வியாழன், 23 செப்டம்பர், 2010

என்ன சொல்ல வருகின்றன இந்த ஊடகங்கள்???

என்ன சொல்ல வருகின்றன இந்த ஊடகங்கள்??
இது அதிர்வு 






நோர்வே பிரதமர் Jens Stoltenberg, சொல்ஹெய்ம்

மகிந்த சொல்ஹைம் மந்திர ஆலோசனை: முகமூடிகள் கிழிகின்றது


22 September, 2010 by admin



சமாதானம் என்று கூறிக்கொண்டு 2002ம் ஆண்டு
 இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்தது நோர்வே. அதனை அவர்கள் ஏற்படுத்தினார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைகளையோ, இல்லை இன அழிப்பையோ இவர்களால் நிறுத்த முடியவில்லை என்பதை எல்லோரும் நன்கு அறிவர். அடிக்கடி இலங்கை சென்று ஜனாதிபதி உட்பட, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்துவந்த நபர் எரிக் சொல்ஹைம். சமாதானத் தூதுவராக இவர் செயல்பட்ட காலம்போய் தற்போது இலங்கை அரசின் பக்கம் சாய்ந்து பக்கசார்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என்பது பழைய கதை. ஆனால்
 புதிய கதைகளும் அரங்கேறியுள்ளது.

நேற்றைய தினம நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மகிந்தவை
 இவர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். அப்போது தான் நோர்வேயில் உள்ள பல தமிழர்களோடு பேசியிருப்பதாகவும், அதில் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கவே விரும்புவதாக, மகிந்தவுக்கு இவர் எடுத்துரைத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ மக்களவைக்கும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும், தற்போது நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமது வாக்குகளை போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை மீண்டும்
 வலுயுறுத்திக் காட்டியிருந்தனர். இது உலகறிந்த விடயம்.

ஆனால் எரிக் சொல்ஹைமின் காலைப் பிடித்து திரியும்
 சில அடிவருடிகள் சொல்வதை கேட்டும், மற்றும் குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேசிவிட்டு, ஏதோ நோர்வேயில் உள்ள மொத்தத் தமிழர்களும் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்க இருப்பதாக எரிக் சொல்ஹைம் கூறியிருப்பது அடிமுட்டாள் தனமாகும். தமிழ் மக்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நோர்வே தமிழர்கள் பல முறை நிரூபித்துவிட்டனர். அதிலும் மக்களவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடு கடந்த தமிழீழ அரசு, என பல கட்டமைப்புகள் அங்கு இயங்கிவரும் நிலையில், தமிழர்களின் ஏகோபித்த
 அபிலாஷை இது தான் என்று கூற எரிக் சொல்ஹைம் யார்?

வெறுமனவே மகிந்தவை திருப்திப்படுத்த இவர்கள்
 போன்ற பச்சோந்திகள் முனைகிறார்களே அன்றி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இவர்கள் இன்னும் செயல்படவில்லை. 18 வது திருத்தச் சட்டத்தை உலகில் உள்ள பல ஜனநாயக அமைப்புகள் எதிர்த்துள்ளன, நீதித் துறை, தேர்தல் ஆணையாளரை நியமிப்பது, போலீஸ் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்தும் சில மேலதிக அதிகாரங்களும் தற்போது இச் சீர்திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கைகளில் விழுந்துள்ளன. இது குறித்தோ இல்லை மனிதப் படுகொலை குறித்தோ ஆராயாத எரிக் சொல்ஹைம், நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என மகிந்தவிடம் அசடு வழிந்துள்ளார்.
 இதனை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதும் இல்லை.

எனவே எரிக் சொல்ஹைமுடன் இணைந்து
 செயல்படுவோரை நாம் முதலில் இனம்காண வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களே எமது பாதையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல
 திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.

அதிர்வின் ஆசிரியபீடம்

    இது தமிழ்வின் 
    இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் நோர்வே பிரதமர்
    Jens Stoltenberg, சொல்ஹெய்ம் ஆலோசனை
    ற்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும்
     இடையில் ஐ.நாவின் நியூயோர்க் அலுவலகத்தில் நேற்று
     முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது
    நாவின் 65 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற வந்திருந்தபோதே
     இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்கின்றமை
     தொடர்பாகப் பரஸ்பரம் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்தனர். நோர்வே
     தரப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Jonas Gahr Støre, சர்வதேச
     அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்
    ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
    ஜீ.எல்.பீரிஸும் கலந்து கொண்டார்.

    சொல்ஹெய்ம்

     இலங்கையுடன் நல்லுறவைப் பேணும் நோர்வேயின் நகர்வு
     குறித்து இலங்கைத் தமிழர்கள் பலரின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தேன்.

    அவர்கள் எமது இந்நகர்வுக்கு பேராதரவை வெளிப்படுத்தினர்.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்ச்சைக்குரிய ஒரு தலைவர்தான்.
     ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். மக்களின்
     பேராதரவையும், அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று
     ஜனாதிபதியாகத் தெரிவான மிகவும் செல்வாக்கான அரசியல்
     தலைவர் அவர் என்பதை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் 
    ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. 

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் நோர்வேயுடன் நல்லுறவை
     பேணுகின்றமையில் பேரார்வமாக உள்ளார். தமிழர்
     பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்தருடன்
     ஒத்துழைக்கின்றமையே அதற்கான ஒரேயொரு மார்க்கமாக உள்ளது.
     தமிழர்கள் எதிர்காலத்தைச் சிந்தித்து செயற்படுதல் வேண்டும். ஆட்சியில்
     இருப்பவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும்.”
    --------------------------------------------------------------------------------------------------------------------
    நான்சொல்ல வருவதெல்லாம் ஈழ விடுதலை விரும்பிகள் எல்லோரும்
     முதலில் சாத்தியமானத்தை சிந்தித்து பழக்குங்கள் .நான் சொல்வது 
    தமிழீழம் சத்தியம் என்பதல்ல .12000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் 
    உள்ள நோர்வே நாட்டில் எத்தனை குழுக்கள் உள்ளன ?"
     தமிழீழ மக்களவைக்கும், வட்டுக்கோட்டை 
    தீர்மானத்திற்கும்,
     தற்போது நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கும்
     தமது வாக்குகளை போட்டு தமிழர்களின்
     சுயநிர்ணய உரிமைகளை மீண்டும் வலுயுறுத்திக் 
    காட்டியிருந்தனர். இது உலகறிந்த விடயம்.. 
     (பார்க்க அதிர்வு செய்தி).      
    இதிலே முன்று ....அப்போ பாருங்கள்
     4000பேருக்கு ஒரு குழு .அடிப்படையில் நாங்கள்
     பிரிந்து நிக்கிறோம் .எரிக சொல்கேமா  மாவிலாறு பூட்ட
     சொன்னார்???
    அவர் மகிந்தவை பற்றி இவ்வாறு (பார்க்க தமிழ்வின் ).
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்ச்சைக்குரிய ஒரு தலைவர்தான்.
     ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். மக்களின்
     பேராதரவையும், அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று ஜனாதிபதியாகத்
     தெரிவான மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவர் அவர் என்பதை மாற்றுக் 
    கருத்துகளுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. 
    சொல்லயுள்ளார் ?
    எதுக்கோ ஆசை பட்டு கட்டியிருந்த கோமனமும்
     போன கதைபோல  அன்டன் பாலசிங்கம் அவர்கள்
     சொன்ன தீர்வை பரிசீலித்திருக்கலாம் அல்லவா?
    ஏனென்றால் சிங்களவனுக்கு சமஷ்டி என்றால் அலர்ஜி .
    எல்லா சாதகங்களையும் விட்டு விட்டு இப்போ குத்துது
     குடையுது என்றால் எரிக என்ன செய்வது ?
    தமிழ் மக்கள் வீதி வீதியா இருக்கும் பொழுது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அவர்களுக்கு உதவவேண்டியது கடமையல்லவா?
    அப்போ மகிந்தவுடன் தானே கதைத்து செய்யவேண்டும் 
    இந்த அடிப்படை விடய ஞானம் எதற்கு இல்லது போனது?
    அதனை எரிக சொல்கிறார் இவ்வாறு(தமிழ்வின்)இலங்கையில் உள்ள
     தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம் அந்நாட்டுடன் கட்டாயம் நல்லுறவைக்
    கட்டி எழுப்ப வேண்டும்
     .
    இவ்விடயத்தில் அதிர்வு இணையம் என்ன தவறு கண்டது?இது மக்களை ஒரு 
    "டென்ஷனுக்குள்"வைத்திருக்கும் முயற்சி போல தெரிகிறது .?
    முதலில் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர முயலுங்கள் .
    அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதனால் அதற்கு முயலுங்கள் .காலம் கடந்த ஞானம் வந்து பிரியோசனம்
     இல்லை . தாமதத்தின் முடிவு ஆபத்தானது என்பதை 
    கவனத்தில் கொண்டு விரைந்து செயல்பட பாருங்கள் .
    ஏனென்றால் எம்மிடம் இப்போ இலங்கை அரசை
     தனிமைப்படுத்தும் செயல்பாட்டை செய்ய போதிய 
    பலம் உள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட
     அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள்
    இராணுவத்தினால் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய
     மெதவல தெரிவித்துள்ளார்.
    இதனை வைத்து "போர்க்குறறம " காய் நகர்த்த நாங்கள்
     முதலில் ஒன்று பட வேண்டும் .
    இன்னும் ஒன்றையும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் 
    புரிந்து கொள்ள வேண்டும 
    நீங்கள் எந்த காலத்திலும் தமிழீழ மக்களது அரசியலுக்கு ,போராட்டத்திற்கு தலைமை வகிக்க முடியாது என்பது .
    நீங்கள் உதவியாகவும் ஒத்தாசை யாகவும் இருக்கலாமே 
    தவிர தேவையில்லாத கபனைக்காக (சுய லாபத்திற்காக )போராட்டத்தையும் விற்கவோ தமிழ் மக்களை திசைதிருப்பவோ வேண்டாம் என வினயமுடன் கேட்கிறேன் .
    நன்றியுடன் 
    கண்ணன்
    !






































































































    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக