இலங்கையும் கையெழுத்து இட்டு உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் சர்வதேச குற்ற நீதிமன்றில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை என்பதை மேலே பார்த்தோம். இனப்படுகொலைக்கு எதிரான இந்த சட்டம் 02.10.1950 இல் இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது
இந்த விபரத்தை கீழ் காணும் இணைப்புகளில் பார்க்கலாம்.
இனப்படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம்?
இனப்படுகொலை என்றால் என்ன?
இந்த இரண்டு விடயங்களையும் பாப்போம்
முதலில்,
இனப்படுகொலை தொடர்பான வழக்கை யார் பதிவு செய்யலாம்?
இனப் படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம் என்ற கேள்விக்குப் பதில் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா தீர்மானம் 260 இல் எட்டாவது அங்கத்தில் உள்ளது. அதனை கீழே பிரதி செய்கின்றேன்.
Article 8
Any Contracting Party may call upon the competent organs of the United Nations to take such action under the Charter of the United Nations as they consider appropriate for the prevention and suppression of acts of genocide or any of the other acts enumerated in Article 3.
ஒப்பந்தத்தில் உறுப்புநாடாக உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கம் எட்டாவதில் குறிக்கப்பட்டது உட்பட இனப் படுகொலை தொடர்பானதும், தடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா வின் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட ஐ.நாவின் அதிகாரம் அளிக்கப்பட்ட நீதிநிறுவனம் என்பது என்ன?
இப்போது எம்மிடம், ஐ.நா வின் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனம் எது என்பது தொடர்பான கேள்வி உள்ளது.
அதற்கான பதில், சர்வதேச நீதிமன்றம் எனப்படும் International Court of Justice (ICJ) என்பதாகும். சர்வதேச நீதிமன்றத்தின் கீழே உள்ள இணைய முகவரியில் பார்த்தால்,
இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். அந்தப் பதிலை அப்படியே கீழே பிரதி செய்கின்றேன்.
The International Court of Justice (ICJ) is the principal judicial organ of the United Nations (UN). It was established in June 1945 by the Charter of the United Nations and began work in April 1946.
சர்வதேச நீதிமன்றம் ஐ.நா வின் பிரதான நீதித்துறை நிறுவனமாகும் என இது தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இனி சர்வதேச நீதிமன்ற விதிகளின்படி யார் வழக்கை பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம் இது நீதிமன்ற இணையத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை பாருங்கள்:
இதில் பின்வருமாறு உள்ளது
Proceedings may be instituted in one of two ways:
by means of an application: the application, which is of a unilateral nature, is submitted by an applicant State against a respondent State.
ஒரு அரசினால் இன்னொரு அரசுக்கு எதிராக தனியாக விண்ணப்பிப்பதன் மூலம் வழக்கை பதிவு செய்யலாம்.
இனப்படுகொலை என்றால் என்ன என்பது தொடர்பானவரையறை எங்கே உள்ளது?
இனப்படுகொலை தொடர்பான வரையறை ஐ.நா வின் இருவேறு சட்டங்களில் காணப்படுகின்றது முதலாவது 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம். இரண்டாவது 2007 இல் உருவாகப்பட்ட தொன்முதற்குடி மக்கள் பாதுகாப்பதற்கான சட்டம்.
முதலாவதாக 1948 ஆம் ஆண்டு இயற்றபட்டஇனப்படுகொலைக்கு எதிரான சட்டம் என்ன சொல்கின்றது எனப்பார்ப்போம்.
கீழே உள்ள இணைப்பில் இரண்டாவது சரத்தை பாருங்கள்:
Article 2
1) In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:
(a) Killing members of the group – ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல்
(b) Causing serious bodily or mental harm to members of the group: ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துதல்.
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part:   ஒருகுழுவின் வாழ்வாதாரங்களில் திட்டமிட்ட சூழ்நிலைகளை உருவாக்கி அதனை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல்
(d) Imposing measures intended to prevent births within the group: ஒரு குழுவின் இனப் பெருக்கத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தல்,
(e) Forcibly transferring children of the group to another group: ஒரு குழுவில் இருந்து மற்ற குழுவுக்கு சிறுவர்களை பலவந்தமாக இடம் மாற்றுதல்.
இரண்டாவதாக 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொன்முதற்குடி மக்களை பாதுகாக்கும் சட்டம் என்ன சொல்கிறது எனப் பாப்போம்
அது பின் வருமாறு தெரிவிக்கின்றது
Adopted by General Assembly Resolution 61/295 on 13 September 2007
Indigenous peoples and individuals have the right not to be subjected to forced assimilation or destruction of their culture.
நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்களை பலவந்தமாக மற்ற இனத்துடன் இணைக்கப்படுதல், பலவந்தமாக கலாச்சாரம் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் உரிமையை இது உறுதிப் படுத்துகின்றது.
2) States shall provide effective mechanisms for prevention of, and redress for:
அரசுகள் பின்வரும் விடயங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(a) Any action which has the aim or effect of depriving them of their integrity as distinct peoples, or of their cultural values or ethnic identities: தனித்துவமான இனம், தனித்துவமான கலாச்சாரம், இன அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க அரசு கடப்பாடு உடையது.
(b) Any action which has the aim or effect of dispossessing them of their lands, territories or resources: அவர்களின் நிலங்கள், பிரதேசங்கள், மூல வளங்கள் பாதுகாக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
(c) Any form of forced population transfer which has the aim or effect of violating or undermining any of their rights: இனக்குழுவை பலவந்தமாக இடம் மாற்றி அவர்களது உரிமைகள் மீறுதல், குறைத்தல்
(d) Any form of forced assimilation or integration: பலவந்தமான இணைப்பு, கலத்தல்
(e) Any form of propaganda designed to promote or incite racial or ethnic discrimination directed against them: இன அடக்குமுறையை தூண்டும் பிரச்சாரம்.
எனவே இனப்படுகொலை சட்டங்கள இரண்டிலும் குறிக்கப்பட்டஇன அழிப்பு விடயங்கள் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்றுவருகின்றன. டி.எஸ் செனநாயக்காவின் கால சிங்களகுடியேற்றம் இன்றும் தொடர்கின்றன. மே 18 இன் பின்நடைபெறும் வடக்கு கிழக்கு பவுத்த விகாரை அமைத்தல், சிங்கள குடியேற்றம் அத்தனையும் இன அழிப்பு நடவடிக்கைதான்.
தமிழர்கள் செய்ய வேண்டியது,
ஐ.நா வின் இன அழிப்புக்கு எதிராக கையெழுத்திட்ட நாடுகளை (http://www.icrc.org/ihl.nsf/WebSign?ReadForm&id=357&ps=P) அணுகி. இனழிப்புக்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படு கொலையை தடுக்க கோரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அத்துடன் அந்தந்த நாடுகள் சிறிலங்காவை பகிஸ்கரிக்க வைக்க வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணையில் மட்டும் நம்பி இருக்க கூடாது. அதனை முயற்சிப்பதில் தவறில்லை. அந்த விசாரணைக் கடிதங்களில் மறக்காமல் இன அழிப்பு நடைபெறுகின்றது அதை தடுக்குமாறு ஐ.நா வை கோரவேண்டும்.
ஐ.நா தீர்மானம் 260 ஐ யும் 2007 தீர்மானம் 61/295 ஐயும் குறிக்க வேண்டும்.
ஈழத் தமிழர் விடயத்தில் ஐ.நா எடுக்கப் போகும் எந்த எதிர்கால நடவடிக்கையும் இந்த அறிக்கையில் இருந்து தான் ஆரம்பிக்க உள்ளது.
எனவே குற்றவாளிக்கு தண்டனை மட்டும் போதுமா? எமது இனம் பாதுகாக்கப்படவும் வேண்டுமா? என்ற கேள்விகளை  மனதில் எழுப்பி ,
தண்டனை என்பதை விட எமது இனம் பாதுகாக்கப்பட்டு நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழி வகுக்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் நாம் முன்னிறுத்த தவறக் கூடாது .
“சிறிலங்காவில் இனப்படுகொலையின் ஒரு அங்கம் தான்போர்குற்றம்
இந்த சட்ட ஆய்வில் எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.
உணர்ச்சிவசப்பட்டு திட்டித் தீர்க்காமல் அறிவு கொண்டு ஆய்ந்து ஆதாரத்துடன் வரும் பதில்களை ஆர்வத்துடன் எதிர்பார்கின்றேன்.
சி.சந்திரமௌலிசன்

வியாழன், 18 நவம்பர், 2010

ICRC வெளியேறுமா ?

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை வடக்கிலிருந்து வெளியேர அரசு சொல்லியுள்ளது .ஆனால் அவர்களை வெளியேற்ற முடியாது ஏனென்றால் இன்னமும் யுத்த கைதிகள் உள்ளனர் .என்ன நடக்குதோ பார்ப்பம்

ஞாயிறு, 14 நவம்பர், 2010

மொத்தம் எத்தனை பேர்?

இது தேனீதளத்தில் வந்த செய்தி ?11/11/2010

12,000பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
 இதுவரையில் 12,000பேர் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 10 முகாம்களில் 4952 வரையிலானோரே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்களை சமூக மக்கள் வேறுபடுத்தி பார்க்காது அவர்களை சாதாரணமாக பார்க்க வேண்டும் என்பது தொடர்பில் மதகுருக்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்கத் தலைவர்களுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் இன்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
_________________________________________________________

சிங்கள குடியேற்றமும் அடுத்த போரும்;....

அண்மைய செய்திகள் எல்லாம் நாவற்குழியில் சிங்கள மக்களை குடியேறியது பற்றியே கதைக்கின்றன .இது திட்டமிட்ட குடியேற்றம் என்பதில் எந்தவித கருத்துக்கும் மாற்று கருத்துக்கிடையது .ஆனால் எதற்காகவோ யாரோ செய்தனர் .அதாவது இப்போ அரசுக்கு தான் தப்பிக்கொள்ள ஏதாவது ஒரு பிரச்சனை வேண்டும் .அதற்கு ஒரு சிறு புகைச்சல் வேண்டும் .அதைவைத்து அரசியல் காய் நகர்த்த வேண்டும் என்று எங்கோ திட்டமிட்டது போல தெரிகிறது .
உண்மையில் யாழ்ப்பாணத்தவர் அல்லது தமிழர் அவர்கள் திட்டமிட்டது போல நடவாமல் செய்துவிட்டனர் என்றே எண்ண தோன்றுகிறது.
அவர்கள் சிங்களவர்களை கொண்டுவந்தவுடன் ஏதாவது அசம்பாவிதம்  தாக்குதல்கள் அவர்கள் மீது யாரவது மேறகொள்வார்கள் என்று எதிர்பார்த்து இப்போது குடியேற்றி உள்ளார்கள் .அவர்கள் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த கலவரம் வெகுவிரைவில் நடக்கும் .அப்போது கொழும்பிலிருந்து மீண்டும் உடுபுடவையுடன் வெளியேற வேண்டிவரும் .மேர்வின் போன்றவர்களும் வேறு நல்ல அமைச்சர்களின் உறவுகளும்.....திறம்பட நடத்தும்........ ஓரிரவில் எல்லாம் முடிந்ததும் ஊரடங்கு அமுல்வரும்? மகிந்த தமிழ் பேசுவார்? .நாம் சொக்கிப்போவோம் ..
அப்படி என்ன நடக்கும் ?
யாழ்பாணத்தில் ஏதாவது ஒரு வகையில் சிங்களவனுக்கு அடி விழுந்தால்..(எப்படியும் நடக்கும் அதனை கிழேதருகிறேன் .)  அது வேறு வகையில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வேடிக்கவைக்கப்படும் வன்முறை .அப்போது முக்கியமான சரணடைந்த போராளிகள் சிறையில் கொல்லப்பட்டதாக கணக்கு காட்டப்படலாம் ...ஏனென்றால் அவர்கள் ஏர்கனவே கொல்லப்பட்டு இப்போ ஆணைக்குளுமுன் சாட்சிகளாக பதியப்படுகிறது .இது எதிர்காலத்தில் விஸ்வருபம் எடுத்து மகிந்த அன் கோ வினை விழுங்கும் முன் அது நடக்கணும் 
என எதிர் பார்க்கிறார்கள் போலும் ..
இப்போ உள்ள நிலைமையில் ஒரு இரண்டு மணிநேரம் கிடைத்தாலே அவர்கள் ருத்திர தாண்டவம் ஆடுவார்கள் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் 
சரி அது எப்படி தொடங்கும் 
வந்திருப்பவர்கள் எல்லோரும் அப்படியானவர்கள் இல்லை என்றாலும் அப்படியானவர்கள் நிறைய இருப்பார்கள்  விபச்சாரிகளும் போதைவஸ்து பாவனையளர்களும் திருடர்களும் கண்டிப்பாக இருப்பார்கள் 
இதிலே பெண்கள் போடியளை வளைக்க ...அவர்கள் ஐயாட்ட(அண்ணா)சொல்ல அவை கேட்ட வருவினம் .அப்போ ஏதாவது கைகலப்பு வருமானால் ...அது
மறறது 
போதிவஸ்து (குடுகாரன் )பாவிப்பவன் அதை அடிச்சிட்டு இவங்களோட கொழுவ ...அது .
மற்றது 
கள்ளர்கள் 
இவர்களால் நிறைய பிரச்சனை வரும் .அவர்கள் ராணுவம் ஏன்டா பெயரிலும் வீடுகளுக்குள் போகலாம் .CIDஎன சொல்லலாம் .மூச்சு விட முடியாது தமிழனுக்கு .இதையே வேலையில்லாத எங்கட சிங்களம் தெரிந்த போடியலும் செய்வாங்கள் .அப்படியே உணர்ச்சி வசப்பட்டு சிறு கைகலப்பு வந்தாலும் தொலை தொடர்பு வேகம் காரணமாக கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடியும் 
அதாவது அவை எதிர்பார்க்கிறது 
இது ஒரு திரிசங்குசொர்ககநிலை ..இதுக்கு என்னசெய்யலாம் எண்டதை வேகமாக சிந்தியுங்கோ 
நானும் ஜோசித்து எழுதிறன் .
நன்றியுடன்
கண்ணன் 


..

ஞாயிறு, 7 நவம்பர், 2010

Nov 6, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களில் சில இணைப்பு வடிவில்


சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழுவை அமைத்துள்ள நிலையில் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் சில இங்கு தரப்பட்டுள்ளன.

கூட்டமாக கொல்ப்பட்ட தமிழ் மக்கள். சீருடைதரித்த சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள். இது பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆதாரம்.

இந்த படுகொலை காணொளி உண்மையானது என ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலை தொடர்பான அதிகாரி பிரில் அல்ஸ்ரன் தெரிவித்திருந்தார்.

முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட பொதுமக்கள் மீதான வன்முறைகள்.

http://www.youtube.com/watch?v=W5KDXlY4eR8

http://www.youtube.com/watch?v=vdFKlQT_Ta8&feature=related

http://www.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DK7leSySfn0A

http://www.youtube.com/watch?v=eksn5X7lT6s&feature=related

http://www.youtube.com/watch?v=QRy52K0gjCQ&feature=related

http://www.youtube.com/watch?v=Mb9QX4AYGys&feature=related

http://www.youtube.com/watch?v=IZODCxStdHg&feature=related

http://www.youtube.com/watch?v=Ikqp4u-fmtA&feature=related

http://en.kendincos.net/video-hndhvvp-shocking-leak-sri-lankan-army-mass-rape-and-execution-of-tamil-women-report-by-australian-media-.html

http://www.pakistan.tv/videos-war-crimes-during-the-sri-lankan-%5BsGGwyMeLs70%5D.cfm

http://www.youtube.com/watch?v=R7zaSJMkXuE&feature=related

http://www.youtube.com/watch?v=lDSsEXjsbhQ&feature=related

http://www.youtube.com/watch?v=IF0fJJn6oi0&feature=related

http://www.youtube.com/watch?v=R7zaSJMkXuE&feature=related