புதன், 4 ஆகஸ்ட், 2010

             நாங்கள் எங்கே நிற்கிறோம் ?
2009 மே  தமிழ் மக்களுக்கு ஒரு இருண்ட மாதம் .அது தமிழ் மக்களை திக்கு தெரியாத காட்டுக்குள் நிறுத்திவிட்டுள்ளது .நாங்கள் நடைபிணமாகும் நிலைக்கு சென்றதட்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமே தவிர ,விடுதலைப்புலிகள் தான் காரணமல்ல .இங்கே விடுதலைப்புலிகள் அழ்க்கப்பட்டர்களே ,தவிர தோற்கடிக்கப்படவில்லை ,இதற்கெல்லாம் காரணம் நாமே தவிர வேறோவரும் இல்லை.வெளிநாட்டுவாழ் தமிழர்கள் இறுதிநேரத்தில் கத்தி குளறி கூப்பாடு போட்டு என்ன பிரியோசனம் ?ஒன்றுமே நடக்கவில்லை .எங்களது செய்திகள் எங்களது வலைத்தளங்களில் தான் வேகவேகமாக வந்ததே தவிர உலக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .
இதற்கு ஒரு உதாரணம் BBC போன்ற ஊடகங்களில் வந்த செய்திகளினால் தான் வியட்நாமில் அமரிக்க சண்டை நிறுத்த காரணமானது
chanal 4 ல கூட அவர்களது முயற்சியால் தான் யுத்த குற்றம் வெளிக்கொணரப்பட்டதே தவிர எங்களது ஆட்கள் ஒரு துரும்பையும் அசைக்கல .
தந்தை செல்வா அரசியல் ரீதியாக செய்த ஒரு முயற்சியினை தலைவர் பிரபாகரன் உலகெங்கும் தமிழனுக்கு உள்ள பிரச்சனையினை வெளிக்கொணர்ந்தார் .அவர் தனது கடமையினை சரிவர ஆற்றியுள்ளர் .இனி நாங்கள் என்ன செய்யபோகிறோம் ?இனியோருவர் தலைவராக வரும்வரை காத்திருப்பதா?இல்லாவிடில் தொடர்ந்து நாங்கள் ஒன்று பட்டு முயற்சி  செய்வதா?   
நாங்கள் இப்போது நாட்டிலும் வெளியிலும் எவ்வாறு செயற்படலாம் ?நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,வெளியே நாடுகடந்த தமிழீழ அரசும் இணைந்து வேலை செய்யணும் என நான் கருதுகிறேன் .அதே நேரத்தில் இப்போது தனிநாட்டினை பிரித்துத்தா எனவும் கேட்க  முடியாது ,நாங்கள் இலக்கு நோக்கி நகரவும் வேண்டும் ,அதனை எடுத்தோம் கவிழ்த்தோம் எனவும் கேட்க கூடாது ,
தலைவரையும் விடுதலைப்புலிகளையும் காட்டி பூச்சாண்டி செய்பவர்கள் சம்மந்தமாக குறிப்பிட்ட தரப்புக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை .அவர்கள் தங்கள்
வருமானக்கணக்கினை பார்க்கட்டும் .நான் எதற்காக அவர்களுடன் முரண்படுகிறேன் என்றால் ,தமிழ் மக்கள் இப்போ வலைத்தளங்களை பார்த்தால் தெரிந்து கொள்வார்கள் .
போர் குற்ற சாட்டுக்களை வேகமாக முன்வைத்து அதற்கான தீர்வாக இலங்கை தீவை தனிமைப்படுத்துங்கள் .அதன் முலம நாங்கள் எங்களது இலக்கினை நெருன்குவோம் .
எங்களுக்கு தீர்வை தரச்சொல்லி உலக நாடுகளின் நெஞ்சங்களில் நின்று கேட்போம் .அவர்கள் சமஷ்டி தீர்வுக்கு எப்படியும் வருவார்கள் .சிங்களம் அதற்கு ஒருநாளும் வராது .அப்போ நாங்கள் எங்களது இலக்கினை மேலும் நேருங்குவோம் .எங்கள தலைவர் போல் நாங்களும் சுயநலம் துறந்து செயல்படுவோம் ,ஒன்றாகி
கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக