நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? | 1 | |
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? | 2 |
"இது ஒரு போர் குற்றங்கள் ,எமது வரலாற்று ஆவணங்கள் சேர்க்கும் ஒரு முயற்சி .முடிந்தவரை எனக்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் இப்போதும், எப்போதும் பொல பிரிந்தே நிற்கும் இந்த நேரத்தில் , இந்த மெல்லிய குரலால் ஒன்றிணைவோம் என உரத்து சொல்லுவோம் . இங்கே தமிழ் உணர்வாளர்கள் ,பேரறிவாளர்கள், தமிழீழ விடுதலை விரும்பிகள் ,விடுதலைப்புலிகளில் இருந்து ஒதுங்கி நின்றும் துரோகிகள் என ஒதுக்கப்பட்டும் ,எமது விடுதலைக்காய் உழைக்க விரும்பும் அனைவரும் இங்கே பதிவினை செயுங்கள் .... இது ஒரு சிறு முயற்சி" . நன்றி
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
பாரதியார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக