செவ்வாய், 31 மே, 2011

இலங்கையின் போர்க்குற்றம்; சனல் 4 வெளியிட்ட காணொளிகள் உண்மையே! ஐ.நா மனித உரிமை வல்லுநர் கருத்து (ஆவணம் இணைப்பு)

இலங்கையின் போர்க்குற்றம்; சனல் 4 வெளியிட்ட காணொளிகள் உண்மையே! ஐ.நா மனித உரிமை வல்லுநர் கருத்து (ஆவணம் இணைப்பு)

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் இன்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிய போதே கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். 

இந்த காணொளிக்காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவிக்குமானால் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த காணொளிக்காட்சிகள் பொய்யானவை என்பதை சான்றிதழ் படுத்தவேண்டும். 

ஆனால் அவர்கள் இதுவரை காணொளிக்காட்சிகள் பொய் என்பதை நிரூபிக்க எந்தவொரு சான்றிதழையும் சமர்ப்பிக்கவில்லை என்று ஹெய்ன்ஸ் மேலும் தெரிவித்தார். 

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆண்டறிக்கையை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில், யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதலில் அரசாங்கப்படைகளும் விடுதலைப்புலிகளும் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளதாக நம்பத்தகுந்த சான்றுகளைக் கொண்ட குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு தனது பொறுப்புக்கூறுவது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 



இலங்கை அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். நிபுணர்குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டியது இலங்கையின் கடமையாகும். 

சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைத்து தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்ற சிபாரிசை நான் பூரணமாக ஆதரிக்கின்றேன். 

தேவையானால் அதனை சுயமாகவும் முன்னெடுக்க வேண்டும். இலங்கை தொடர்பாக முன்னர் இடம்பெற்ற பரிசீலனையினதும் உலகம் முழுவதிலுமான சண்டையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றின் பின்னணியில் இம்முக்கிய அறிக்கையில் உள்ள புதிய தகவலை ஏற்றுக் கொண்டு மனித உரிமை சபை தனது நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

UN Forensics Report on Execution Video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக