செவ்வாய், 31 மே, 2011

கோத்தாவிடம் உத்தரவுகளைப் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களா ? புது ஆதாரம் !



30 May, 2011 by admin




எதி எவ்வாறு இருந்தாலும், இக் கொலைகளுக்கு இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும் எனவும், சனல் 4 வெளியிட்ட வீடியோ மிகவும் உண்மையான வீடியோ எனவும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை விசாரிக்கும் ஐ.நாவின் அதிகாரியான கிரிஸ்டொவ் ஹெய்ன்ஸ் தற்போது திட்டவட்டமாக தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த 482 பக்க அறிக்கையை எவராலும் மறுக்க முடியாத அளவு, இந்த அறிக்கை ஆதாரத்தோடு வெளியாகியுள்ளது. தமிழர்களை இலங்கை இராணுவம் எவ்வாறு ஈவிரக்கம் அற்று கொலைசெய்ததும், இறந்த பெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்திச் சிரிப்பதும், தமிழ் பெணிகளின் மானத்தோடு விளையாடுவதும், ஒரு இறந்த உடலம் என்று கூடப்பாராமல், அருவருக்கத்தக்க காமச் சொற்களை பயன்படுத்தி தமிழர்களை கேவலப்படுத்தியதையும் மானமுள்ள எந்தத் தமிழனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்.

இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் ! அங்கே எமது இளையோர்களைக் கொண்ற சிங்கள வெறியர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ! அதுவரை உலகத் தமிழர்கள் ஓயமாட்டார்கள். தற்போது நாம் இருக்கும் நிலை "சுடலை ஞானம்" என்ற நிலையாகும். புரியவில்லையா ? அதாவது யாராவது செத்துப்போனால் சுடலை சென்று அழுவதும், பின்னர் வீடு திரும்பியதும் குழித்துவிட்டு எமது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி நடந்தவற்றை மறந்து சிரித்து சல்லாபிக்கும் ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். உணர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, கொல்லப்பட்ட தமிழர்களின் நிலை இவை அனைத்தையும் நாம் மனதில் நிறித்தி எப்போதும் நீதி கிடைக்க உழைக்கவேண்டும். அதனூடாகவே விடுதலையும் கிட்டும்.


















Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 27234

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக