செவ்வாய், 31 மே, 2011

இலங்கை போர்க் குற்ற ஆதாரம் உண்மையே - ஐ.நா. நிபுணர்


இலங்கை போர்க் குற்ற ஆதாரம் உண்மையே - ஐ.நா. நிபுணர்
இலங்கை போர்க் குற்ற ஆதாரம் உண்மையே - ஐ.நா. நிபுணர்
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 01:32.59 PM GMT ]
இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களை வெளிக்கொணர்ந்த ஆதார வீடியோ உண்மையானது தான் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் நிபுணர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது, நிராயுதபாணியாக நின்ற ஆண்கள், பெண்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற படுகொலை நிகழ்வுகள் அடங்கிய விடியோக்களை அவ்வப்போது பிரிட்டனின் 'சனல் 4' வெளியிட்டு வருகின்றது.
இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை ஐ.நா.வின் தன்னிச்சையான புலனாய்வாளரும், தென்னா பிரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெயின்ஸ் ஆய்வு செய்தார்.
தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரிந்தது உண்மையே என்பது நிரூபணமானது.
இதுதொடர்பான ஆய்வறிக்கையை மனித உரிமைகள் கவுன்சிலிடம் ஹெயின்ஸ்ட் இன்று கையளித்தார்.
இதையடுத்து, ஜெனீவாவில் அடுத்த மூன்று வாரங்களுக்கு நடைபெறவுள்ள மனித உரிமைகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த ஆய்வறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக