வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இது KPக்கு வக்காலத்து அல்ல

ரசின் திறைசேரியை நிரப்பும் கே.பி: புதிய தகவல்
25 August, 2010 by admin
குமரன் பத்மநாதன் நடாத்தும் இணையத்தளமான நெரெடோவில், காசுக் கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நிதியுதவிகள் எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றன என்பது குறித்தோ, அல்லது எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டது என்பது குறித்தோ வெளியிடாமல், வெறுமனவே செலவீனங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் வட்டக்கச்சி பாடசாலை ஒன்றிக்கு வினாத்தாள் அச்சடிக்க ரூபா 15,000 கொடுக்கப்பட்டதாகவும், முகாமில் உள்ள மாணவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணீசும், தேனீரும் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அரச கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைக்கு அரசாங்கமே வினாத் தாள்கள் அச்சடிக்க நிதி வழங்கவேண்டும் அத்தோடு தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்காக, உலக உணவுத் திட்டம் பல பொருட்களை வழங்குவதோடு, சமீபத்தில் உலக வங்கியும், பல அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி புரிந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேனீரும் பணீசும் வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கிக்கொடுத்தால், அவை படிப்பிற்கு உபயோகமாக இருந்திருக்கும். சில புலம்பெயர் மக்கள் கே.பியை நம்பி, அவர் புனர்வாழ்விற்காக அர்ப்பணிப்போடு ஈடுபடுவார் என நினைத்து கொடுக்கப்பட்ட நிதி இவ்வாறு வீணடிக்கப்படுவதோடு, அரச செலவீனங்களைக் குறைக்கவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிறது.

அரசியல் எதுவும் வேண்டாம், நாம் புனர்வாழ்விலும், போராளிகளின் விடுதலையிலுமே கவனம் செலுத்தவுள்ளோம் எனக் கூறிவந்த கே.பி தற்போது அநாகரீகமான அரசியலிலும் இறங்கி, அனைவரையும் அரவணைத்துச் செல்லாது எதிர்ப்பையே சம்பாதித்துவருகிறார். செயல்திறனற்ற, தொலைநோக்கு பார்வையற்ற இவரது செயல்கள் இவர் பின்னால் செல்லும் மக்களையும் குருடர்கள் ஆக்கும் என்பதில் ஐயமில்லை.



மேலே தரப்பட்ட செய்தி எமது தேசிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது .வாசிப்பவன் எல்லாம் முட்டாள்கள்  தானே .பாருங்கள் 
தவனைப்பரிட்சைகள் எல்லாம் பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் சேகரித்து தான் நடத்தப்படுகிறது .அந்த சுமையினை NERDO ஏற்று கொண்டுள்ளது அவ்வளவு தான் .இது எப்படி வீணடிக்கப்பட்ட பணமாகும்?

மற்றது 477 மாணவர்களும் முன்னாள் போரளிகள் .அரசு இடம்பெயர்ந்த மக்களுக்கே எதுவும் செய்யல என்பது இவர்களுக்கு தெரியாததல்ல .அப்போ எப்படி போராளிகளுக்கு செயும் ?அவர்களுக்கு பணிஸ் கொடுத்தால் என்ன தவறு .?KP 
 கே.பியை நம்பி, அவர் புனர்வாழ்விற்காக அர்ப்பணிப்போடு ஈடுபடுவார் என நினைத்து கொடுக்கப்பட்ட நிதி இவ்வாறு வீணடிக்கப்படுவதோடு, அரச செலவீனங்களைகுறைக்கவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிறதுஎன 
குறிப்பிட பட்டுள்ளது நான் கேட்கிறேன் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளிநாடுகளில் முதலிடப்பட்ட  பணம் எல்லாம் எங்கே ? .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக