சனி, 28 ஆகஸ்ட், 2010

கருத்துகள்

இச்சிறுகுறிப்புக்கு என்ன தலைப்பு வைப்பது?
ராஜீவ் கொலையும் தமிழனின் அழிவும் ஒரு நேர்கோட்டில் வருகிறதா? ஆம் எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் கோட்டை விட்டும் தனிமனித காக்கா பிடித்தலுக்காக  பிழையாக பிரபாகரனை தூண்டிவிட்டதும் எங்களது இனம் இறைவனை இறைஞ்ச வேண்டயுள்ளது.
நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ காலம் பிரபாகரனை எமக்கு தலைவனாக தந்தது .நாங்கள் அவரிடம் நல்ல பேர் எடுப்பதற்காக அவரை பிழையாக வழிநடத்தி வந்திருக்கிறோம் .அண்மையில் நான் ஒருவரிடம் பேசும் பொது அவர் சொன்னது பிரபாகரன் தான் எல்லாவற்றையும் முடிவெடுத்தது என்ற ரீதியில் கருத்து கூறினார் .அதனை நான் ஓரளவு ஏற்று கொண்டாலும் முழுமையாக கொள்ள முடியாது .ஏனென்றால் பிரபாகரனை பாதுகாப்பதாக குறிக்கொண்டு அவரை ஒரு வளையத்துக்குள் வைத்துக்கொண்டு ,அவருக்கு தகவல்கள் செல்லாமலே அடுத்த மட்டத்தினர் முடிவெடுத்ததும் காரணம் என கருதுகிறேன் .
நாங்கள் இந்தியாவை பகைத்தது மற்றது .ராஜீவை கொன்றது இருக்கட்டும் .அதன் பிறகு அவர்களுடன் உறவு மேம்பட எதாவது செய்தோமா ?தமிழ் நாட்டிலாவது ஆளும் கூட்டணியுடன் நல்லுறவு ஏறபடுத்திநோமா?DMK,ADMK இரண்டிலும் எமக்கு ஆட்கள் இல்லை .ம.தி.மு.க. (இப்ப அது மாநில கட்சி அல்ல )
உறவு எதற்கு ?அவர்கள் தான் இன்று வரை எமக்காக கதைக்கிரார்கள்.அது வேறு விடயம் .நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம் தனிமனிதர்களை துதிபாடுவதற்காக அல்ல.
உதாரணாமாக சமாதான காலத்தில் குரவர்களை கூட புளியன்குளத்துக்கு அப்பால் அனுமதிக்கல (பாதுகாக்கப்பட்ட வலையம் போங்க ....)சரி நாம் இந்திய உளவு பிரிவுதான் குறவர் வேடத்தில் வந்தது என்று வைப்போம் .அவன் என்ன அறிவிப்பான் தனது மேலதிகாரிக்கு ?எந்நேரமும் புலிகள் இந்திய எதிர்ப்பு கடைப்பிடிக்கிறார்கள் என்று .அப்போ அவன் எம்மை எதிரியாக பார்க்காமல் நண்பனாகவா பார்ப்பான் ?
சரி நடந்தது நடந்து போச்சு எங்க படித்தவர்கள் ஏதாவது ராஜதந்திரமா நகர்வார்கள் என்று பார்த்தால் கேலிக்குத்தா  இருக்கு .அவர்களின் நடவடிக்கை எதோ பிரபாகரன் மட்டும் தான் தமிழீழம் கேட்டவர் போலவும் தங்களுக்கும் அதுக்கும் தொடர்பிலலை போலவும் அவர் இல்லாவிட்டால் தமிழீழ தேரை கட்டி இழுக்க முடியாதென்று தடுமாறுகிறார்கள் .இப்ப உள்ள நிலைல தனி நாடு வேண்டாம் (.என்ன செய்தும் எவனும் தரப்போரதில்லை)சமஷ்டி சரி அதுக்காக முயற்சி செய்யலாம் தானே ? இப்ப உவைக்குள்ள பிரச்சனை யார் தமிழீழ இலட்சியத்தை   கைவிடல என்பது தானே தவிர எங்களது மக்கள் நடுத்தெருவில நிக்கிறது அல்ல.  .
மக்களே அறிவு ஜீவிகளே தயவு செய்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு  பக்கம் தேரை இழுக்காமல் தமிழீழ தேரேன்றில்லாது மக்களின் சுபிட்ச்சமான எதிர்காலத்திற்காக மறைந்தவர்களது ஆத்மாசாந்திக்காக எல்லோரும் ஒருபக்கமாக உலகத்தின் நெளிவுசுளிவுகளுக்கேற்ப விழங்கி  நாங்களும் பலன்கொண்டிளுப்போம்.....
 நன்றி        
கண்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக