ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

முந்துபவன் வெல்வான்

                   முந்துபவன் வெல்வான்
  எனது கருத்தினை அவசரமாக எழுதுகிறேன் ,பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் .நாங்கள் இப்போது மிக சரியான தருணத்தில் பிழையாக நிக்கிறோம் ,சிங்களம் மிகவும் குழம்பியும் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தேருவிலும்  நிக்கிறோம் .எங்களுக்கு இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை .இப்போ நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் சரி என நினைக்கிறேன் .
  எங்களது ஆயுதப்போராட்டம் அடக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையில் வெளிநாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசும்,  ஈழத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிமிர்ந்து நிற்பது ஒரு தெம்பாக இருந்தது ,ஆனால் எதனையும் இவர்களால் இதுவரை செய்ய முடியவில்லை ,உதாரணமாக மாவீரர் துயிலும் இல்லங்கள் வேரோடு தடயம் இல்லாது அலிக்கப்படும்  போது இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை ,இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் ,
 இப்போ நாங்கள் செய்ய வேண்டியவைகளை பாப்போம்
நாடு கடந்த தமிழீழ அரசும் வெளிநாடுகளில் வாழும் ஏனைய தமிழ் அமைப்புகளும் முதலில் அந்தந்த நாடுகளில் உள்ள அந்த நாட்டவர்களுக்கு ,எமது நாட்டில் நடந்த படுகொலைகள் சம்மந்தமான விபரங்களை சிறிய கையேடு வடிவில் கொடுத்து அவர்களை தெளிவு படுத்துங்கள் ,இது உடனடியாக செய்ய வேண்டும் ,பிரித்தானியாவில் இதனை மிகவும் வேகமாகவும் எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையிலும் செய்ய வேண்டும் ,ஏனென்டால  அவர்களுக்கு இந்த பிரச்சனையில் 100% பங்கு உண்டு ,அவர்களது மனட்சாட்சி  தட்டி எழுப்ப வேண்டும்
 முதலில் உலக நாடுகளே  எங்களது நாட்டில் நடந்த இன அழிப்புக்கு தீர்வு தாருங்கள் யுத்த குட்டங்களுக்கு (war craim)நீதி வழங்குங்கள் ,என உரத்து பிரச்சாரம் செய்யுங்கள் ,இங்கே தான் சிக்குவார்கள் எங்களது எதிரிகள் ,நான் நினைக்கிறேன் உலகில் உள்ள 190 நாடுகளில் இவர்களுக்கு வழக்கு போட முடியும் ,(சிறந்த வக்கீல்களை கலந்துரையாடுங்கள் )யுத்த குட்டமும் இன அழிப்பும் உறுதிப்படுத்த முடியும் ,அவ்வாறு முடிந்த பின் எங்களது சிங்கள சகோதரம் பாவம் இறுக்கம் ஒன்றுக்குள் முகம் கொடுக்கும் கண்டிப்பாக ,உலகம் எமது பிரச்னையை விளங்கும் ,இந்த தருணத்தில்  இங்கே கண்டிப்பாக ஆட்சி மாற்றம  ஒண்டு சிங்கள சமூகத்தாலே கொண்டுவரப்படும் .விலை வாசி உயரும்,சர்வதேசம் எமது பக்கம் நிட்காவிட்டலும் நியாயத்தின் பக்கம் நிக்கும் (அதற்கு தான் வெளிநாட்டு பிரச்சாரம் உதவும் )
இந்த நேரத்தில் ஒரு உதாரணம்  வியட்நாமில் அமெரிக்க ராணுவம் செய்த அட்டூழியம் ஊடகங்களில் வந்தமை தான் அந்த போரையே மார்ட்டி  அமைத்தன ,
இரண்டாவது தான் மிக முக்கியமானதும் உணர்வுகளை காயப்படுத்தக்கூடியதும் ஆகும் ,இது ஒரு இணைந்த வேலைத்திட்டமாகும் ,TNA ஈழத்திலும் சாதகமான வழிகளில் வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுய ஆட்சி கேட்டு போராடவேண்டும் ,சம நேரத்தில் நாடு கடந்த அரசும் சமஷ்டி கேட்டு பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டும் .நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ , தனிநாடு இந்நேரத்தில் கேட்ட்க கூடாது ,இதற்குள் பிராந்திய பிரச்சனை வந்துவிடும் .
எங்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் என்ற மாநில  சுய ஆட்சி (சமஷ்டி )வேண்டும் என போராட மற்ற விடையங்கள் தானாக அமையும் ,தயவு செய்து சிந்தித்து வேகமாக செயற்படுங்கள் ,இதற்கு சார்பான இன்னும் ஒரு விடையம் உள்ளது ,பின்னர் எழுதுகிறேன் ,   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக