வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஏன்????????

இன்று காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் மனிதவளமேம்பாட்டளர் சொன்ன கருத்தொன்று என்னை கவர்ந்தது .ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு 5-6தடவை கேள்விகள் கேட்க வேண்டும் என்று ,.அந்த கேள்விகள் எல்லாம்" ஏன்"?என்ற கேள்வி தான் .
நானும் எமது ஆயுதப்போராட்டம் ஏன்தோற்கடிக்கப்பட்டது என என்னையே கேட்டேன்? அதற்கு மக்கள் இறுதி நேரத்தில் புலிகளுடன் இல்லை 
ஏன் இல்லை ? 
மக்கள் புலிகளது ஆள் பிடிப்பினாலும் அவர்களது நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் போல இருந்ததாலும் 
ஏன் அப்படி நடந்தது ?
அவர்கள் தலைவரை வெளியில் பாதுகாப்பு என்ற போர்வையில் விடாது எல்லாவற்றயும் செய்தனர் .
ஏன் தலைவர் செய்யவிட்டார்?
தலைவர் காக்கா பிடிப்பவர்களை கடைசிவரை நம்பிக்கொண்டிருந்தார் போராளிகளை மக்களுக்காக வாழ்பவர்களை அவர் நெருங்கவில்லை அல்லாது விடில் நெருங்க விடவில்லை . 
 ஏன் அவ்வாறு நடந்தது?
அவர்கள் (காக்கா பிடிப்பவர்கல௦)சொல்லிக்கொண்டிருந்தார்கள் அயுதம் வரும் 
கப்பல் வரும்  கடைசியில் ஒன்று வரவில்லை 
தமிழர் போராட்டத்திற்கு" பாடை" தான் வந்தது
பிரபாகரன் யாரையுமே நம்பாதபோது வெல்லவும் ,வாழவும் முடிந்தது .எப்போ ஜால்ராக்களை நம்பினாரோ  அப்போது அழிவில் கொண்டுசென்று விட்டது 
தங்கள் கருத்தென்ன?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக