புதன், 15 செப்டம்பர், 2010

நன்றி மறுஆய்வு

“கறுப்புக்கு மறுப்பு”- ரெஜியின் இரு வேறு தன்னிலை விளக்க மடல் உலா!!

ஒரு மடல்;
அனைத்துப்புலம்பெயர்ந்த‌ தமிழ் மக்களுக்கும்,
வணக்கம்.
கே.பி ரெஜியாகிய நான் இம்மடல் மூலமாக சில விளக்கங்களைக் கூறவும் தெளிவுபடுத்தவும் சிலரின் சுயநலச் செயற்பாட்டால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். நான் அமைதியாக விட்டுவிட்டால் என்மீது சுமத்தப்பட்ட பழியும் குற்றச் சாட்டுகளும் உண்மையோ என நீங்கள் கருதுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.எனவே தான் எனது சுய அறிவுக்கு எட்டியபடி  நேர்மையுடனும் சில விடயங்களை எனது மனட்சாட்சியை திறந்து  தலைவன் மீது சத்தியம் செய்து எழுதுகிறேன்.
இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நான் இங்குவதாக அனைத்துலகத் தொடர்பகத்திலிருந்து வெளியிடப்படும் “கறுப்பு” எனும் மின்னஞ்சல் ஏட்டினூடாக என்னைப் பற்றித் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. மே 18 2009க்குப் பின்பு சில காலம் இவர்களோடு இணைந்துதான் முக்கியமான வேலைகளைச் செய்தோம். குறிப்பாக கே.பி பத்மநாதனுக்கு எந்தவகையிலும் பொறுப்புப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதற்கேற்றவகையில் எங்கெல்லாம் தொடர்புகொள்ள முடியுமோ தொடர்பு கொண்டு கதைத்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சியெடுத்தும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை.
மே 18 2009க்குப் பின்பு தேசத்தின் புயல் பாலா அண்ணையின் இடத்தை தமிழ்நெற் ஜெயா அண்ணை நிரப்புவதற்காக அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து முயற்சித்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். இந்தப் போக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆகையால் முறைமுக எதிர்ப்பைத் தெரிவித்தேன். மேலும், அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் சொல்வதற்கும் செயல்படுவதற்கும்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இது தமிழ்ச்செல்வன் அண்ணை இருந்தபோதே அவருக்குக் கீழ் இருந்த துறைகளுக்கும் இவர்களுக்கும் இடையில் நிறைய பிரச்சனை இருந்தது. ஏன் சில பிரச்சனைகள் தலைவருடைய கவனத்துக்குக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அவற்றைக் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கெதிரான “கறுப்பு” மாதிரியான போக்குகள் தொடர்ந்தால் அவற்றையும் உங்களது கவனத்துக்குக் கொண்டு வருவேன். விடுதலைப் போராட்டம் இவர்களது சுயநலப் போக்குக்காகத் தொடங்கப்பட்டதொன்றல்ல.
சில‌ காலம் அனைத்துலகபிரிவினருடன் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சேர்ந்து வேலைசெய்து இருந்தாலும், தொடர்ந்தும் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்குத் துணைபோக இணங்காத காரணத்தால்தான் இந்தியாவோடு முடிச்சுப்போட்டு எனக்கெதிரான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் எனது தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாக வெளியிட்ட ஒலி வடிவ இணைப்பு உண்மையில் ஸ்கைப்பில் செயல்குழு கூட்டத்தின்போது உரையாடியது. அக்கூட்டத்தில் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த  கலையழகனும் இருந்தார். அவர்தான் இந்த உரையாடலைப் பதிவு செய்யும் நாதாரி வேலையைச் செய்துள்ளார். நானும் அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்துள்ளேன். தேவைப்பட்டால் அனைத்துலகத் தொடர்பகத்தை நாறடிப்பதற்காக வெளியிடுவேன். தொழில்நுட்பம் இவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என நினைக்கிறார்கள் போலும்.
உண்மையில் இவர்கள் குறிப்பிடு சங்கதி, பதிவு, ஈழமுரசு போன்றவை தமிழீழ விடுதலைக்கான ஊடகத் தர்மத்தோடா செயல்படுகிறது? யாரும் வரலாம் யாரும் போகலாம் போன்ற விபச்சார விடுதிபோன்றல்லவா தற்போதைய ஊடகங்களின் செல்பாடு உள்ளது?
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய பணி நிமிர்த்தமாகவே மலேசியாவிலிருந்து பிரித்தானியா வந்தேன். நாட்டில் முறுகல் நிலை உருவாகியதால் இங்கிருந்தவாறே எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்தேன். எனக்கெதிரான முறைப்பாடுகள் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்தவர்களால் தலைமைக்குக் கொடுக்கப்பட்டது என்பதும் தலைமை என்மீது கோபத்தில் இருந்தது என்பதையும் அறிவேன். நேரம் வரும்போது நேரில் சென்று விளக்கலாம் என எண்ணியிருந்தேன். கொழும்பிலும் மற்ற நாடுகளிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடை செய்யப்பட்டதற்கு அனைத்துலகத் தொடர்பகம் பின்னணியில் இருந்திருக்கலாம் என இப்போது எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் நிதிச் சேகரிப்புக்கான நல்ல திட்டங்களைப் போட்டு நாம் செயல்படத் தொங்கியதால், தங்களிடம் ஒரு திட்டமும் இல்லாமல், நாட்டிலிருந்து நிதிதொடர்பாக வந்த கேள்விகளுக்கு பதில்கூற முடியாததால்தான் இவ்வாறு செய்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதில் மக்களாகிய நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். “கறுப்பு”கள் குறிப்பிடுவது போன்று இன்ரர்போலின் பிடியாணையை இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியால்  எப்படி நிறுத்த முடியும்? அறிவுள்ளவர்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.எனக்கு பிடியாணையை பிறப்பித்தவர்கள் சிறிலங்கா அரசு .எனக்கு சிறிலங்கா பிடியாணை பிறபித்த காலத்திலேயே நான் பிரித்தானியாவில் எனது புகலிடக்கோரிக்கையை பராமரித்து வந்த சட்டத்தரணிகள் மூலமாக எதிர்கொண்டேன். பின்னர்  6மாதங்களுக்கு முன் இன்ரபோலிடம் இதனை சிறிலங்கா அரசு  பாரம் கொடுத்திருந்த போது தனியான பாரிஸ்டர்களின் உதவியை நாடினேன்.பின் பிரித்தானியாவிலேயே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மூலமாகத்தான் ஓரளவு  நிறுத்த முடிந்தது. எனினும் எனது  பாதுகாப்புக்கான சாத்தியங்கள் முற்றுப்பெறவில்லை. இதற்காக பிரித்தானியாப் பணம் எவ்வளவு செலவு செய்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
இவர்கள் குறிப்பிடுவது போன்று நாட்டிலிருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் அங்கு போகக்கூடிய ஏதுநிலை இருக்கவில்லை.இந்த இடத்தில் இவர்களின் முரண் நிலை வெளிப்படையாக எல்லோரும் புரிந்திருப்பீர்கள். இப்போதும் பிரித்தானியா உள்துறை திணைக்களத்தால் எனது கடவுச்சீட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.
வணங்காமண் கதை பெரிது என்பதாலும் பெருமளவான மக்களின் பணம் தொடர்புடையது என்பதாலும் இப்போதைக்கு எனது கருத்தை உங்களுக்குத் தருவதற்கு விரும்பவில்லை. அதற்கான நேரம் வரும்போது தருவேன்.
எனது மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பது உண்மை. கணவன் அப்பா என்கிற முறையில் அவர்களைப் பராமரிக்கவேண்டியது எனது கடமை. இவர்கள் கூறுவதுபோன்று அவர்கள் 2008 ஆம் ஆண்டு வன்னியிலிருந்து வெளியேறவில்லை.2005 ஆண்டு நான் பிரித்தானியா வந்த பின்பு அவர்களை என்னிடம் அனுப்பிவைக்க முடியுமா என தமிழ்ச்செல்வன் அண்ணாவிடம் கேட்டேன். அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இணங்கி அவரே சில ஏற்பாடுகளை செய்து  தமிழ் நாட்டுக்கு அனுப்பியும் வைத்தார். தமிழ்நாட்டி அவர்கள் இரண்டு வருடம் இருந்தார்கள். 2007 ஆம் ஆண்டுதான் அவர்களை அங்கிருந்து முகவர் மூலமாக நான் இருக்கும் இடத்துக்கு எடுப்பதற்கு முனைந்தேன். ஆனால் முகவர் என்னை ஏமாற்றி விட்டார். அதில் பெருந்தொகைப் பணம் வீணானதுதான் மிச்சம் .இன்னும் எனது மனைவி குழந்தைகள் என்னோடு இணையவில்லை. இப்போது ஓரளவு பாதுகாப்பான  நாடொன்றில் பிரச்சனையில்லாமல் இருக்கிறார்கள்.
அனைத்துலகத் தொடர்பகத்தார் கூறுவது போன்று எனது கட்டுப்பாட்டின் கீழ் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும், கடைகளும் பிரித்தானியாவில் இயங்குவது உண்மைதான். ஆனால் இவை எனது சொந்த சொத்தல்ல. எல்லாமே அமைப்பினுடையது. இவைகள் தொடங்குவதற்கு தலைவர்தான்தான் பெருந்தொகைப் பணம் ஒழுங்கு செய்து கொடுத்தார். தலைவர் வெளிவரும்போது எல்லாவற்றுக்குமான கணக்குகளைக் காட்டுவேன். இதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கியல் பொறிமுறை கூட அமைப்பின் நம்பிக்கைக்குரியவர்களின் பராமரிப்பில் தான் உள்ளது. நான் கூட தனிப்பட்ட ரீதியில் வேலைவாய்ப்புக்காக தேடித்திரிகிறேன். இது இங்கு பிரித்தானியாவில் பலருக்கு தெரியும். இங்கு நான் வேலை செய்வதற்குரிய சரியான ஆவணம் இல்லாத நிலையில் இருக்கிறேன்.
எனக்கும் கேபி.பத்மநாதனுக்கும் இடையில் தொடர்பு  என்றும்; அண்மையில் பல்வேறு நாடுகளில் இருந்து சென்றவர்களை கேபியிடம் அனுப்பி சந்திக்க வைத்ததுக்கும் என்னை  வேண்டுமென்றே தொடர்பு படுத்தியுள்ளனர். எனக்கும் கேபி. பத்மநாதனுக்கும்  சிறிதளவும் ஒத்துவராது என்பது நெடியோன் நன்கு அறிவார். கேபி. பத்மநாதன் செயற்குழுவை பொறுப்பெடுத்து நடத்த முற்பட்ட வேளையில் என்னுடன் மோசமாகவே கதைத்ததை பலரும் அறிவர்.
ஒரு கட்டத்தில் கேபி எல்லோரும் கொன்பிரன்ஸ்சில் லைனில் நின்றபோது ” டேய் ரெஜி  நீ தான் எல்லாக்குழப்பத்துக்கும் காரணம். டொக்ரர் மூர்த்தியையும் நீ தான் குழப்பின நீ “  என்றும்  “உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ரெஜியும்; நெடியோனும் விட்டுவிட்டு  போங்கோடா” என்று  சொன்னவருடன்  என்னை  தொடர்புபடுத்துவதில் உள் நோக்கமும் சதியும் தான் கலந்துள்ளது.
இப்போதைக்கு கறுப்பின் குற்றச் சாட்டுகளுக்கான பதிலை மக்களாகிய உங்களுக்குத் தந்துள்ளேன். அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்தோர் என்மீதான தனிப்பட்ட குற்றச் சாட்டுக்களை நிறுத்துவார்கள் என நினைக்கிறேன். என்னை மாசுபடுத்துவதாக  எண்ணி தங்களை தாங்களே  ஏமாற்றுகிறார்கள். இனியும் தொடர்வார்களாயின் அவர்களுடைய கள்ளவேலைகளையும் நரித்திட்டங்களையும் உங்களுக்கு மடல் மூலமாக அறியத் தருவேன்.
இப்படிக்கு உண்மையுடன்;
கா. பிரேமரெஜி
த.பு.க நிறைவேற்றுப் பணிப்பாளர்.
மற்றது;
அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே,
வணக்கம்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர்.
கூடுதலாக பக்கச்சார்புகள், தன்நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே.
நான் எந்தவொரு கட்டத்திலும் சிங்கள அரசின் அல்லது அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படவில்லை அவ்வாறான தேவை எனக்கு இல்லை. அதே நேரம் பொது மக்களின் தேவை கருதி பல நாடுகளுடன் பல உதவி அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டிய சூழல் என்னைப் பொறுத்தவரை  உள்ளது.
எமது போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள் எமக்கான பாதையினை, கடமையினை தெளிவாகக் காட்டியுள்ளன. வரலாறு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் நான் தமிழர் தலைமைக்குப் பதில் கூறும் வகையிலும், தமிழ் பேசும் பொது மக்களினால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏன் பொதுமக்களுக்கும் கூட பதில் கூறும் வகையிலேயே என் செயற்பாடுகள் இருக்கும்.
என் சார்ந்த கருத்துக்களை ஒரு தலைப்பட்சமாக எழுதுவோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நான் கூறுவது என்னவெனில் இணையத் தளங்களில் என் சார்ந்த செய்திகளை வெளியிட்டும் பின்னர் அதற்கு நான் பதில் அளிப்பதும் போதுமானதல்ல. பிரச்சினகளை நியாயபூர்வமாகவும் வெளிப்படையாகவும் அணுகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்களால் அல்லது தற்போது புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற மக்கள் கட்டமைப்புக்களான மக்கள் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், புத்திஜீவிகள், உலகத் தமிழர் பேரவை, அமைப்பு செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள், கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் விசாரணைக்குழுவை அமையுங்கள்.
இவ்வாறு அமைக்கப்படும் குழு என்னை வெளிப்படையாக கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்கட்டும். நான் முழு அளவில் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணைகளின் முடிவில் தவறுகள் இருந்தால் நான் பகிரங்கமாகப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அல்லது அதற்கான தண்டனைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அது எத்தகைய தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.
நான் எந்தவொரு கட்டத்திலும் ஓடி ஒழியப்போவதும் இல்லை. அல்லது தவறுகளை மறைப்பதற்காகவோ என்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவோ எம் இலட்சியத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளிடம் ஓடிவிடப்போவதும் இல்லை.
இந்த விசாரணைக்குழு எம் சமுதாயத்தில் பொது வேலைகளில் ஈடுபடுவோர்க்கு ஓர் முன்னுதாரணமாகவும்  இருக்கும். தயவு செய்து இதனை செய்யுங்கள். நான் எம் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், எம் மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானவனே தவிர என் குடும்பத்தாருக்கு சொந்தமானவன் அல்ல. ஆகவே எம் சமூகத்திற்கு என்னை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் உரிமையும் கடமையும் உண்டு. இது என் வாக்கு மூலம். இதனைச் சட்ட ரீதியாக எனது சட்டவாளர் ஊடாகவும் மெய்ப்பித்து நான் விரைவில் பொதுமக்களிடம் ஒப்புவிப்பேன்.
நன்றி வணக்கம்
ஒப்பம்
கா. பிரேம்ரெஜி (ரெஜி)
regi.itro@gmail.com

No Responses Yet to ““கறுப்புக்கு மறுப்பு”- ரெஜியின் இரு வேறு தன்னிலை விளக்க மடல் உலா!!”

  1. கண்ணன் Says: Your comment is awaiting moderation.
    அன்பின் ரெஜி அவர்களே .அப்போ நீங்கள் தலைவரது சாவினை ஏற்றுக்கொள்ளவில்லை.தலைமை வந்தால் தான் நீங்கள் கணக்கு காட்டுவன் என்று கரடி விட பாக்கிரீர்கள் .சரி கிடக்கட்டும் .
    KP க்கு எதற்காக நீங்களும் நெடியவனும் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தீர்கள் .அதனையும் நீங்கள் விளக்கவேண்டும் .அவர் ஆற்றிய பணியில் நீங்கள் என்ன தவறு கண்டு பிடித்தீர்கள் ?எல்லா தமிழ் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து உங்களை விசாரிக்க சொல்லும் நீங்கள் மற்றும் நெடியவன் ஆகியோர் தானே இவ அமைப்புகளை பிரித்தாண்டீர்கள் ??நீங்கள் தானே வினை விதைத்தீர்கள் ?சரி உங்களுக்கும் நெடியவனுக்கும் என்ன பிரச்சனை? நீங்கள் மலேசியா போய் லண்டன் போனீர்கள் KPஎத்தனை வருடம் வெளிநாடுகளில் நின்றவர் போய் லண்டனில் வசிக்கவில்லையே?நீங்கள் அப்ப கணக்கு காட்ட மாட்டிர்கள் என்பது தெளிவு ?சரி உங்கட தம்பி ஆட்கள் வெளிநாட்டில நிக்கினம் யார் காசு கொடுத்தது?யாருடைய காசு?நாங்கள் பொதுசனம் கேட்கலாம் தானே ?எனக்கொரு சந்தேகம் நீங்கள் தான் KP காட்டி கொடுத்தீர்க்கலா?அது சரி kp துரோகி விநாயகம் துரோகி உருத்திரகுமாரன் துரோகி இப்ப நீங்க துரோகி ஜெகத்கச்பார் துரோகி எரிக்சொல்கஐம் துரோகி இப்படிநீண்டுசெல்லும் பட்டியலில் பிரபாகரனும் வருவாரோ???{நெடியவனை சேர்க்கல அவர்ட்ட ஆட்கள் தானே கொடுக்கினம் போல }நீங்கள் எல்லாம் ……………………………………
     தலைவர் வெளிவரும்போது எல்லாவற்றுக்குமான கணக்குகளைக் காட்டுவேன். இதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கியல் பொறிமுறை கூட நான் கூட தனிப்பட்ட ரீதியில் வேலைவாய்ப்புக்காக தேடித்திரிகிறேன். இது இங்கு பிரித்தானியாவில் பலருக்கு தெரியும். இங்கு நான் வேலை செய்வதற்குரிய சரியான ஆவணம் இல்லாத நிலையில் இருக்கிறேன்.
    பிரித்தானியாப் பணம் எவ்வளவு செலவு செய்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
    முகவர் என்னை ஏமாற்றி விட்டார். அதில் பெருந்தொகைப் பணம் வீணானதுதான் மிச்சம் .இன்னும் எனது மனைவி குழந்தைகள் என்னோடு இணையவில்லை. இப்போது ஓரளவு பாதுகாப்பான நாடொன்றில் பிரச்சனையில்லாமல் இருக்கிறார்கள்.
    ராசா ரெஜி நீங்கள் வேலை இல்லாமல் இருக்கிறியள் .உதுக்கேல்லாம் என்கால காசு?
    எனக்கும் கேபி. பத்மநாதனுக்கும் சிறிதளவும் ஒத்துவராது என்பது நெடியோன் நன்கு அறிவார்.
    கே.பி பத்மநாதனுக்கு எந்தவகையிலும் பொறுப்புப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதற்கேற்றவகையில் எங்கெல்லாம் தொடர்புகொள்ள முடியுமோ தொடர்பு கொண்டு கதைத்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சியெடுத்தும்……….
    நான் கேட்கிறன் உண்மைய சொல்லுன்கோ KPபிடிபடேக்க கடைசியா போன்ல கதைத்தவராம் அவர் உங்கட ஆள் தானே ???????//
  2. கண்ணன் Says: Your comment is awaiting moderation.
    . தலைவர் வெளிவரும்போது எல்லாவற்றுக்குமான கணக்குகளைக் காட்டுவேன். இதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கியல் பொறிமுறை கூட நான் கூட தனிப்பட்ட ரீதியில் வேலைவாய்ப்புக்காக தேடித்திரிகிறேன். இது இங்கு பிரித்தானியாவில் பலருக்கு தெரியும். இங்கு நான் வேலை செய்வதற்குரிய சரியான ஆவணம் இல்லாத நிலையில் இருக்கிறேன்.
    பிரித்தானியாப் பணம் எவ்வளவு செலவு செய்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.
    முகவர் என்னை ஏமாற்றி விட்டார். அதில் பெருந்தொகைப் பணம் வீணானதுதான் மிச்சம் .இன்னும் எனது மனைவி குழந்தைகள் என்னோடு இணையவில்லை. இப்போது ஓரளவு பாதுகாப்பான நாடொன்றில் பிரச்சனையில்லாமல் இருக்கிறார்கள்.
    ராசா ரெஜி நீங்கள் வேலை இல்லாமல் இருக்கிறியள் .உதுக்கேல்லாம் என்கால காசு?
    எனக்கும் கேபி. பத்மநாதனுக்கும் சிறிதளவும் ஒத்துவராது என்பது நெடியோன் நன்கு அறிவார்.
    கே.பி பத்மநாதனுக்கு எந்தவகையிலும் பொறுப்புப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதற்கேற்றவகையில் எங்கெல்லாம் தொடர்புகொள்ள முடியுமோ தொடர்பு கொண்டு கதைத்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சியெடுத்தும்……….
    நான் கேட்கிறன் உண்மைய சொல்லுன்கோ KPபிடிபடேக்க கடைசியா போன்ல கதைத்தவராம் அவர் உங்கட ஆள் தானே ???????//

Leave a Reply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக