ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கனவாய்போன தமிழீழ மக்களே,இம்முறை நான் மாவீரர் நாளுக்கு முன்பாகவே உங்களுடன் சில பல விடயங்களைபகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ,அன்று திலீபன் சொன்னான் நான் வானில் இருந்து பிறக்கப்போகும் தமிழீழத்தை கண்டுகளிப்பேன் என ஆனால் அப்படித்தான் நானும் எனது மக்களையும் போராளிகளையும் மிகவும் கட்டுக்கோப்பாக வளர்த்து முள்ளிவாய்க்கால் வரை எமது ஆயுதப்போர் அடங்கும் வரை அல்லது அடக்கப்படும் வரை நினைத்திருன்தேன்.யார் கண் பட்டதோ ,எமது தேசம் எரிமலையாய் வெடித்தும் ஒன்றும் நடவாது போய் விட்டமையினை எண்ணி மிக மனம் வருந்துகிறேன் .
புலத்தில் வாழும் எம் உறவுகளே உங்களுக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் ,
எனது வலது கரமாக செயல்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு நீங்கள் சிலை அமைத்ததை இட்டு நான் புலம்காகிதம் அடைகிறேன் .
எமதியக்கம் சார்பாக நான் நன்றி சொல்கிறேன் .
என்னை நீங்க எதுக்காக மறந்துவிட்டீர்கள் என எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை .எனக்கு நீங்கள் சிலை வைக்க வேண்டாம் .எனது நினைவு தினத்தையாவது நான் நேசித்த மக்களுக்கு சொல்லுங்கோவன்.இப்ப என்ன தமிழேந்தி என்ன உங்களிடம் கணக்கு கேட்கபோராரோ ?எனது ஆத்துமா சரி அடங்க விடுன்கொவண்டாப்பா .பதினாறு வயசில மக்களுக்காக போராட போனனான் .சாகும் வரைக்கும் களத்தில தானேடாப்பா நின்டனான் .
எனக்கு உங்களால் எந்த நாட்டிலையும் சிலை வைக்கேலாது எண்டு எனக்கு தெரியும் .அதுக்கு காசும் இல்லை தானே .உந்த ப்ளாக் ஸ்போட் ட்டில  சரி போடுன்கோவன் .
நீங்கள் ஒன்றை நினயுங்கோ இனி எவனும் தலைமை தாங்க வரமாட்டான் .ஏனெண்டால் என்னை வரலாட்டை  படித்தவன் எப்பிடி வருவான் ?அண்ணா அண்ணா என்டியல் . நான் முள்ளிவாயக்காலில் முடிந்துட்டன் எண்டதும் ஒருத்தனுக்கு குட ஒரு மைனர் அட்டக வரலடாபா .?
நான் கிட்டு மற்ற பொடியோட கதைக்கேக்க அவங்கள் சொல்லுறாங்கள் .தமிழ் சனம ஒரு நன்றி மறந்ததுகள் எண்டு .நீங்களும் முன்னம் எங்களோட செத்திருந்தால் நல்லம் .இப்ப பாத்தியலோ எண்டு .எனக்கும் மேல இருக்க வெக்கமா இருக்கு .அங்க இருந்து குப்பி கடிச்சு எங்க போறது அது தான் சரியான கவலைய கிடக்கு
எனது மக்களே ?
நான் என்டைக்கும் மக்களின் மனதில் வாழும் ஒருவன் தான் என்பதில் எனக் க்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை நான் தன்னலம் பாராது எனது குடும்பம் முழுவதும் அழிந்தபோதும் நின்று போராடினேன் எண்ணி ஒரு வருடத்தில் எல்லாம் தலைகீழ போனதை இட்டு மிக மனம் நொந்து எமனிடம் அனுமதி கேட்டு உங்களுக்கு இதை வரைகிறேன்
என்னினிய புலம்பேர் வாழ் மக்களே
தயவு செய்து எனது பெயரை இயக்கத்தினது நற்பெயரை கேடுக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
நீங்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை ,சிவன் சொட்டு குல நாசம் ஏன்ட மாதிரி மக்களிட்ட இருந்து வாங்கின காசுடா .நாட்டில கன விதவைகள் .அனாதைகள் இருக்கினம் .அதுக்கு எதாவது செய்ய பாருங்க
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
வே.பிரபாகரன்  
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
எமதேசம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக