திங்கள், 11 அக்டோபர், 2010

ஆஹா என்ன அழகு .....

இங்கே பதிவு வலைத்தளமும்  வேறொரு வலைத்தளமும் வெளியிட்ட செய்திகளை தொகுத்து தருகிறேன் .எனது ஆதங்கத்தையும் பதிந்து கொள்கிறேன் .
இந்த அரசியல் யாப்பு விடயத்தில் நாங்கள் மூன்று விடயங்களில் மட்டும் உறுதியாக இருந்தோம். அது குறித்து ஏற்கனவே, திரு. ருத்திரகுமாரன் அவர்களுடன் விவாதித்தும் இருந்தோம். அதாவது, பிரதமருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதமர்களை நியமிப்பது என்றும், அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என மூன்று கண்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும், 20 நியமன உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாம்...................
நாடுகடந்த அரசினை கேலிக்குத்து கமாக பயன்படுத்த தமிழீழ விடுதலை விருமபிகள் விரும்புகிறார்களா?அல்லது மக்களை ஒரு மாஜைக்குள் வைத்திருக்க இவர்கள் ??விரும்புகிறார்களா ?
இதற்கு பல காரணங்கள் என்னும் தலைப்பில் மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கைஎனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை கனடா மற்றும் ஜரோப்பிய நாடுகளிலிருந்து இருந்து வெளியாகும் சில குழப்பவாதிகளின் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை உலகத்தமிழினத்தை விசனமடையவைத்துள்ளது. விடுதலைக்காகவே உழைக்கிறோம் என்னும் விடுதலை வியாபரிகளின் இவ்வாறான தமிழின விரோதப் போக்கானது நொந்துபோயிருக்கும் தமிழ்மக்களை மேலும் மேலும் காயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பொது எதிரிக்கு எதிராய் ஒன்றுதிரண்டு போராடவேண்டிய உலகத்தமிழினம் அதை மறந்து ஒருசில மனிதர்களின் விருப்புக்குள் கட்டுண்டவாறு சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்களா ? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் உருவாக்கும் அளவிற்கு நாடுகடந்த அரசு மீதான அவர்களின் எதிர்வினைகள் நடவடிக்கைகள் , மற்றும் விடுதலைப்புலிகள் எனும் பெயரில் மாறிமாறி வெளிவரும் அறிக்கைகள் என பல்வேறு பட்ட குழப்பங்கள் அமைந்திருப்பதை தமிழ் மக்கள் யாவரும் அறிவர். உண்மையில் இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார் என்பதையும் அனைவரும் அறிந்துகொண்டாலும் அவர்களின் இந்த போக்குக்கு எதிராய் எவரும் குரல் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதுதான் வேதனையான விடையம். இருக்கலாம் ஆனால் இந்தப்போக்கு நீண்டகாலத்துக்கு தொடருமேயானால் தன்னைத் தானே அழித்த ஒரு இனமாக தமிழினம் அமைந்துவிடப்போகிறது என்பதுதான் துர்ரதிஸ்ரவசமானது. நாங்கள் கொடிபிடிக்கலாம், கோசம்போடலாம் ஆனால் கொள்கையில் நேர்மையும், இலட்சியத்தில் பற்றும்,.....................
மற்றைய வலைப்பதிவில் இப்படித்தான் தொடங்குது தொடர்ந்தும்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோர்வே பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட முரளி;  கனடா பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் அமைந்த குழுவினால் தான் நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பு (constitution) வரையப்பட்டது.
யாப்பின் ஒவ்வொரு வரியும் நோர்வே முரளியினால்தான் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.  இந்த நிலையில் வெளிநடப்புச் செய்த முரளி, திருச்செல்வம் போன்றவர்களது எதிர்பார்ப்புகள் தான் என்ன?
  1. இந்த யாப்பு ஒரு அரசாங்கத்திற்கான யாப்பு. ஆனால் ஒரு அமைப்புக்கான (constitution) யாப்பாகவே வரையப்பட்டது. அது அவையினால் அரசவைக்கான (parliament) யாப்பாக மாற்றப்பட்டது. 
  2. நிறைவேற்றுனர் என சொல்லப்பட்டதனை பிரதம மந்திரி ஆக இருக்கவேண்டும் என யாப்பில் கூறப்பட்டிருந்தது. அதே போல் உதவி நிறைவேற்றுனரை உதவி பிரதம மந்திரி என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
  3. நிறைவேற்றுக் குழு என்பதனை மந்திரிசபை என சபை ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் ஒன்றினை அமைக்க ஆணையிட்ட தமிழ் மக்களது எண்ணங்களில் இவர்கள் மண்ணைத்தூவி இதனை ஒரு வெறும் பேரவை என்று சொல்லி இந்த அரசாங்கத்தின் தரத்தினை இறக்கவே முனைந்தனர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ விழிப்பாகவே இருந்து அதனை முறியடித்தனர்.

, எங்களுக்கான சுயநலம் எதுவுமே இல்லை. 'தமிழீழ விடுதலை' என்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இலக்கு எந்த வகையிலும் தடம் புரண்டு விடக் கூடாது என்ற அக்கறை மட்டுமே. நாடு கடந்த தமிழீழ அரசின் அதிகாரம் ஒருவர் கையில் குவிந்திருப்பது அதிக ஆபத்தானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.
பிரதமராகப் பதவி ஏற்பவர் எந்த வகையிலாவது ஏதோ ஒரு சக்தியினால் வளைக்கப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலோ எமது போராட்டம் திசைமாறக் கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும். அல்லது, தனி ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால், இந்த இடத்தை நிரப்பி, நாடு கடந்த தமிழீழ அரசை தொடர்ந்து வழி நடாத்துவது முடியாத காரியமாக மாறிவிடலாம்.
இவர்கள் எல்லாம் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பயந்துகொண்டிருந்தார்களா ?ஏனென்றால் முன்பு அதிகாரம் தலைவர் பிரபாகரனது கரங்களில் தான் இருந்தது??அப்போ நீங்கள் அதிகாரத்தை பன்முகப்படுத்த சொல்லி கேட்டதாக எங்கும் இல்லை ,அப்போ , இப்போ அதிகாரத்தை நான்கு பிரதிப்பிரதமருக்கு பகிர்ந்தளிக்க கேட்பது எதற்காக ?முன்னர்விட்ட தவறை திருத்திக்கொள்ளவா ?விடை ஆம் என்றால் அப்போ நீங்கள் எல்லோரும் ஒரு நயவஞ்சகமான எண்ணத்தோடு தான்  பிரபாகரன் பின்னால் நின்றிர்களா ?நீங்கள் இந்த தேர்தலுக்கு முன் என்ன மக்கள் சேவைகள் செய்திருந்தீர்கள் ?எப்படி குடியுரிமை பெறறீர்கள் ?
பிரதமராகப் பதவி ஏற்பவர் எந்த வகையிலாவது ஏதோ ஒரு சக்தியினால் வளைக்கப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலோ எமது போராட்டம் திசைமாறக் கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும். அல்லது, தனி ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால், இந்த இடத்தை நிரப்பி, நாடு கடந்த தமிழீழ அரசை தொடர்ந்து வழி நடாத்துவது முடியாத காரியமாக மாறிவிடலாம்.
எல்லோரையும் எதோ ஒரு சக்தி வளைத்துவிட்டால் அப்போ என்ன செய்வது?எல்லோரையும் அச்சுருத்தினால் என்ன செய்வது ?இது எதோ உள்குத்தல் மாதிரிஎல்லோ படுது.
பிரான்சில் கலந்து கொண்ட சுவிஸ் உறுப்பினாகளை அங்கு கலந்துகொண்ட சுகிந்தன் தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டதையும், கண்ணசைவில் கட்டுப்படுத்தியதையும் அங்கு கலந்துகொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
சுகிந்தனின் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்த சுவிஸ் பிரதிநிதி ஒருவர் பாரிசில் அதிகார தொனியில் கட்டுப்படுத்தியதையும், அமெரிக்காவில் கலந்து கொண்ட பிரதிநிதி  தொலைபேசியில் மிரட்டப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது. பிறிதொரு...................
நீங்கள் முன்பு தலைவா கண்ணசை என்றீர்கள் ............இப்ப சுகிந்தனின் கண்ணசைவை பார்த்துக்கொண்டிருக்கவா போனீர்கள் ??????தொலைபேசியில் மிரட்டும் போது என்னத்தை பார்த்து கண்டுபிடித்தீர்கள் ?
இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கொண்ட நாம், எமது மக்களுக்கான பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டோம்.....
உங்க போய் எதுக்கு பாதுகாப்பரண் அமைச்சநீங்கள் ?அது முள்ளி வாய்க்காலுடன் முடிஞ்சு போச்சல்லோ .....அப்ப நீங்க என்ன செய்துகொண்டிருந்தனியல் ???
மூன்றாவது நாளான இறுதி நாள் நிகழ்ச்சியின்போது, எமக்கான வாக்குப் பலம் அதிகரித்திருந்தது. அமர்வில் கலந்து கொள்ளாத பல உறுப்பினர்கள் வாக்களிக்கும் அதிகாரத்தை எமக்கு வழங்கினார்கள்.
அது எந்த ஜனநாயகத்தில் இப்படி வருது .அப்ப பரிட்சை எழுதவும் அப்படி பாவிக்கலாமோ?(இதை குதிரை ஓடுவது என்டேல்லோ சொல்லுறது .....)
   . உலக வரலாற்றிலேயே 115 உறுப்பினாகள் கொண்ட நாடாளுமன்றம் ஒன்றில் 48 பேர் மட்டுமே கலந்து கொண்டு பிரதமரையும், சபாநாயகர்களையும் தெரிவு செய்த ஜனநாயக கேலிக் கூத்தும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் அரங்கேறியுள்ளது
முதல்ல நாடுகடந்த அரசே கேலிக்கூத்தேண்டியல் .. இப்ப இதை இப்படி சொல்லுறியள் என்ன நடக்குது இந்த உலகத்தில .தமிழன வச்சு காமடி கீமடி பண்ணலையே ........
தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தனால் கருணா மூலம் கிழக்கை இழந்தோம். நேற்றைய பல நம்பிக்கை மனிதர்கள் இன்று எதிரி முகாமில் எதற்காகவோ சங்கமமாகிவிட்டார்கள்..
ராசா நீ எதோ சொல்ல வர நான் தவறா விளன்கிடுவன் .இப்பிடி கதைக்காதயுங்க

எமக்குள் உருவாகியுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டியவை.
1) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக மக்கள் பிரதிநிதிகள் தெரிவை முழுமைப்படுத்தவில்லை?
2) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக இதுவரை அறிவிக்கப்படாத, ஒத்தி வைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளுக்குத் தீர்வு காண்பதை வேண்டுமென்றே ஒத்தி வைத்துள்ளார்?
3) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக மூன்று உதவிப் பிரதமர்களை நிராகரிக்கிறார்?
4) மக்கள் பிரதிநிதிகள் மூலமான  உதவிப் பிரதமர்கள் தெரிவையும், நியமன உறுப்பினாகள் தெரிவையும் ஏன் நிராகரிக்கிறார்?
5) பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேற நேர்ந்ததற்கான வன்முறைச் சம்பவத்தை திரு. ருத்திரகுமாரன் அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை?
6) உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், சபையை ஒத்தி வைக்காமல், பிரதமராகத் தன்னைத் தெரிவு செய்து கொண்டதையும், சபாநாயகர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் சட்டபூர்வமானது, சம்பிரதாயபூர்வமானது என்று கருதுகின்றாரா?
7) தான் சர்வ வல்லமை கொண்ட பிரதமராக வருவதற்காக, நடைபெற்று முடிந்த அத்தனை அராஜகங்களையும் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் சரியானது என்று ஏற்றுக் கொள்ளுகிறாரா?
இந்தக் கேள்விகளுக்கு திரு. ருத்திரகுமாரன் அவர்கள் தரும் பதிலில்தான் எங்களது எதிர்கால முடிவு உள்ளது என்பதை தமிழீழ மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிருப்தியினாலும், அச்சத்தினாலும் 
அமர்விலிருந்து வெளியேறிய, (புறொக்சி) வாக்குரிமை மறுக்கப்பட்ட
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
மக்கள் பிரதிநிதிகள்

நீங்கள் என்ன முடிவு எடுக்க போறிங்க?ஆக்க பொறுத்தநீங்கள் ஆற பொறுங்க ....தற்கொலை முயற்சிகள் எடுக்கதயுங்க ..... இவர்களது எண்ணங்கள் யாதெனில்,
  • பிரதமரைக் கைப்பற்றக்கூடிய நபர் தம்மிடம் இல்லை (போன அவையில் ஜெயானந்தமூர்த்தியை, ருத்திரகுமாருக்கு போட்டியாக முன்மொழிந்து வெறும் எட்டு வாக்குகளே பெற்று படுதோல்வி கண்டவர்கள்) எனவே உதவிப்பிரதமர்களையும், மந்திரி சபைகளையும் தாமே கைப்பற்றவேண்டும் என்பதேயாகும். அதற்காகவே நான் முன்பு கூறியது போல் இவர்கள் யாப்பினை வரையும் போதும் மிகவும் பிடிவாதமாக இப்படித்தான் இருக்கவேண்டும் என தீர்மானித்தனர். ஆனால் அது கைகூடவில்லை. நா.க.த.அ இன் பிரதிநிதிகள் மிகவும் தெளிவாகவே இருந்தனர். அதாவது எமது தற்போதைய நிலையில், எமது போராட்டம் பலமிழந்து, குரலிழந்து இருக்கும்போது எமக்கு ஒரு பலமான இந்த மேற்குலகிற்கு உகந்த முறையிலான ஜனநாயக முறையில் ஒரு கட்டமைப்பை அமைக்கவே இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவானது என்பதிலும், அதற்கு ஒரு பலமான தலைமை வேண்டும் அந்தத்தலைமை பலமான ஒரு அமைச்சரவையையும் வைத்திருக்கவேண்டும் என்பதிலும் மிகவும் தெளிவாகவே இருந்தனர். (எமக்குத் தெரியாததா எமது பிரச்சனைகள், அமைதி வேண்டிப்போகும் கோவில்களிலும் பிரச்சனைப்படுபவர்கள்தான் எம்மவர்கள். நண்டுக்கதை தான் இங்கும் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்) மேலாக எமது யாப்பினை வைத்துத்தான் இந்த உலகம் எம்மை யார் எனத் தீர்மானிக்கும். ஒரு அமைச்சரவையை தெரிவு செய்ய முடியாத ஒரு பிரதம மந்திரியை இந்த உலகம் எப்படிப்பார்க்கும்? பிரதமரை நம்பாமல்தான் அரசவை உள்ளது. எப்படி தாம் இவரை நம்பி ஒரு காரியத்தினை, அதாவது தமிழீழ விடுதலையின் எதிரிகளுக்கு எதிரான காரியங்களை இந்தப்பிரதமருடன் இணைந்து செய்வது என்றுதானே பார்க்கும். ஒரு பலமில்லாத தலைவராகத்தானே நா.க.த.அ இன் தலைவரைப்பார்க்கும். பலமான தலைவரை கொண்டிருக்காத ஒரு அரசாங்கத்தினால் எதுவுமே செய்யமுடியாது என்பதுதான் உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து கொண்ட அவையினர் முரளி, திருச்செல்வம் போன்றவர்களின் எண்ணங்களில் மண்ணைவாரிப் போட்டனர்.
ஆனால் இதுமட்டுமல்ல இவர்களது வெளிநடப்புக்குக் காரணம்?
  • அதாவது, யாப்பினில் மந்திரிசபை (நிறைவேற்றுக் குழு) உறுப்பினர்களின் நீக்கம் என்ற தலையங்கத்தின் கீழ் 3வது சரத்தும் அதன் மாற்றமுமே. இந்த சரத்து என்ன சொல்கிறது என்றால், மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் மந்திரிசபை முழுவதையும் கலைக்கலாம் அல்லது மந்திரிகள் யாரையும் நீக்கலாம், அல்லது பிரதிநிதிகள் யாரையும் நீக்கலாம் என்பதைத்தான் சொல்கின்றது.
இங்கு தான் இவர்களது கபடத்தனம் தெரிகின்றது.
  • இந்த யாப்பினை வரைந்த போது இவர்களது எண்ணம், தாம் தான் மந்திரிசபையை தெரிவு செய்யப்போகின்றோம் என்பதே. இப்படி ஒரு சரத்து யாப்பில் இருந்தால் தமக்கு இலாபமே என்பதுதான் இவர்களது எண்ணமும். அதலால்தான் இவர்கள் எவருமே இந்த சரத்தின் மீது மாற்றம் கொண்டுவர வேண்டும் என முன்னரே எழுதி அனுப்பவில்லை (இப்படி எழுதி அனுப்பினால் தான் அவையினில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும், அதுதான் ஒரு பாராளுமன்றத்தின் வழக்கம்). ஆனால் நடந்ததோ வேறு.இவர்கள் எதிர்பார்த்தது போல் மந்திரிசபையை அமைக்க முடியாது என்று முடிவானபோது திகைத்துப் போனார்கள். இது நடந்தது இரண்டாம் நாள் அமர்வின் இறுதி நேரத்தில். அன்று இரவிரவாக 

    [‘
    ஒருசிலர்’ (புனிதமான மாவீரர்களது கனவுகளாலும், கல்லறைகளாலும் கட்டப்பட்ட அனைத்துலக செயலகத்தின் புனிதத்தன்மையை கெடுக்கும் வண்ணம் செயற்படும் ஒரு சில விசமிகள் தான் இந்த ஒருசிலர்] இவர்களது அரசியல் ஆலோசகரான, தமிழ் வலையமைப்பொன்றின் கதாநாயகனுடன் ஆலோசனை நடாத்தினார்கள். 
  • மூன்றாம் நாள் அதிகாலை ஒரு திட்டத்துடன் அவர்களது விடியற்பொழுது விடிந்தது. அதாவது நான் மேற்குறிப்பிட்ட 3வது சரத்து மாற்றப்படல் வேண்டும் என்பதே. அதாவது மூன்றிலிரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் இந்த மந்திரி சபையைக் கலைக்கலாம் என்பதனை பெரும்பான்மை (50 வீதத்திற்கு கூடிய) வாக்குகளால் மந்திரிசபை கலைக்கப்படலாம் என்று மாற்ற வேண்டும் என்பதே இவர்களது திட்டம். 
  • இத் திட்டத்தினை நிறைவேற்ற மூன்றாம் நாள் காலை சுறுசுறுப்பாக வேலைகள் நடந்தது.  இவர்களது தெரிவிலிருந்து இலண்டனிலிருந்து வந்த நாடு கடந்த தமிழீழ அரசின் பெண் பிரதிநிதியான ஒருவர் ,பிரான்சில் (FRANCE) நடந்த Video Conference இல் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார். அங்கு அவரையும் அழைத்துச் சென்று பிரான்ஸ் பிரதிநிதிகள் சிலருடன் (ஈழநாடுஉட்பட) ஒரு Skype/Telephone (Conference) மாநாடே நடந்தது. இவர்களது சொல்லுக்கு ஆமாப்போடும் எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த மூன்றாவது சரத்து மாற்றப்பட வேண்டும் என்று. தொலைபேசி அழைப்புக்கள் சென்றன. 
  • தமது சுய இலாபத்திற்காக இந்த சரத்தினை யாப்பில் இடம்பெற விட்டுவிட்டு தம்மை மீறி சில காரியங்கள் இடம்பெற்றவுடன் இதனை இவர்கள் மாற்ற முற்பட்ட போது, இந்த அவையின் சட்டதிட்டங்களை இவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது இவர்களது அவசரத்தில் அதனைக் கவனிக்கவில்லை என்றே கூறவேண்டும். அதாவது ஒரு யாப்பினில் ஏதாவது திருத்தம் வேண்டும் எனில் நாம் முன்னரே எழுத்து மூலமாக எழுதி அனுப்பியிருந்திருக்க வேண்டும். முதல் இரண்டு நாட்களும் யாப்பில் திருத்தங்களை சபாநாயகருக்குப் பக்கத்தில் நின்று நடாத்திக்கொண்டிருந்த நோர்வே முரளி 28ம் திகதி மாலை ஒரு மணிக்கு பின்னர் (இதுவே பிரதிநிதிகளுக்கு திருத்தங்களை எழுதி அனுப்புவதற்கு கொடுக்கப்பட்ட இறுதி நாள் எனக் கூறப்பட்டது) வந்த எந்த திருத்தங்களையும் தனது அட்டவணையில் (நிகழ்ச்சிநிரலில்) சேர்த்துக்கொள்ளவில்லை. அப்படியிருந்தும் இவர்கள் தமது இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற முடியும் என்று எப்படித்தான் தீர்மானித்தார்களோ தெரியவில்லை

    .
  • பிரான்சிலிருந்து இலண்டன் இளையவர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அவரது சிங்கத்தின் குகைக்குள் கர்ச்சித்தஜெயானந்தமூர்த்தியை (அந்த ஜெயானந்தமூர்த்தியைதெரிவு செய்யப்பட்டதிலிருந்து எந்தக்கூட்டத்திற்கும் வந்ததில்லை. இவர் நா.க.த.அ இன் மீது நம்பிக்கையுமற்றவர் குறைப்பிரசவம் எனக்கூறியவர், மேலாக இவர் இந்த அவை இருப்புகளுக்கு சமூகமளித்திருக்கவுமில்லை, இவரது வாக்கினை மற்றவர்கள்தான் பாவித்து வாக்களித்தனர்) தொலைபேசியில் அழைத்தார். இப்படியாக USA- LONDON- FRANCE என கைத்தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன. 

    இதில் முக்கியமாகச் சொல்லவேண்டியது, 

    ஒரு சிலர் இவர்களது தொலைபேசி அழைப்புகளுக்கு, ‘எம்மை சுயமாக சிந்தித்து செயலாற்ற விடுங்கள்என்று கூறி மறுப்பும் தெரிவித்துவிட்டனர். 
  • மூன்று நாட்களாக தொடர்ந்த யாப்பின் மீதான தொடர் விவாதங்கள் நேரம் போதாமையினால் திருத்தம் செய்யவேண்டி பிரதிநிதிகளால் எழுத்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட விடயங்களைத் தவிர மற்றைய விடயங்களை சபாநாயகர் அவர்கள் விரைவாகவே தாண்டிச் சென்றார். 

    தாம் எதிர்பார்த்த 3ம் சரத்தினை சபாநாயகர் தாண்டிச் சென்றதும்இலண்டனிலிருந்தும், பிரான்சிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் இவர்களால் அனுப்பப்பட்டவர்கள் மாறி மாறி சபாநாயகரிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு சபாநாயகர் தம்மிடம் திரு. முரளி அவர்கள் எழுதித்தந்த தீர்மானங்களையும், அதற்குரிய பெயரில் உள்ளவர்களையும் தான் பேச அனுமதிப்பார் எனக் கூறிவிட்டார். 

    இவர்கள் வேண்டுமானால் இச்சரத்தினை மாற்றுவதற்கு அடுத்த அமர்வுகளில் எழுத்து மூலமாக எழுதி அனுப்பலாம் என்றும் கூறிவிட்டார். 

    இதுதான் அங்கு நடந்தது.
இதுவே இவர்களின் விரக்திக்கும், வெளிநடப்புக்கும் காரணம் ஆகும். 

யார் இவர்கள்?
  • இவர்கள் எதிரியை விட மிக மோசமானவர்கள், நாம் ஏற ஏற இழுத்து விழுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு திரைமறைவானதிட்டத்துடனேயே (hidden agenda) (அதாவது தம்மால் வழிநடாத்தக்கூடியவர்களை -ஆமா போடுபவர்களை) நா.க.த.அ இனுள் அனுப்பி, தாம் பின்னிருந்து அவர்களை இயக்கி நா.க.த.அரசினை செயலிழக்கச்செய்வதே இவர்களது திட்டம், ஏனெனில் நா.க.த.அரசு வளர்ந்தால் தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்தினால் தான் இவர்களது புத்தி இப்படிப் போகின்றது) 
  • நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டு, தாம் தான் தமிழ்த் தேசியத்தின் சார்பாக நிற்கின்றோம் என உங்களை ஏமாற்றி உங்களிடம் வாக்குக் கேட்டவர்கள் இன்று அதை மறந்து அழிவுப்பாதையினை நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர். எனவே இனிமேலாவது இவர்களது ஏமாற்று வார்த்தைகளுக்கு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். இனிவரும் தேர்தல்களில் நீங்கள் வாக்களிக்கும்போது, நாடுகடந்த தமிழீழ அரசின்மீது நம்பிக்கை வைத்து யார் வேலை செய்யக்கூடியவர்கள், யார் தகுதியானவர்கள், யார் உங்களது நம்பிக்கையை வீணடிக்காமல் நா.க.த.அரசினை வளர்ப்பதற்கு வேலை செய்யக்கூடியவர்கள், யார் திரைமறைவான திட்டங்கள் (hidden agenda) இல்லாமல் உங்களிடம் வாக்குக்கேட்க வருகின்றார்கள் என இனம் கண்டு வாக்களியுங்கள். அதுவே எமது மக்களுக்கும், அவர்களது விடிவுக்கும் ஒரு வழி வகுக்கும்.
என வேண்டுகின்றார் இலண்டனிலிருந்து வேந்தன்
வடிவேலுவின் பாணியில் சொல்றதேண்டால்
இப்பவே கண்ணக்கட்டுது ..........................................
நன்றி
கண்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக