ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

யார நோவது?



                                   யாரை நோவது?
தலைவர், கடைசி மாவீரர் நாள் உரையில் வெளிநாடுகளில் வாழும் சந்ததிகள் இனிமேல் போராட்டத்தை தொடரவேண்டும் என்ற சாரப்பட உரை நிகழ்த்தியிருந்தார் அதாவது" இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.





அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு தெரிவித்திருந்தார்.முள்ளி வாய்க்கால் தோற்டிப்புக்கு பின்னர் இவர்கள் (நான் குறிப்பிடுபவர்கள் சேரமான்களோ அவர் சார்ந்தவரோ ஆவார் )
வடிவேல் நகைச்சுவை போல தங்களது கைகளில் போராட்டத்தை எடுத்து தாங்கள் தாங்கள் வியாபாரம் செய்ய பார்கிறார்கள் .
இவர்கள் எதற்காக தலைவரை அவரின் இருப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள் என தெரியவில்லை ,மாவீரர் கௌசல்யன் ,தமிழ்ச்செல்வன் ,ஆகியோரது மறைவுக்கு கூட அறிக்கை விட்ட ஐக்கிய நாடுகள் இவ்வளவு அழிவுக்கு இங்க கூட இல்லை .
நான் கேட்கிறேன் எமது தலைவர் உறுதியாக எப்போ வீரச்சாவடைந்தார் என உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?.சிங்களவன் திட்டமிட்டு எமது வரலாற்றை மாற்றுகிறான் .17, 18, 19 என அவன் அறிக்கை விடுகிறான் .ஆனால் எம்மால் எப்போ என உறுதியாக கூறமுடியவில்லை .அதற்கு கூட "கோத்தாவை" நம்பவேண்டி உள்ளது எங்களது "யாவாரம்"எங்கே நிற்கிறது .
பிரபாகரன் ,ஒரு கே பி ,கருணா போன்றவர்களை நம்பியா? போராட போனார்  அவர் தமிழ்மக்களை நம்பி தமிழ் மக்களுக்காக போராட போனார் .எங்களது போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்க படவில்லை அது அதற்கு முன்னரே ஆரம்பிக்கபட்டுவிட்டது .தந்தை செல்வா இலங்கைக்குள் விரிவாகியதை தலைவர் உலகெங்கும் விரிவாக்கினார் ,அவர்ஒ ரு சட்டாம்பிள்ளை மாத்திரமே .தனது கடமையினை திறம்பட செய்துள்ளார் அவ்வளவே .அவர் எம்மால் எல்லாம் செய்யமுடியும் என நிருபித்திருக்கிறார் 
நாங்கள் எதற்காக அவரது மறைவுடன் ஸ்தம்பித்து நிற்க வேண்டும்.நாங்கள் அவரை உண்மையாக விசுவாசித்தால் தொடர்ந்து முன்செல்ல வேண்டும் .எது சரி எது பிழை என்பதை காலம் தீர்மானிக்கும்.ஆனால் அது வரை காத்திருக்க முடியாது . எமக்கு நீண்ட வரலாறு உள்ளது அது வழிகாட்டும் அதன்வழி நடப்போம் .
நாங்கள் யார் மீதும் அறிக்கை போர் தொடுத்துக்கொண்டிராது ,எம்மீதே அசிங்கம் பூசாது வரலாற்றை வெற்றி கொள்ளவும்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக